search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "almonds"

  • எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
  • புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

  பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

   கீரை

  கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

   பருப்பு

  பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.

   ஓட்ஸ்

  ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.

   பால்

  பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

   ப்ரோக்கோலி

  பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.

   பீட்ரூட்

  பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.

   பாதாம்

  பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

  • டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும்.
  • வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

  தூக்கம்…! மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

  ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான். நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும்…

  நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.

  பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி' வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்கச் செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

   பசலைக்கீரையை பொறுத்தவரையில் அதில் இரும்புச் சத்து அதிகம். தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

  கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

   பாதாம்

  பாலைப் போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிபடுத்தி மூளையின் சக்தியை அதிகரித்து, உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதேநேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் உட்கொண்ட பிறகு நன்றாக தூங்குங்கள்.

   டார்க் சாக்லேட்

  பாதாம் தவிர, டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

   வாழைப்பழம்

  ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஊட்டசத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை வழங்குகிறது.

   சூடான பால் அருந்துதல்

  ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்திற்கு நல்ல பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் அதிகமாக இருப்பதால், இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளிக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

  • நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது.

  உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் சில...

  * நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.

  * நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.

  * இலந்தைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

  * கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்துக்காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.

  * நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

  * தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு ஸ்பூன் கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.

  * வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.

  * பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் வளரும்.

  * நினைவாற்றல் அதிகரிக்க செய்வதில் பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.

  • எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
  • நட்ஸ் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன

  தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த 4 நட்ஸ் வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்

  ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழியை தேடுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் சிறந்ததாக இருக்கும்.

  உடல் எடையை குறைக்க பல வழிகள் இருக்கலாம், உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்கு கடின உழைப்பும், பொறுமையும், விடா முயற்சியும் அவசியம். எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நட்ஸ் வகைகள் சரியான தேர்வாக இருக்கும். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. நீங்கள் இதுவரை டயட்டில் நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், இதற்கான முயற்சியை இன்றே தொடங்கலாம். இதற்கு உதவக்கூடிய நான்கு நட்ஸ் வகைகளை இன்றைய பதிவில் காணலாம்.

  பாதாம்

  பாதாம் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். இருதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் எடை இழப்பு வரை பாதாமில் நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நார்ச்சத்து மற்றும் புரதம் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

  புரதம் நிறைந்த பாதாம் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இதை சரியான அளவுகளில் எடுத்துக்கொண்டால் உடல் எடை நிச்சயமாக குறையும். சிறந்த பலன்களைப் பெற பாதாமை ஊற வைத்து சாப்பிடலாம்.

  பிரேசில் நட்ஸ்

  இதில் தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. விடாப்படியான தொப்பை கொழுப்பை குறைக்க இது உதவும். மேலும் பிரேசில் நட்சில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. இதை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

  எடை இழப்புக்கு உதவக்கூடிய நார்ச்சத்தும், புரதமும் பிரேசில் நட்ஸ்களில் அதிகமாக உள்ளன. மேலும் இதில் உள்ள செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன.

  அக்ரூட் பருப்பு

  இதில் உள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் நன்மை பயக்கின்றன. இவை பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன.

  அக்ரூட் பருப்புகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரதம், வைட்டமின் `ஏ', `டி' மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடல் எடையை குறைக்கின்றன. இதில் உள்ள சத்துக்கள் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகின்றன.

  பிஸ்தா

  சுவை நிறைந்த இந்த பிஸ்தா பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை தினமும் சாப்பிட்டு வர தொப்பை மற்றும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். இதில் உள்ள புரதம் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகின்றன.

  இதில் அதிக அளவு கலோரி இருந்தாலும், நல்ல கொழுப்புகள் உள்ள இந்த நட்ஸ்களை சரியான அளவுகளில் தினமும் சாப்பிட்டு வந்தால் எடையை குறைக்கலாம்.

  தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் கலவைகளை எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை செய்தால் எடை நிச்சயம் குறையும்.

  ×