என் மலர்
நீங்கள் தேடியது "டாடா மோட்டார்ஸ்"
- புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது.
- அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
டாடா மோட்டார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 120 எச்.பி. பவரையும், 170 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 118 எச்.பி. பவரையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் ஹவர் பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இவை முறையே 150 எச்.பி. பவரையும், 167 எச்.பி. பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு வேரியண்டும் 210 என்.எம். வரையிலான டார்க்கை வெளிப்படுத்தும்.
புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. கர்வ் EV-யில் குரல் மூலம் செயல்படுத்தக்கூடிய பனோரமிக் சன்ரூப், சைகை மூலம் இயக்கக்கூடிய டெயில்கேட், 12.3 அங்குல டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
விலையை பொருத்தவரை புதிய டாடா கர்வ் ரூ.14.55 லட்சம் என்றும் கர்வ் EV சுமார் ரூ.18.49 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- முதன்முறையாக இந்திய மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
- இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
- இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 17.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
இந்த கார் தற்போது எம்பவர்டு +A 45, எம்பவர்டு +A 45 டார்க், மற்றும் எம்பவர்டு +A 45 ரெட் டார்க் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ. 17.29 லட்சம், ரூ. 17.49 லட்சம் மற்றும் ரூ. 17.49 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ADAS உடன் கூடிய நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் சென்டரிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
நெக்சான் எலெக்ட்ரிக் மாடலின் டார்க் மற்றும் ரெட் டார்க் மாடல்களைப் பொறுத்தவரை, இந்த வேரியண்ட்களில் பிளாக் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் ஃபுல் பிளாக் தீம் (டார்க் எடிஷன்) அல்லது பிளாக் மற்றும் ரெட் தீம் (ரெட் டார்க் எடிஷன்) ஆகியவை அடங்கும்.

இத்துடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புறம் சன் ப்ளைண்டுகள், சரவுண்ட் லைட்கள், V2V மற்றும் V2L தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
ADAS கொண்ட புதிய டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 45kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
- புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும்.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வேரியண்ட் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். டாடா நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் விரைவில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற இருக்கிறது.
அதன்படி டாடா நிறுவனம் விரைவில் நெக்சான் EV-இல் லெவல் 2 ADAS சூட் பொருத்த இருக்கிறது. டாடா நிறுவனம் தனது சப் 4-மீட்டர் எஸ்யூவிக்கு இதுவரை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான ADAS சூட் வழங்கவில்லை. இந்த புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும். இதில் A என்ற எழுத்து ADAS சூட்-ஐ குறிக்கிறது.
புதிய அப்டேட் உடன் வரும் நெக்சான் எலெக்ட்ரிக் காரில் டாடா தற்போது வழங்கும் அனைத்து சலுகைகளுடன் வரும். கூடுதலாக, இது 45kWh பேட்டரி பேக் பதிப்பில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
நெக்சான் EV பெறக்கூடிய லெவல் 2 ADAS அம்சங்களில் ஓட்டுநர் தூக்கத்தில் இருக்கிறாரா என்பதை கண்டறிதல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலெர்ட், ரியர் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் கொலிஷன் வார்னிங் ஆகியவை அடங்கும்.
- புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
- பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017 ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.
- டாடா கர்வ்வ் மூன்று வெவ்வேறு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது.
- 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 116 ஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனத கர்வ் (Curvv) கூப்-எஸ்யூவி மாடலின் விலையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் திருத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம், கர்வ் மாடலின் விலை இப்போது மாறுபாட்டைப் பொறுத்து ரூ.13,000 வரை அதிகரித்துள்ளது. இதனுடன், மற்ற மாடல்களின் விலைகளிலும் டாடா மோட்டார்ஸ் மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் மாடல்களின் விலை உயர்ந்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகளின் படி டாடா கர்வ் பேஸ் மாடல் ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாகவே உள்ளது. அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஜிடிஐ டர்போ பெட்ரோல் MT டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஜிடிஐ டர்போ பெட்ரோல் DCA டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு ஏ+ ஜிடிஐ டர்போ பெட்ரோல் MT டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ பெட்ரோல் DCA டார்க் எடிஷன், ஸ்மார்ட் டீசல் MT, அக்கம்ப்ளிஷ்டுஎஸ் டீசல் MT டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்ட எஸ் டீசல் DCA டார்க் எடிஷன், அக்கம்ப்ளிஷ்டு+ ஏ டீசல் MT டார்க் எடிஷன் மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ ஏ டீசல் DCA டார்க் எடிஷன் உள்ளிட்ட பல வேரியண்ட்களின் விலைகள் அப்படியே உள்ளன.
டாடா கர்வ் மாடலின் கிரியேட்டிவ் எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி, அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ-பெட்ரோல் டிசிஏ, கிரியேட்டிவ்+ எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி, கிரியேட்டிவ்+ எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் டிசிஏ, அக்கம்ப்ளிஷ்டு எஸ் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி, அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ-பெட்ரோல் எம்டி மற்றும் அக்கம்ப்ளிஷ்டு+ ஏ ஜிடிஐ டர்போ-பெட்ரோல் டிசிஏ மாடல்களுக்கு ரூ.3,000 விலை உயர்வு பொருந்தும். மீதமுள்ள அனைத்து வேரியண்ட்களும் ரூ.13,000 நிலையான விலை மாற்றத்தை பெற்றுள்ளன.
டாடா கர்வ்வ் மூன்று வெவ்வேறு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இரண்டு பெட்ரோல் வகைகள் மற்றும் ஒரு டீசல் யூனிட். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் 118 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. கர்வ்வின் 1.2 லிட்டர் ஹைபரியன் பெட்ரோல் எஞ்சின் 123 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க்கை வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 116 ஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு எஞ்சின் தேர்வும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டிசிஏ உடன் வருகிறது. இந்த விவரக்குறிப்புகளுடன், டாடா கர்வ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் பிற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

"இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."
"வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."
"தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
- கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. விலை மாற்றம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஒட்டுமொத்தமாக உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நவம்பர் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி டாடா ஹேரியர் மாடல் விலை தற்போது ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா சபாரி மாடலின் விலை ரூ. 20 ஆயிரமும், நெக்சான் மாடல் விலை ரூ. 18 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ், டிகோர் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஹேச்பேக் மாடலான டாடா டியாகோ விலை தற்போது ரூ. 8 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. டாடா பன்ச் விலை ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இவை தவிர டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்களில் 50 ஆயிரமாவது யூனிட்டாக நெக்சான் EV மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
- டாடா நிறுவத்தின் புதிய CNG மாடல் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியாகோ NRG i-CNG விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது இந்தியாவின் முதல் டஃப் ரோடர் CNG என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. புதிய டாடா டியாகோ NRG i-CNG மாடல் XT மற்றும் XZ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டாடா டியாகோ NRG i-CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய டியாகோ NRG i-CNG மாடலின் வெளிப்புறம் பிளாக் பாடி கிலாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிதாக ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பிளாக் ரூஃப், ORVM-கள், ரூஃப் ரெயில்கள், ஃபாக் லைட்கள், டெயில் கேட் மீது பிளாஸ்டிக் கிலாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் கிளவுடி கிரே, ஃபயர் ரெட், போலார் வைட் மற்றும் ஃபாரெஸ்டா கிரீன் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறத்தில் சார்கோல் பிளாக் தீம், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அடஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
டாடா டியாகோ NRG i-CNG XT ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்
டாடா டியாகோ NRG i-CNG XZ ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய டாடா எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 டாடா டிகோர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டிகோர் EV விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 2022 டாடா டிகோர் EV மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் முன்பை விட அதிக ரேன்ஜ் வழங்குகிறது.
2022 டிகோர் EV மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய காரை விட 15 கிலோமீட்டர் வரை அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் தற்போது முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த கார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மேம்பட்ட டாடா டியாகோ EV மாடலில் லெதர் இருக்கை மேற்கவர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் டாடாவின் Z கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே டிகோர் EV XZ மற்றும் XZ+ மாடல்களை பயன்படுத்துவோருக்கு இதற்கான அப்டேட் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.
டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது. இந்த வேரியண்ட் டாடா டிகோர் EV XZ+ வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. புதிய டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்தியாவில் எலெக்ட்ரிக் வலாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
- தற்போது டாடா கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது.
வாகனம் அதன் ஸ்டாக் கண்டிஷனில் இருக்கும் போது தீப்பிடித்து எரிவது மிகவும் துயரமான சம்பவமாகவே இருக்கும். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா ஹேரியர் கார் மாடல் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்க்பப்ட்டு இருந்த போது, தானாக தீப்பிடித்து எரிந்துவிட்டது என கார் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.
குனல் போகாரா என்ற நபர் கடந்த ஜூலை மாத வாக்கில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலை வாங்கி இருக்கிறார். கார் வாங்கியதில் இருந்து எந்த விதமான மூன்றாம் தரப்பு அக்சஸரீக்களையும் தனது வாகனத்தில் இவர் பயன்படுத்தவில்லை. எனினும், கார் வாங்கிய சில மாதங்களில் அதன் பேட்டரி முழுக்க சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. இதனால் காரை அவர் அருகாமையில் உள்ள சர்வீஸ் செண்டரில் கொடுத்து, பேட்டரியை மாற்றி இருக்கிறார்.

புதிய பேட்டரி மாற்றிய மூன்றாவது நாளில் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டரில் கார் சரிசெய்யப்பட்டது. பின் போகாரா தனது காரை சீராக பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 15 கிலோமீட்டர்கள் காரில் சென்று வந்த போகாரா நள்ளிரவு 1.30 மணி அளவில் காரை சாலையின் ஓரத்தில் பார்க் செய்தார். பார்க் செய்யப்பட்ட 15 நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது.
அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தப்படி, காரின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த கார் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து, அவரும் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தார். தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதில் கார் முழுக்க தீப்பிடித்து எரிந்து விட்டது.
காரின் பொனெட்டில் தான் முதலில் தீப்பிடிக்க துவங்கியது என பாதுகாப்பு ஊழியர் தெரிவித்து இருக்கிறார். தனது காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் தர வேண்டும் என குனல் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source: Cartoq
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022 டிகோர் EV மாடல் இந்திய சந்சதையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம், டாடா டியாகோ EV 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியகது.
இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை காரை முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். முன்பதிவு துவங்கிய முதல் நாளே காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டாடா டியாகோ EV மாடலை முன்பதிவு செய்தனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.

புதிய டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்த நெக்சான் EV மாடல் இந்தியாவில் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து நெக்சான் EV மேக்ஸ், டிகோர் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.
இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 89 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. முன்னதாக தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடாட மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.






