மாவட்டங்களுக்கு இடையே இறகு பந்து போட்டி-வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கான போட்டியில் வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது.
மாவட்டங்களுக்கு இடையே இறகு பந்து போட்டி-வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுமத்தினர் ஒருங்கிணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் நடத்தியது. 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர் பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற நாகர்கோவில் லிட்டில் சேம்பியன் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நாகர்கோவில் ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி அதிக புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் பாராட்டி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com