என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரஜ் சோப்ரா"

    • விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
    • நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

    இந்திய ராணுவத்தில் பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாதாசாகேப் விருது பெற்ற மலையுல உலகின் சூப்பர் ஸ்டாரும் பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.

    இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்த விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.

    தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் அவர் இணைந்துள்ளார். 



    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    டோக்கியோ:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

    இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
    • நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (13-ந் தேதி ) தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இதில் 198 நாடுகளை சேர்ந்த 2202 வீரர் வீராங்க னைகள் கலந்து கொள்கிறார்கள். 49 பிரிவுகளில் பந்தயம் நடத்தப்படுகிறது. வழக்கம்போல் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    19 பேர் கொண்ட இந்திய அணி உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது. வரலாற்றில் முதல்முறையாக ஈட்டி எறிதலில் 4 இந்தியா்கள் கலந்து கொள்கிறார்கள் .

    இதில் நீரஜ் சோப்ரா மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

    அவர் இந்த முறையும் தங்கம் வெல்வாரா ? என்று ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. ஒலிம்பிக் சாம்பியனும், பாகிஸ்தான் வீரருமான அர்சத் நதீம் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள். நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு-

    ஆண்கள்: நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீா் சிங், ரோகித் யாதவ் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கா் (நீளம் தாண்டுதல்), குல்வீா் சிங் (5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கா் ( டிரிபிள் ஜம்ப்), சா்வேஷ் அனில் குஷோ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் குஜுா் (200 மீட்டர்), தேஜாஸ் சிா்சே (110 மீ தடை தாண்டுதல்), சொ்வின் செபாஸ்டியன் (20 கி.மீ. நடைப் பந்தயம்), ராம் பாபு, சந்தீப் குமாா் (35 கி.மீ. நடைப் பந்தயம்).

    பெண்கள்: பாருல் , அங்கிதா தியானி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோசு வாமி (35 கி.மீ. நடைப்பந்த யம்), பூஜா (800 மீட்டர் , 1,500 மீட்டர்).

    • டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
    • இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

    சூரிச்:

    டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடைபெற்றது.

    இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். இறுதிச்சுற்றில் ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் களமிறங்கினர்.

    இந்நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3வது இடம் பிடித்தார்.

    • ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
    • கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

    இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா பெங்களூருவில் தனது பெயரில் நடைபெற்ற முதல் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025' போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நீரஜ் போட்டியிடுவதைக் காண ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், நீரஜ் ஒரு தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சனிக்கிழமை நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், நீரஜ் தனது மூன்றாவது முயற்சியில் 86.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

    கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இலங்கை தடகள வீரர் ருமேஷ் பதிரேஜ் 84.34 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    மற்றொரு இந்திய தடகள வீரர் சச்சின் யாதவ் 82.23 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா இந்தப் போட்டியின் அமைப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது

    • நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
    • 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும், அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் 'நம்பர் 1' இடத்தை இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார்.

    1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

    • இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்று நீர்ஜ் சோப்ரா சாதனைப் படைத்துள்ளார்.
    • இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஈட்டி எறிதலில் யார் ஆதிக்கம் செலுத்துவார் எனக் கேட்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    கிரிக்கெட் வீரர்களில் யார் ஈட்டி எறிதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பும்ரா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. முழு உடற்தகுதியின் இருந்தால் பும்ராவால் ஈட்டி எறிதல் போட்டியில் சாதிக்க முடியும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    • 85.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
    • கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

    ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகள் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, இடைப்பட்ட முயற்சிகளில் 83.45, 85.29, 82.17, 81.01 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.

    அதில் மூன்றாவது முயற்சியில் 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும் கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தனர்.

    முன்னதாக கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
    • நீரஜ் சோப்ரா கிளாசிக் அடுத்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

    பாரிஸ்:

    பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

    நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்பதிப்பில் விளையாடுகிறார்.

    • ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகள போட்டி போலந்தில் நடைபெற்றது.
    • ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தை பிடித்தார்.

    சோர்ஜோவ்:

    ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகள போட்டி போலந்தின் சோர்ஜோவ் நகரில் நடைபெற்றது.

    இதில் நேற்றிரவு நடந்த ஈட்டி எறிதல் பந்தயத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 84.14 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம்பிடித்தார். இவர் தனது வாய்ப்பில் 3 பவுல்கள் செய்தது பின்னடைவை ஏற்படுத்தியது.

    86.12 மீட்டர் தூரம் வீசிய ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடமும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (83.24 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர்.

    • ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
    • 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

    தோகா:

    16-வது டைமண்ட் லீக் தடகள போட்டி கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 28-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 15 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 3-வது சுற்று கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று நடைபெற்றது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.

    அவர் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய வரலாறு நிகழ்த்தினார். இதற்கு முன்பு 2022 ஸ்டாக் ஹோம் டைமன்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் எறிந்ததே அவரது சிறப்பான நிலையாக இருந்தது.

    90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ.) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ.) ஆவார்கள். சர்வதேச அளவில் 25-வது வீரர் ஆவார்.

    90.23 மீட்டர் எறிந்தாலும் நீரஜ் சோப்ராவால் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார்.

    புதிய சாதனை குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-

    90 மீட்டரை தாண்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த அனுபவமாகும். பயிற்சியாளர் 90 மீட்டர் இலக்கை எட்ட முடியும் என்று என்னிடம் கூறினார். இந்த இலக்கை தொட எனக்கு காற்று உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    27 வயதான நீரஜ் சோப்ரா 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளிப் பதக்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு அற்புதமான சாதனை. தோகா டைமன்ட் 'லீக்' போட்டியில் 90 மீட்டரை தாண்டி எறிந்ததற்காகவும், தனது சிறந்த நிலையை எட்டியதற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும். அவரால் இந்தியா மகிழ்ச்சி அடைந்து பெருமை கொள்கிறது.

    இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.

    • டயமண்ட் லீக் தடகள போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
    • நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்தார்.

    தோஹா:

    டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.

    இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டியின் முடிவில் அவர் 2வது இடம் பிடித்தார்.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடம் பிடித்தார்.

    நீரஜ் சோப்ரா இதற்கு முன் 2022 ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்தது. 90 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா 3வது ஆசியவீரர் என்ற பெருமை பெற்றார்.

    புதிய சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    ×