என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்- டி.ஐ.ஜி. மீது வழக்குப்பதிவு
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story






