என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கிராம நிா்வாக அலுவலரிடம் தாலிச்செயின் பறிப்பு -  மர்மநபர்களுக்கு வலைவீச்சு
    X

    காேப்புபடம்

    பெண் கிராம நிா்வாக அலுவலரிடம் தாலிச்செயின் பறிப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

    • கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
    • புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசுதா (வயது 38). இவா் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ஜெயசுதா வீட்டின் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் ஜெயசுதா அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×