search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை கைதி"

    • போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.

    இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக ஆரோக்கியசாமி மனநலம் பாதிக்கப்பட்டு தனக்குத்தானே பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்.
    • இன்று காலை ஆரோக்கியசாமி சேவிங் ரேசர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 58). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொலை செய்து விட்டார். இதையடுத்து ஆரோக்கிய சாமியை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஆரோக்கியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பரோலில் வீட்டுக்கு வந்து சென்றார். அதன் பிறகு அவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஆரோக்கியசாமி சேவிங் ரேசர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தற்செயலாக பார்த்த சக கைதிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த ஆரோக்கிய சாமியை மீட்டு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 20 நாட்களாக சத்தியராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
    • தனிப்படை போலீசார் விழுப்புரத்துக்கு விரைந்து சென்று சத்தியராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 33). இவர் மீது கொலை, ஆதாய கொலை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சத்யராஜ், திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7- ம் தேதி 2 நாட்கள் போலீஸ் காவலுடன் கூடிய பரோலில் மதுக்கூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இது குறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சத்யராஜை பிடிக்க பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸ்காரர்கள் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    கடந்த 20 நாட்களாக சத்தியராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் சத்தியராஜ் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விழுப்புரத்துக்கு விரைந்து சென்று சத்தியராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×