அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் சமபந்தி விருந்து

வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி. 
அண்ணா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி. 
Published on

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் வட்டம் வி.அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு பொதுவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ,சாமளாபுரம் பேரூராட்சிமன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி , வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் முன்னாள் அறங்காவலர் அய்யம்பாளையம் குருசாமி, கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com