search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollidam Bridge"

    முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி- கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

    கொள்ளிடம் பாலம், தற்போது முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.



    அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்? அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண் டும்.

    ஆகவே, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்திட வேண்டும் எனவும், அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட சீரமைப்புப் பணிகளை இனியும் தாமதப்படுத்தாமல், மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் கருத்து வருமாறு:-

    கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 10-15 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    மக்களை வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MukkombuDam #MKStalin

    கல்லணை கொள்ளிடம் பாலத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். #Kollidambridge
    பூதலூர்:

    கல்லணையில் இருந்து தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறந்து வெளியேறிக் கொண்டுள்ளது. கல்லணையை பார்ப்பதற்காக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அதற்கேற்பு போலீசாரும் பொதுப்பணித்துறையினரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் செயல்பட்டுவந்தனர்.

    பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாலத்தில் எட்டி பார்க்காதீர்கள், செல்பி எடுக்காதீர்கள், ஆற்றில் இறங்காதீர்கள் என்ற அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போல் கல்லணையை பார்க்கும் ஆவலில் திருச்சி மற்றும் தஞ்சை பகுதியில் இருந்து வருபவர்கள் கார்கள், இரண்டு சக்கர வாகனங்களை இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் பாலத்தில் வந்து விடுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    கல்லணையில் ஆங்காங்கு ஆற்றில் இறங்குவது ஆபத்தானது, செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். காற்றும் வேகமாக வீசும் நிலையில் கொள்ளிடம் பாலத்தில் நின்று இளம் பெண்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசாரும், அதிகாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  #Kollidambridge




    மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kollidambridge
    சென்னை:

    திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தில் 18-வது தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அப்பகுதி பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அப்பாலத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்த பிறகு பாலம் முற்றிலும் அகற்றப்படும் என்றார்.

    இது தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்து மட்டும் தடை செய்துவிட்டு அ.தி.மு.க. அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.

    மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kollidambridge

    ×