என் மலர்
நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை"
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது.
- மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்:
பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. 799 கனஅடி நீர் வருகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் உயரும்பட்சத்தில் குடிநீர் மற்றும் நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82.20 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 29.6, தேக்கடி 28.2, கூடலூர் 3.8, உத்தமபாளையம் 0.8., வீரபாண்டி 2.8, அரண்மனைபுதூர் 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது.
- கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தேக்கடியில் உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நீர் 2 கி.மீ தூரம் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்று குமுளி மலைப்பாதை அருகே போர்பே அணையில் சேரும். அங்கிருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலமும், இரைச்சல் பாலம் வழியாகவும் வெளியேற்றப்படும்.
இந்த அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு வைகை செயற்பொறியாளர் அன்புச் செல்வன், பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. வரத்து 88 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 4590 மி.கன அடி.
வைகை அணை நீர்மட்டம் 54.66 அடி. வரத்து 286 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2664 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.70 அடி. வரத்து 58 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.44 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 6 கன அடி.
லோயர்கேம்ப், கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.
இதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.
இந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.