என் மலர்
நீங்கள் தேடியது "VAO"
- கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
- புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசுதா (வயது 38). இவா் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ஜெயசுதா வீட்டின் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் ஜெயசுதா அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெட்டிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது.
- மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
பாஞ்சாகுளம்:
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளிச் சிறுவர்களிடம் பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என கடை உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் மகேசுவரனின் கடைக்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவின் கீழ் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- சுனில் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலி பணி ஆணை தொடர்பாக நடுவட்டம் இன்ஸ்பெக்டர் ராம்பதி, கூடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் ஆகியோர் நேற்று சுனிலை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாடந்தொரை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த சுனில், சேரம்பாடியை சேர்ந்த சரண்யா என்ற பிரேமா, ஊட்டியை சேர்ந்த நான்சி ஆகிய 2 பெண்களிடம் போலியான அட்டை வழங்கியும், அவர்கள் மூலமாக அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.
மேலும் கிராம நிர்வாக அலுவலரின் சீல் வைத்த பணி நியமன ஆணையையும் அவர் வழங்கியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த பணி நியமன ஆணை போலியானவை என்று தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை பந்தலூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் சுனிலை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
- கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
- ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வேத நாராயணப்பேரி மற்றும் அலவந்தன் குளங்களுக்கு செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன். அந்த கிராமத்தின் தலையாரி ரமேஷ்.
கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பன்னீர் பேரி குளம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை பார்க்க இவர்கள் 2 பேரும் சென்றனர். அப்போது அங்கிருந்த விவசாயிகளான மேல கடையநல்லூர் கிருஷ்ணன்கோவில் கீழத்தெருவை சேர்ந்த பிரான்சிஸ்(வயது 35), ஆல்பர்ட்(45) ஆகியோர் வேத நாராயணப்பேரி மற்றும் அலவந்தன் குளங்களுக்கு செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் 2 பேரும், பிரான்சிஸ், ஆல்பர்ட் ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் கூறாமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.க்கள்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விபரம் வரு மாறு:- (அடைப்புக்குறியில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ள பகுதிகள்)
சுதாராணி (அல்லம் பட்டி), ராஜு (விருதுநகர்), உமா கணேசன் (கோட்டைப் பட்டி), சந்திரசேகரன் (ரோசல்பட்டி), கருப்பசாமி (கூரைக்குண்டு), ராஜலட்சுமி (முத்துராமன் பட்டி), செல்வி (சின்ன மூப்பன் பட்டி), லதா (நாட்டார்மங்கலம்), சர்மிளா (கோவில் வீரார் பட்டி), ராமு கார்த்திக் ராஜா (கடம்பன்குளம்), கார்த்தி கேயன் (சீனியாபுரம்), பார்த்த சாரதி (எல்லிங்க நாயக்கன் பட்டி), விஜயகுமார் (மெட்டுக்குண்டு), சுப்பு லட்சுமி (ஆமத்தூர்), லாவண்யா (வாய்பூட்டான் பட்டி), மதன்குமார் (பெரிய பேராளி), முத்துமணி (மருளூத்து), கார்த்திகேயன் (துலுக்கப்பட்டி), பெத்துராஜ் (வலையப்பட்டி), கற்பக செல்வி (எண்டப்புளி), கதிரேசன் (செங்கோட்டை), சமயன் (அப்பைய நாயக்கன் பட்டி), பழனி (சின்ன வாடி), மாரிமுத்து (ஒண்டிப்புலி நாயக்கனூர்) ஆகிய 24 கிராம நிர்வாக அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் உடனே தற்போதுள்ள பொறுப்பி லிருந்து விடுவிக்கப்பட்டு நாளை (1-ந் தேதி) முதல் புதிய பகுதிகளில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவை அருப்புக்கோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கல்யாண் குமார் பிறப்பித்துள்ளார்.






