search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி: புஜாராவின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்
    X

    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி: புஜாராவின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

    • இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார்.
    • புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார். புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார். அவர் மொத்தம் 15,797 பந்துகளை சந்தித்துள்ளார். இந்த நிலையில் புஜாரா நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்த்தித்துள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி புஜாராவின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் , புஜாரா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×