என் மலர்
நீங்கள் தேடியது "Cheteshwar Pujara"
- புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.
- இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவீட்டரில் பகிர்ந்து உள்ளது.
டெல்லி:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த போட்டியில் புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணி, தங்களது வீரர்கள் கையெழுத்திட்ட ஆஸ்திரேலிய ஜெர்சியை புஜாராவுக்கு பரிசளித்தது.
இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் புஜாராவுக்கு வழங்கினார். இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவீட்டரில் பகிர்ந்து உள்ளது.
- இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார்.
- புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார். புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார். அவர் மொத்தம் 15,797 பந்துகளை சந்தித்துள்ளார். இந்த நிலையில் புஜாரா நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்த்தித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி புஜாராவின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் , புஜாரா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.
- கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை.
- வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்டு சதம் அடிக்க வேண்டும் என கங்குலி கூறினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
முன்னதாக கடந்த 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு செடேஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். இருப்பினும் 2020/21 தொடரில் பார்மை இழந்து தடுமாறிய அவர் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியது.
இந்நிலையில் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 வருடங்கள் கழித்து ஒரு வழியாக சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
அவர் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். அதன் வாயிலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 13வது இந்தியர் என்ற சாதனையும் படைப்பார். அதற்கு அவர் தகுதியானவர்.
ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.
ஏனெனில் கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை. எனவே அவருக்கு அப்படி ஒரு சதம் தற்போது தேவைப்படுகிறது. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
- நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன்.
- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக புஜாரா தீவிரமாக தயாராகிவருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3-ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.
ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன். அவுட்டாகும்போது நான் உச்சபட்ச கோபமடைவேன். ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும் எனக்கு கோபம் வரும். ஆஸ்திரேலியாவில் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருக்கும்.
என்று புஜாரா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 47 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா பங்கேற்று விளையாடி வருகிறார்.
- புஜாரா ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்தார்.
இந்திய டெஸ்ட் அணி வீரரான புஜாரா இந்திய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6792 ரன்களை குவித்துள்ளார். இயல்பாகவே மிகவும் பொறுமையாக விளையாடும் தன்மையுடைய புஜாராவிற்கு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாற்றம் தான் இருந்து வருகிறது. அவரது பேட்டிங் ஸ்டைலே மிகவும் பொறுமையாக விளையாடுவது தான் என்றாலும் அவரது ஆட்டம் இந்திய அணியில் பெரியதாக எடுபடவில்லை.
அதே வேளையில் ஐபிஎல் தொடரிலும் அவருக்கு எந்த அணியிலும் வாய்ப்பு கிடைக்காத வேளையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
A century from just 75 balls for @cheteshwar1. 🤩 💯
— Sussex Cricket (@SussexCCC) August 23, 2022
Just phemeomenal. 💫 pic.twitter.com/z6vrKyqDfp
இந்திய அணிக்காக விளையாடும்போது சற்று சுமாராகவே விளையாடி வரும் இவர் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பை தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புஜாரா ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்த வேளையில் தற்போது இந்த சீசனில் மூன்றாவது சதத்தை சசெக்ஸ் அணிக்காக அடித்து அசத்தியுள்ளார்.
துவக்க வீரராக களமிறங்கிய புஜாரா 90 பந்துகளை சந்தித்து 132 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது அதிரடியின் காரணமாக அந்த அணி வெற்றியும் பெற்றுள்ளது. புஜாரா இப்படி கவுன்டி கிரிக்கெட்டில் ஒரே சீசனில் 3 சதங்களை அடித்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
- இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் விளையாடி வருகிறார்கள். புஜாரா, வாஷிங்டன் சுந்தர், சைனி, உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
புஜாரா சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டி ஜூலை 19-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் சசக்ஸ் அணியின் கேப்டன் டாம் ஹாலண்ட் காயமடைந்தார். இந்நிலையில் வேறு இங்கிலாந்து வீரர்கள் இருந்தாலும் புஜாராவின் அனுபவத்தை மதித்த அந்த அணி நிர்வாகம் அவரை கேப்டனாக அறிவித்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 523 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் புஜாரா 231 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் புஜாரா சசெக்ஸ் அணிக்காக மூன்றாவது இரட்டை சதம் அடித்தார்.
💯 💯 @cheteshwar1 does it again!#LVCountyChamp pic.twitter.com/JehWCswOCq
— LV= Insurance County Championship (@CountyChamp) July 20, 2022
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதனால் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட அவர் தற்போது குணமடைந்தது மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லேன்ஷைர் அணிக்காக விளையாட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டார்.
First appearance for @lancscricket ✅
— LV= Insurance County Championship (@CountyChamp) July 20, 2022
First 5-fer for @lancscricket ✅
What a performance from @Sundarwashi5 👏 #LVCountyChamp pic.twitter.com/SsbpVIFgau
இந்நிலையில் நேற்று நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிராக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியில் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயத்திலிருந்து குணமடைந்து சுழலுக்கு சவாலான இங்கிலாந்து மைதானங்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இதே தொடரில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரர் உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோல் கெண்ட் அணிக்காக ஒப்பந்தமான இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
Pure quality ⚡ @navdeepsaini96 has put on a show in his first @KentCricket outing ✋ #LVCountyChamp pic.twitter.com/UxJbZFUZqE
— LV= Insurance County Championship (@CountyChamp) July 20, 2022
- சர்வதேச கிரிக்கெட்டில் புஜாரா ஒருமுறை மட்டுமே பந்து வீசியுள்ளார்.
- லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக புஜாரா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
2022-ம் ஆண்டுக்கான கவுண்டி சாம்பியன்ஷிப்பின் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூலை மாதம் 11-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சசெக்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சசெக்ஸ் அணியில் தான் இந்திய அணி வீரர் புஜாரா விளையாடுகிறார்.
அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 588 ரன்கள் சேர்த்தது. புஜாரா 46 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து லீசெஸ்டர்ஷைர் முதல் இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 529 ரன்கள் எடுத்தது. இதில் 3 பேர் சதமும் ரிஷி படேல் 99 ரன்களும் அடித்திருந்தனர். கொலின் அக்கர்மேன் 167 ரன்னிலும் முல்டர் 129 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா லெக் ஸ்பின்னராக மாறினார். ஒரு ஓவர் மட்டுமே வீசிய அவர் 8 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
An over of @cheteshwar1 bowling. 🚨 pic.twitter.com/I4PdyeCxCx
— Sussex Cricket (@SussexCCC) July 13, 2022
சர்வதேச கிரிக்கெட்டில் புஜாரா ஒருமுறை மட்டுமே பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 41.5 ஓவர்கள் வீசி ஆறு விக்கெட்டுகளை புஜாரா வீழ்த்தியுள்ளார். சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சுழற்பந்து வீசியது வீடியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஞ்சி டிராபியில் 19 வயது இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 268, 148, 69, 91 என அசத்தியுள்ளார்.
புஜாராவை போல் 500 ரன்களுக்கு மேல் குவிக்கலாம், ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்துகளை சந்திப்பது எளிதான காரியம் அல்ல. அது இளைஞர்களுக்கான அளவுகோல் என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
புஜாரா குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டியில் ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களால் மட்டுமே நாள் முழுவதும் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய இயலும். ஒரே தொடரில் புஜாரா 1200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். இது உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. பேட்ஸ்மேன்களால் 500 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதிக அளவிலான பந்துகளை சந்தித்தது இளம் வீரர்களுக்கான அளவுகோல்.
களத்தில் நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது சிறப்பானது. அவரது பேட்டிங் விரும்பு பார்ப்பேன். தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றனர்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.
2011-ல் உலக கோப்பையை வென்றபோது நான் இளம் வீரராக இருந்தேன். அப்போது மற்ற வீரர்களின் உத்வேகத்தை பார்த்தேன்.
தற்போது தொடரை வென்ற இந்திய அணி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வீரர்கள் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புஜாராவின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்புக்கு உரிய வீரர் ஆவார்.
இதேபோல மெல்போர்ன் டெஸ்டில் புதுமுக வீரர் அகர்வால் தனது திறமையை வெளிப்படுத்தியது சிறப்பானது. ரிசப்பந்தும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். வேகப்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை முறியடித்து அபாரமாக வீசினார்கள். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-
நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.
4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல். எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #ViratKohli
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வரும் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா இன்று சிட்னி டெஸ்டிலும் சதம் விளாசி அசத்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 250 பந்தில் 130 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

உணவு இடைவேளைக்குப்பிறகு அணியின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டியது. உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 193 ரன்களில் ஆட்டமிழந்தார். 373 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். அவரது விக்கெட்டை லயன் கைப்பற்றினார். 7 ரன்களில் புஜாரா தனது இரட்டை சதத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இரட்டை சதத்தை தவறவிட்டபோதிலும், இந்த போட்டியின்போது பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளார் புஜாரா. #CheteshwarPujara #AUSvIND