வீடியோ: காதலிப்பதை தடுக்க அமெரிக்கா அனுப்புவதா? காதலியின் தந்தை மீது துப்பாக்கி சூடு

இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
வீடியோ: காதலிப்பதை தடுக்க அமெரிக்கா அனுப்புவதா? காதலியின் தந்தை மீது துப்பாக்கி சூடு
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம்,சரூர் நகர், வெங்கடேஸ்வரா காலனி சேர்ந்தவர் 55 வயது தொழிலதிபர். 23 வயதுடைடைய இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த பல்விந்தர் சிங் என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது. பல்விந்தர் சிங் காதலியை அடிக்கடி சந்தித்து செல்போனில் பேசி வந்தார்.

இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பல்விந்தர் சிங் ஆத்திரமடைந்தார். துப்பாக்கியை வாங்கிக்கொண்டு நேராக தொழிலதிபர் வீட்டிற்கு வந்தார்.

தொழிலதிபருக்கு போன் செய்து வீட்டுக்கு வெளியே வரவழைத்தார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தொழிலதிபரை நோக்கி சுட்டார். இதில் தொழிலதிபரின் கண்ணில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com