search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லணை"

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
    பூதலூர்:

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையிலிருந்து கடந்த 27ம் தேதி மாலை காவிரியில் திறக்கப்பட்டது.

    கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் செய்யப்பட்டு வரும் பணிகள் முடிவடையாத நிலையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என். நேரு கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதால் சற்று தாமதமாக தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கல்லணை கால்வாயில் முழுவதுமாக தண்ணீர் திறக்கப்படவில்லை.காவிரி மற்றும் வெண்ணாற்றில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலையில் இருந்து கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் 3503 கன அடியும், வெண்ணாற்றில் 4300 கனஅடியும், கொள்ளிடத்தில் 822 கன அடியும் தண்ணீர் திறந்து வெளியேறி கொண்டுள்ளது.

    கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி தலைப்பிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடமுருட்டி ஆற்றின் திருக்காட்டுப்பள்ளி தலைப்பில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை லை நிலவரப்படி 117.02 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து 3037 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் நீர் 10 ஆயிரம் கன அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஆறுகளிலும் பணிகளை முடித்து முழு அளவு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமேவிரைவாக கடைமடைக்கு தண்ணீர் சென்று அடையும். அதன் பின்னர் கிளை ஆறுகள் வாய்க்கால் களில் தண்ணீர் திறந்து விட்டு குறுவை விவசாய பணிகள் மும்முரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.
    டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனை,  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.

    கடந்த 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்.. அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்
    மேட்டூர் அணை திறக்கப்பட்டதை முன்னிட்டு கல்லணை கீழ்ப்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    பூதலூர்:

    தமிழக காவிரி பாசன பகுதிகளுக்கு இந்திய விடுதலை பெற்றதற்கு பின் முதல் முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

    மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால் நடப்பாண்டு கூடுதலாக சாகுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    காவிரி பாசன பகுதிகளில் உள்ள தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளுக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை வேளாண் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


    இதற்கிடையே கல்லணை அருகே ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    கல்லணையில் இருந்து 200 மீட்டர்தொலைவில் 400 மீட்டர் நீளமுள்ள அடப்பன்பள்ளம் கீழ்ப் பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. நவீன எந்திரங்கள் மூலம் கான்கிரீட் போடும் பணிகள் கல்லணை கால்வாய் கரைகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்தடைவதற்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிகள் விரைவாகவும், சரியாகவும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. 

    கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் மதகு பாலங்கள் புது வர்ணம் பூசப்பட்டு காட்சி அளித்துக் கொண்டுள்ளன.

    ஷட்டர்கள் சரியாக இயக்குவதை அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர். மேட்டூர் அணையில் நேற்று திறக்கப்பட்ட தண்ணீர் வரும் 27-ம் தேதி இரவு அல்லது 28-ம்தேதி அதிகாலை கல்லணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    கல்லணைக்கு மேட்டூர் அணை தண்ணீர் வந்து சேருவதை பொறுத்து கல்லணை திறப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×