search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "badminton competition"

    • போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • பெண்களுக்கான போட்டியில் வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுமத்தினர் ஒருங்கிணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் நடத்தியது. 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர் பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற நாகர்கோவில் லிட்டில் சேம்பியன் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நாகர்கோவில் ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி அதிக புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்தது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் பாராட்டி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.

    பணகுடி:

    பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணி, துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி, மதுரை சிவகாசி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு சென்னை அணியும், 2-ம் பரிசு பணகுடி அணியும், 3-ம் பரிசு தூத்துக்குடி அணியும், 4-ம் பரிசு நெல்லை அணியும் பெற்றது. போட்டியில் முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், தொழிலதி பர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணகுடி

    அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெய்னூல் ஆப்தின், வக்கீல் ராஜா செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
    • எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற சிறுவன் தங்கம் வென்றுள்ளார். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமாரின் மகன் பாலசுப்பிரமணியம், ஜெர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

    'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' எனும் தமிழ்மறையோன் நமது பெரும்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தன் நிலை கண்டு துவண்டு, சோர்ந்து விடாமல், தொடர்ச்சியாக முயன்று, தனக்குக் கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் உலக அரங்கில் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ள அன்புமகன் பாலசுப்பிரமணியமுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, இளந்தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் பாலசுப்பிரமணியம் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது உள்ளம் கனிந்த புரட்சி வாழ்த்துகள்!" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

    • தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
    • போட்டிகளில் ஹில்டன் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி தென்காசி எப்.ஆர்.சி. கிளப்பில் நடைபெற்றது. இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஜூனியர் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இஜாஸ் அகமத், இரட்டையர் ஆடவர் பிரிவில்இஜாஸ் அகமத், தன்னியநாதன் சூப்பர் சீனியர் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சங்கரேஷ் இரட்டையர் ஆடவர் பிரிவில் சங்கரேஷ், மாத்தேஸ் ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜெ.வே. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.


    • மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இறகுப்பந்து போட்டியில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி, ஆகியோர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகளை,பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத், முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    • புதுவை ராக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • புதுவை மாநிலத்தை சேர்ந்த 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை ராக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கோஜுரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவை குமார், பொது சேவை இயக்க மீனாட்சி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஏம்பலம் லிட்டில் ஸ்டார் பூப்பந்தாட்ட அணி, 2-ம் பரிசு பெற்ற புதுவை ரெயின்போ அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினார்கள். 3-ம் பரிசு பெற்ற ஏம்பலம் சன் பூப்பந்தாட்ட அணி 4-ம் பரிசு பெற்ற பூமியான் பேட்டை டாக்டர் அம்பேத்கார் பூப்பந்தாட்ட அணிக்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    முடிவில் லிட்டில் ஸ்டார் பூப்பந்தாட்ட கழக செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

    ×