என் மலர்
நீங்கள் தேடியது "சிக்ஸ்"
- ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
- ரோகித் சர்மா 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் உள்ளார்.
ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இச்சாதனை பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (351 சிக்சர்) வசம் இருந்தது. அவரை ரோகித் சர்மா நேற்று முந்தினார்.
38 வயதான ரோகித் சர்மா இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உள்பட 11,427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 352 சிக்சரும், 1,071 பவுண்டரிகளும் அடங்கும்.
•ரோகித் சர்மா அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 சிக்சர் விளாசியுள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் தான்.
• ஓராண்டில் அதிக சிக்சர் எடுத்தவர் என்ற சிறப்பும் அவரிடமே (2023-ம் ஆண்டில் 67 சிக்சர்) உள்ளது.
• உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராகவும் (54 சிக்சர்) வலம் வருகிறார்.
•இதுவரை 150 பவுலர்களின் பந்தில் சிக்சர் அடித்திருக்கிறார். அவர் 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலர் வெஸ்ட் இண்டீசின் மர்லன் சாமுவேல்ஸ் ஆவார். இனியும் அடிக்கமுடியாது. ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
•ஒரு நாள் போட்டியில் 1971-ம் ஆண்டு முதல் முறையாக சிக்சர் அடிக்கப்பட்டது. ரோகித் சர்மாவுக்கு முன்பாக அதிக சிக்சர் அடித்த சாதனை மொத்தம் 18 வீரர்களிடம் மாறியிருக்கிறது. கடைசியாக அப்ரிடியிடம் இச்சாதனை 2010-ம் ஆண்டில் சென்றது. அவர் சிக்சர் மன்னர் அரியணையில் 5,641 நாட்கள் இருந்தார்.
இனி ரோகித் சர்மா 'சிக்சர் கிங்'காக தொடருவார். இப்போது விளையாடும் வீரர்களில் ரோகித் சர்மாவை தவிர்த்து பார்த்தால், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (182 சிக்சர்), இந்தியாவின் விராட் கோலி (159 சிக்சர்) மட்டுமே 150-க்கும் அதிகமாக சிக்சர் அடித்துள்ளனர். எனவே ரோகித் சர்மாவின் சாதனையை தகர்ப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் 40 சிக்சர்கள் அடித்துள்ளார்.
- அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் 40 சிக்சர்கள் அடித்து சீசனின் சூப்பர் சிக்ஸர்கள் விருதை நிக்கோலஸ் பூரன் வென்றார்.
அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்து நிக்கோலஸ் பூரனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.
- இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
- சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.
குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.
இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு துபே கூறினார்.
- சிக்ஸ் அடித்தால் அவுட் என ஏகப்பட்ட விதிமுறைகள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் உள்ளது.
- கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது பெருமைக்குரிய விஷயம்.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு மிக பிரபலமானது. இங்கு கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை விட தெருக்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களே அதிகம்.
ஸ்ட்ரீட் கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்த விளையாட்டை இந்தியாவில் விளையாடாதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் அதிகம் உள்ள இடங்களில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடப்படுவதால் கிரிக்கெட்டை விட இங்கு விதிமுறைகள் ஏராளம்.
3 பந்துகளை தொடர்ச்சியாக விட்டால் அவுட். ஒன் பிட்ச் கேட்ச் அவுட் என ஏகப்பட்ட விதிமுறைகள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் உள்ளது.
ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் சிக்ஸ் அடித்தால் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்களை பந்துகள் சேதப்படுத்தும். அதனால் சிக்ஸ் அடித்தால் அவுட் எனும் விதிமுறை ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் முக்கிய விதிமுறையான சிக்ஸ் அடித்தால் அவுட் என விதிமுறையை பிரபல கிரிக்கெட் கிளப் விதித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் 234 ஆண்டுகள் பழமைவாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் கிளப்பான சௌத்விக் அண்ட் ஷோரேஹம் கிளப்பில், வீரர்கள் சிக்சர்கள் விளாச தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் சிக்சர் அடித்தால் ரன் இல்லை எனவும் 2வது சிக்சர் அடித்தால் அவுட் என புதிய விதிமுறை அந்த கிளப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீரர்கள் சிக்சர்கள் விளாசுவதால் மைதானத்திற்கு அருகே உள்ள தங்கள் வீடுகளில் அடிக்கடி சேதம் ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தொடர்ச்சியாக புகாரளித்து வருவதால் இந்த முடிவு என அந்த கிளப் விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம் சிக்ஸ் அடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு கிளப்பில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.






