என் மலர்
நீங்கள் தேடியது "லோகேஷ் கனகராஜ்"
- இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.
- இந்த படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இந்தமுறை தமிழ் தாண்டி தெலுங்கில் களம் இறங்கியிருக்கிறார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் அவர் புதிய படம் இயக்கப் போகிறார். இது அல்லு அர்ஜூனின் 23-வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவரது தரப்பில் பச்சைக்கொடி காட்டவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிரடி - ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
- சென்சார் கிடைக்காததால் ஜன நாயகன் படம் இன்னும் வெளியாகவில்லை.
- இன்று செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசினார்
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாகவிருந்து. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இப்படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜனநாயகனில் கேமியோ செய்ய அழைத்தார்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.
- கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது.
- அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.
இதனிடையே, கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "நான் அதிக சம்பளம் கேட்டதால் 'கைதி 2' படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள், மேலும் சிலர் LCU முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். அல்லு அர்ஜுன் சார் படத்திற்குப் பிறகு எனது அடுத்த படம் 'கைதி 2' தான். 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை எடுத்து முடிக்காமல் நான் சினிமாவில் இருந்து விலகமாட்டேன். LCU மிக விரைவில் திறக்கப்படும். பென்ஸ் படமும் LCU-வைச் சேர்ந்ததுதான்" என்று தெரிவித்தார்.
- இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது
- ‘இரும்புக் கை மாயாவி’ கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'புஷ்பா-2' படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கும் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அல்லு அர்ஜுனின் 23 ஆவது படமாக இப்படம் உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு சொன்ன 'இரும்புக் கை மாயாவி' கதையில் தான் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. .
- ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது.
- மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்:-
ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துகள். அப்படியே உங்க உங்க பெரிய ஆசையும் வெற்றி பெற வாழ்த்துகள். ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், வாழ்த்துகள் அண்ணா. மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள் என கூறினார்.
- விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
- அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி.' கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் படம் வசூல் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கூலி' படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'கூலி' படம் மீது 1000 விமர்சனங்கள் இருந்தன. விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
ரசிகர்களிடமிருந்து ஒரு படத்திற்கு விமர்சனம் வரும்போது, அதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அதே நேரத்தில், விமர்சனங்களை தாண்டியும் ரஜினி சாருக்காக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து இருக்காங்க. படம் 500 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. மக்களுக்கு நன்றி.
அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததாலும், வாய்ப்பு கிடைக்காததாலும், படம் வெளியான நேரத்தில் விமர்சனம் குறித்து பேச முடியவில்லை என்று கூறினார்.
- இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது.
- ‘இரும்புக் கை மாயாவி’ கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'புஷ்பா-2' படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளது தற்போது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனை சந்தித்து பேசி இப்படத்தை உறுதி செய்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கி 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு சொன்ன 'இரும்புக் கை மாயாவி' கதையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
- இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 29 என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது.
- மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார்.
பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு கதாநாயகனாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ், ஒரு பான் இந்தியா படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் கூறிய கதை அல்லு அர்ஜூனுக்கு பிடித்து உள்ளதாகவும் இதனால் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது மிகப்பிரமாண்டமான ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். எனவே அப்படத்தை முடித்துக்கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- இவர் ‘கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
- நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பென்ஸ்' திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.
'பென்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2' படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'பென்ஸ்' படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது
- புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அறிமுக நடிகர்களில் ஒருவராகிறார்.
பல நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை வழங்கிய பிறகு, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவர் ஒரு ஹீரோவாக வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படம் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.






