பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி

போட்டியில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.
பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி
Published on

பணகுடி:

பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணி, துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி, மதுரை சிவகாசி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு சென்னை அணியும், 2-ம் பரிசு பணகுடி அணியும், 3-ம் பரிசு தூத்துக்குடி அணியும், 4-ம் பரிசு நெல்லை அணியும் பெற்றது. போட்டியில் முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், தொழிலதி பர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணகுடி

அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெய்னூல் ஆப்தின், வக்கீல் ராஜா செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com