search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா நினைவு தினம்"

    • தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி., வெற்றிச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதாநவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கும் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    • வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.
    • அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம் வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ,சாமளாபுரம் பேரூராட்சிமன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி , வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் முன்னாள் அறங்காவலர் அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
    • அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், சிவன்மலை ஊராட்சித்தலைவர் கே.கே.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

    இதில் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம், ஆதித்தமிழர் பேரவையின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சிவன்மலை கோவில் ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.
    • அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து அமைதி பேரணியாக சென்றனர். அவர்கள், காந்தி ரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி. சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநேல்லிபாபு பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம்,ஜெகநாதன், சுப்புராயன் , நிர்வாகிகள் அப்துல் மாலிக், யுவராஜ் சிகாமணி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், , பகுதிச் செயலாளர்கள் எம்.பி. ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான பெர்ரி தலைமையில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சிவருத்ரையா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
    • அஞ்சலி செலுத்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளான பிப்ரவரி (3-ந் தேதி) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், பிப்ரவரி 3-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×