என் மலர்
நீங்கள் தேடியது "kannagi"
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகி, கோவலன், மாதவி கதாபாத்திரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?. கதையமைப்புப்படி அவர்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பது சரிதானா என ஒரு சிறிய கலந்துரையலாடலை காணலாம்.
கோவலனுக்கெல்லாம் கண்ணகிதான் கிடைப்பார்களோ?
மனைவி இருக்கும்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல்வயப்படுவது என்பது எவ்வளவு பெரிய துயர். அது கண்ணகி காலத்தில் இருந்தாலும் சரி, தற்போதைய 21ம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி. நாம் அன்பு கொண்டிருக்கும் ஒருவர், வேறு ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறார் என தெரியவந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நாம் காதல் செய்யும் ஒருவர், நம்மை காதலித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறலாம். ஆனால் அவர்கள் வேறு ஒருவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது? இந்த உணர்வுதான் கண்ணகிக்கும் இருந்திருக்கும்.
தான் உயிரினும் மேலாக காதல் கொண்டிருந்த தன் கணவன், நாடக மகள்மீது காதல் கொள்வதை கண்ணகி அறிகிறாள். அது 21ஆம் நூற்றாண்டு இல்லை என்பதால், கண்ணகியால் கோவலனிடம் கேள்வி எழுப்பியிருக்க முடியாது. ஆனால் அவளின் மனநிலை?. தன் காதலன் பிரிந்த நாள்முதல் கால்களில் சிலம்பு அணியவில்லை; காதுகளில் தோடு அணிவதில்லை; கண்களில் மை இடுவதில்லை; ஒளிபொருந்திய நெற்றியில் திலகமும் இடுவதில்லை; நீண்ட கருங்கூந்தல் எண்ணெயையும், பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன. வெறுமைத்தன்மை கண்ணகியை சூழ்ந்தது. யாருக்காக? வேறொரு ஒரு மங்கையிடம் காதல்கொண்ட ஒருவனுக்காக... அதாவது தனது கணவனுக்காக. மனது முழுவதும் பாரம். கணவன் வேறு பெண்ணிடம் காதல் கொண்டாலும், அவனை நினைத்தே இல்லறம் நடத்துகிறாள். அவனுடைய உறவினர்களையும் முகம் சுழிக்காமல் வரவேற்கிறாள். புகுந்த இடத்திலும், பிறந்த இடத்திலும் மனதில் இருக்கும் பாரத்தை வெளிக்காட்டாமல், யாருக்கென்றே தெரியாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். தம் மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்ணகியின் பெற்றோர் அறிகின்றனர். அறிந்து என் செய்வது?
அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டுபோயினர். கணவன் வேறு பெண்ணிடம் சென்றாலும், அதை கேட்காமல், அந்த வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருந்ததால் அவள் கற்புக்கரசி என போற்றப்பட்டால். மாதவியிடம் மனக்கசப்பு எழ கண்ணகியிடம் வருகிறான் கோவலன். ஆனாலும் மாதவியிடம் வரும் சில கடிதங்களை எண்ணி வருந்துகிறான். கண்ணகி கற்புக்கரசியாக இருந்தாலும், மாதவியைத்தான் பிடிக்கும் என சொல்லாமல் சொல்கிறான். பேதை கண்ணகியும் கணவன் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் ஏற்றுக்கொள்கிறாள். ஏனெனில், அது அவள் காதல் கொண்டவன் அல்லவா. மற்றொன்று அது 21ம் நூற்றாண்டு இல்லையே. கணவன் வேறு ஒருவரை வைத்திருந்தால் தூக்கி எறிய. ஆயினும் இப்போதும் அதேபோல பல கண்ணகிகள் வாழ்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?
நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் உட்பட பலரும் மாதவி மீதான கோவலனின் காதலை ஆதரிக்கின்றனர். காரணம் கலாரசிகனான கோவலன், கலைகளின் அரசியான மாதவி மீது காதல் கொள்கிறானாம். மற்றொன்று திருமணத்தின்போது கண்ணகிக்கு வயது 12. அதாவது சிறுபிள்ளை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. கலாரசிகன் என்றால் கலையின் மீதுதானே காதல் கொண்டிருந்திருக்கவேண்டும். கலையை நிகழ்த்தும் பெண்ணின் மீதுதான் காதல் வருமோ?. கண்ணகி ஏதும் அறியாதவள் என விளக்கம் கொடுப்பவர்கள், அந்த ஏதும் தெரியாதவளை கோவலன் ஏன் மணந்தான்? என கூறமாட்டார்கள். அதற்கு கோவலனும் பதில்கூறமாட்டான். கலையால் ஈர்க்கப்பட்டு, காதல் வயப்பட்டிருந்தால், ஏன் அவள் பாடிய பாடலின் அர்த்தத்தை தவறாக கொண்டு மீண்டும் கண்ணகியிடம் வந்து வாசம் செய்யவேண்டும்?.

கணவனுக்காக சிலம்பை கையில் கொண்டு மன்னனிடம் முறையிடும் கண்ணகி
கற்புக்காக போற்றப்பட்டாளா கண்ணகி?
இங்கு கண்ணகியின் காதலும் போற்றப்படுகிறது. மாதவியின் காதலும் போற்றப்படுகிறது. ஏனெனில் கோவலன் பிரிந்துவந்த பிறகும் வேறு ஆண்களை எண்ணாமல், கோவலனை எண்ணியே வாழ்ந்து வந்தால் மாதவி. அப்போது இருவரின் காதலும் புனிதம் என்றால் கோவலனின் காதல்? கலைமீது காதல் கொண்டு சென்றிருந்தால், அவளது பாடலை தவறாக புரிந்துகொண்டிருந்தாலும், மாதவி யாரை விரும்பியிருந்தாலும், கோவலன் அவளை விரும்பியிருக்கவேண்டும், கண்ணிகியைப்போல. கோவலன் கங்கையை வைத்து பாடிய பாடலை தவறாக புரிந்துதான் மாதவி அதற்கேற்ற பாடலை பாடினாள். கோவலனின் பாடலில் மாதவி புரிந்துகொண்டது என்ன? அவள் வேறு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று பயம். அப்போது ஒரு பேதையே, அதாவது கண்ணகியை விட்டு, கோவலன் மாதவியிடம் செல்லும்போது? கண்ணகியின் வலி?. ஆனால், கேட்டால் நாம் மாதவியை குறை கூற இயலாது. ஏனெனில் அது அப்போதைய குலவழக்கம். அவளை குற்றம் சொல்ல இயலாது. கடைசியாக கண்ணகிக்கு வருவோம். கண்ணகி கற்புக்காகத்தான் போற்றப்பட்டாளா? இங்கு கற்பு என்பது என்ன? ஏன் இந்த உலகில் கோவலன் மட்டும்தான் அழகனா என்ன? கோவலன் மாதவியிடம் காதல்கொண்டவாறு, கண்ணகி யாரிடமாவது காதல்கொண்டு கலை என்று கூறியிருக்கலாமே?
அவள் கற்பை காத்து நல்லவள் என்றால், கோவலனின் கற்பு எங்கு சென்றது? அந்தகாலத்தில் ஆண்களுக்கு கற்பு இல்லை. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு. ஆனால் இப்போது? கற்பு ஒருவரின் காதலை தீர்மானிக்காது. காதல் கொண்டவரிடத்தில் வைத்திருக்கும் நேசம்தான் அதனை தீர்மானிக்கும். தன் காதலன் வேறொரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று அஞ்சி மாதவி பாடிய பாடல்தான் இருவரும் பிரியக் காரணம். இதுவும் ஒருவகை கோபம்தான். எங்கு தன்னைவிட்டு விலகிவிடுவானோ என அஞ்சி மாதவி வெளிப்படுத்தினால். கோவலன், மாதவி காதல்கொண்டாலோ என அவளை பிரிந்தான். ஆனால் தன் கணவன் தனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்தும், அவன்மீது கடைசிவரை அன்பு வைத்திருந்தால் கண்ணகி. இங்கு போற்றப்பட்டது அவளின் காதல். கற்பு அல்ல. மேலே முதலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்திலும் கண்ணகிகள் வாழ்கிறார்கள். கோவலன்போல மாதவியிடம் செல்லத்தெரியாமல் அல்ல. அதீத அன்பினால். முடிவில் இங்கு காதல்தான் கற்பு என்பதை பலரும் புரிந்துகொள்ளவேண்டும்.
- சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
- கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.
இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.
இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.
ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'.
- 'கண்ணகி' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'. இந்த படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ5 என்டர்டெயின்மென்ட் (E5 ENTERTAINMENT) இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'கண்ணகி' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கண்ணகி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை கீர்த்தி பாண்டியனிடம் "வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டை என்றால் , இந்த வாரம் உன் படம் வருகிறது, உன் கணவன் (அசோக் செல்வன்) படம் வருகிறது எந்த படம் வெற்றி பெரும்?" என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டதும் கடுப்பான கீர்த்தி பாண்டியன், "எங்க வீட்டிற்கு வந்து பார்த்தீர்களா நாங்கள் சண்டைப்போட்டதை. போட்டியும் இல்லை சண்டையும் இல்லை" என்று பதிலளித்தார்.






