என் மலர்
நீங்கள் தேடியது "போலீசா விசாரணை"
- இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம்,சரூர் நகர், வெங்கடேஸ்வரா காலனி சேர்ந்தவர் 55 வயது தொழிலதிபர். 23 வயதுடைடைய இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த பல்விந்தர் சிங் என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது. பல்விந்தர் சிங் காதலியை அடிக்கடி சந்தித்து செல்போனில் பேசி வந்தார்.
இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பல்விந்தர் சிங் ஆத்திரமடைந்தார். துப்பாக்கியை வாங்கிக்கொண்டு நேராக தொழிலதிபர் வீட்டிற்கு வந்தார்.
தொழிலதிபருக்கு போன் செய்து வீட்டுக்கு வெளியே வரவழைத்தார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தொழிலதிபரை நோக்கி சுட்டார். இதில் தொழிலதிபரின் கண்ணில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- வெட்டிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை திருவொற்றியூரில் மாமூல் தர மறுத்ததால் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற கணவருக்கும் சராமரி வெட்டு விழுந்துள்ளது.
வெட்டிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
போதையில் மாமூல் கேட்டு மிரட்டிய நிலையில், தர மறுத்ததால் வெட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கயல்விழி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மோவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கயல்வேந்தன். அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (29). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகியது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கயல்விழி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். அவர் கையில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து காணப்பட்டது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கயல்விழி மாமனார், மாமியார் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆனால் கயல்விழி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கயல் விழி தந்தை வீரமுடையான் நத்தத்தை சேர்ந்தஅருள் பிரகாசம், தாய் மகாலட்சுமி ஆகியோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதில் தனது மகளை அவரது மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதி ஆகியோர் கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், அவர்கள் தனது மகளை அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 4 வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீபாவளிக்கு முன்பாக தைத்துக் கொடுத்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை.
- எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்சாமி (வயது 53) . இவர் தனது மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இவர் பெரிய ஏற்றுமதி பனியன் நிறுவனங்களிடமிருந்து துணிகளை பெற்று ஆடையாக தைத்து கொடுக்கும் கார்மெண்ட்ஸ் சார்பு தொழில் செய்து வந்தார்.
இவர் திருப்பூரில் இயங்கும் ஒரு பனியன் நிறுவனத்திற்கு பல விதமான ஆடைகளை தைத்துக் கொடுத்து கூலித்தொகை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் தைத்து கொடுத்த துணிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
தொடர்ந்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் அவரிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வெளியே நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் வராததால் அடுத்தடுத்து தொழில் செய்ய முதலீடு இல்லாமலும்,கடன் பெற்றவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் கடும் மன உளைச்சலில் இருந்தார். பலமுறை தனக்கு சேர வேண்டிய பணத்தை பனியன் நிறுவனத்திடம் கேட்டும், அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பார்த்திபன் சாமி தனது சாவுக்கு தனியார் பனியன் நிறுவனம் தான் காரணம் , அவர்களிடம் வேறு யாரும் ஆடைகள் தைத்து ஏமாற வேண்டாம் , அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் பெயரை கூறி அவர்தான் தனது சாவுக்கு காரணம் என வீடியோ பதிவிட்டதுடன், அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் பார்த்திபன்சாமி பேசுகையில்,
என் சாவுக்கு காரணம் 2 பேர். அவர்களை சும்மா விடாதீர்கள். நான் கட்டிடத்துக்கு ரூ. 60,000 வாடகை பாக்கி கொடுக்க வேண்டியது உள்ளது. ரூ.1.50 லட்சம் பணம் வந்திருந்தால் நான் தப்பித்திருப்பேன். நொச்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் யாரும் பிசினஸ் செய்ய வேண்டாம்.
தீபாவளிக்கு முன்பாக தைத்துக் குடித்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை. பணத்தை கேட்டு நடையாக நடந்தேன், இன்று போடுகிறோம் நாளை போடுகிறோம் என ஏமாற்றிவிட்டே இருந்தார்கள்.
எனது சட்டை பாக்கெட்டில், பேண்ட் பாக்கெட்டில் எனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து லெட்டர் எழுதி வைத்துள்ளேன். அவர்களது போன் நம்பரையும் எழுதி வைத்துள்ளேன். அதை போலீசில் எடுத்துக் கொடுங்கள். எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது. கூட இருந்து கொண்டே கழுத்தை அறுத்து விட்டார்கள். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை, பொய்யும் பேசவில்லை என அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.
- தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் வசிப்பவர் செந்தில் (40). இவர் அதே ஊரில் தனது வீட்டின் முன்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
செந்தில் இல்லாத சமயங்களில் இந்த கடையை அவரது மனைவி மோனிகா (35) கவனித்து வந்தார். நேற்று மதியம் மோனிகா கடையில் இருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதாகவும், குடிக்க தண்ணீர் கொடுக்குமாறும் கேட்டார். உடனே மோனிகா தண்ணீர் எடுப்பதற்காக பின்புறம் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அந்தசமயத்தில் தண்ணீர் கேட்ட நபர், கல்லாபெட்டியில் இருந்த பணத்தை லாவகமாக திருடி தப்பிச் சென்று விட்டார்.

மோனிகா தண்ணீர் எடுத்து வந்தபோது அங்கிருந்த நபரை காணவில்லை. பின்னர் தனது கடையின் கல்லாப்பெட்டியை சோதித்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதுபற்றி மோனிகா தனது கணவர் செந்திலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடைக்கு நேரில் வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.
தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் அடையாளம் தெரியாமல் இருக்க முக கவசம் அணிந்து வந்துள்ளார். செல்போன் கடையை பல நாட்களாக நோட்டமிட்ட நபர், தண்ணீர் கேட்பது நடித்து மோனிகாவின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திருடிய மர்ம நபர் அதே பகுதியைச் சேர்ந்தவரா, அல்லது வேறு எங்காவது இருந்து வந்து கைவரிசை காட்டினாரா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி துணை கமிஷனர் ஆலோசனையின் பேரில் பொன்னேரி பழவேற்காடு சாலை திருப்பாலைவனம் பஜாரில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவை சேர்ந்த முசாமின் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்ததில் பொன்னேரி தாயுமாண் செட்டி தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் பெருலால் (28) என்பவர் கடையில் பதுக்கி வைத்து அங்கிருந்து கிராமங்களில் உள்ள கடைகளுக்கு முசாமின் மூலம் இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்து கடையில் பதுக்கி வைத்த 65 கிலோ குட்கா, விற்பனை செய்த 65 கிலோ குட்கா என மொத்தம் 130 கிலோவை திருப்பாலைவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






