என் மலர்
கார்

புது அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட டாடா கர்வ்
- புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது.
- அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
டாடா மோட்டார் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 120 எச்.பி. பவரையும், 170 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 118 எச்.பி. பவரையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் ஹவர் பேட்டரி வேரியண்ட்கள் உள்ளன. இவை முறையே 150 எச்.பி. பவரையும், 167 எச்.பி. பவரையும் வெளிப்படுத்தும். இரண்டு வேரியண்டும் 210 என்.எம். வரையிலான டார்க்கை வெளிப்படுத்தும்.
புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. கர்வ் EV-யில் குரல் மூலம் செயல்படுத்தக்கூடிய பனோரமிக் சன்ரூப், சைகை மூலம் இயக்கக்கூடிய டெயில்கேட், 12.3 அங்குல டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
விலையை பொருத்தவரை புதிய டாடா கர்வ் ரூ.14.55 லட்சம் என்றும் கர்வ் EV சுமார் ரூ.18.49 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.






