என் மலர்
நீங்கள் தேடியது "இளையராஜா"
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார்.
அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த ஆண்டு லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) என்ற தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
இதற்கிடையே தனது அடுத்த சிம்பொனியை எழுதி வருவதாக கடந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துடன் இளையராஜா வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த சிம்பொனியை எழுதி முடித்துவிட்டதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில், பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா வகை ஆகும்.
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) இளையராஜா கைகளில் விருது வாங்கியது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், டியர் இளையராஜா சார், எனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உங்களால் கௌரவிக்கப்பட்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமையாகக் கருதுகிறேன்.
உங்களது ஆசீர்வாதங்களுடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.
இந்த அழகான கௌரவத்திற்கும், 'மராத்வாடாவின் மகள்' என்று என்னைக் கொண்டாடியதற்கும் AIFF-க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
சத்ரபதி சம்பாஜிநகர் எப்போதும் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன்.
எனது சாதனையைப் பாராட்டிப் பேசிய ரசூல் பூக்குட்டி சார் அவர்களுக்கு மிக்க நன்றி." என்று தெரிவித்துள்ளார்.
பாக்யஸ்ரீ தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா படத்தில் குமாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை.
- இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற 11-வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான உயரிய 'பத்மபாணி விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆஸ்கார் வெற்றியாளர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
பின்னர் இளையராஜா பேசியதாவது:-
இந்த விழாவிற்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் எனது 1,541-வது படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துவிட்டு வந்தேன். நிறைய பேர் என்னிடம் எப்படி துல்லியமான பாடல்கள் மற்றும் மெட்டுகளை உருவாக்குகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்வது ஒன்றுதான். எனக்கு இன்னும் இசை தெரியாது. ஒருவேளை இசை முழுவதையும் கற்றுக்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நான் நினைத்திருந்தால், இந்த நேரம் வீட்டிலேயே முடங்கியிருப்பேன். கற்க வேண்டியவை இன்னும் இருப்பதால் தான் நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறேன்.
நான் 1968-ல் இசைப்பயணத்தை தொடங்கியபோது தொழில்நுட்பம் இல்லை. இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம். ஆனால், நேரடி வாத்தியங்கள் (லைவ் ஆர்கஸ்ட்ரா) தரும் உணர்வை எந்திரங்களால் தர முடியாது. அதனால்தான் இன்றும் நான் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தனித்தனியாக குறிப்புகளை(நோட்ஸ்) எழுதி, நேரடி இசையையே பதிவு செய்கிறேன் என்றார்.
முன்னதாக நிகழ்ச்சி தொடக்கத்தில், விமான விபத்தில் மரணம் அடைந்த மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
11-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள எம்ஜிஎம் வளாகத்தில் உள்ள ருக்மிணி அரங்கில் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவையும் வழங்கப்படும்.
- அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
- மற்றவர்கள் என்ன செயல்முறையைப் பின்பற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை
இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில், சிரஞ்சீவி நடிப்பில் உருவான 'மான சங்கர வர பிரசாத் கரு' திரைப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தின் நகைச்சுவை மற்றும் பழைய பாடல்களைப் பயன்படுத்திய விதத்தைப் பாராட்டிய ரசிகர்கள், ஒரு குறிப்பிட்ட பாடல் குறித்து கவலை தெரிவித்தனர். படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இடையேயான காதல் காட்சிகளில், இசைஞானி இளையராஜா இசையமைத்த "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா ஏதேனும் வழக்கு தொடர்வாரா என பலரும் கிண்டலாகவும், கேள்வியாகவும் பேசிவந்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குநர் ரவிப்புடி, இந்த அழகான பாடலை படத்தில் பயன்படுத்தினோம், அதற்கு முன், இளையராஜா சாரிடம் அனுமதி கேட்டோம். சிரஞ்சீவி இடம்பெறும் காட்சிகளில் இது பயன்படுத்தப்படும் என்று நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம், அவரும் ஒப்புக்கொண்டார். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் எங்கள் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்கி, விருப்பத்துடன் தனது சம்மதத்தை அளித்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
மற்றவர்கள் என்ன செயல்முறையைப் பின்பற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எங்கள் விஷயத்தில், நாங்கள் அவரை தனிப்பட்ட முறையில் அணுகி அனுமதி கேட்டோம், அவரும் வழங்கினார்" என்று மேலும் கூறினார்.
- உணவின் பின்னணியில் உள்ள அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
- அரிசி படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி, மும்முரமாக நடந்து வருகிறது.
இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் அரிசி.
உணவின் பின்னணியில் உள்ள அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி, மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், 'அரிசி' திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் பாடகர்கள் அறிவு மற்றும் வேடன் பாடல் பாடியுள்ளனர்.
- பிரதமர் மோடி கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
- ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தொடங்கியது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் (ஜூலை மாதம் 27-ந்தேதி) பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். அவர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தார்.

அங்கிருந்து கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், காசியிலிருந்து பிரதமர் மோடி கொண்டு வந்திருந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோவில் ஓவியத்தையும், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தையும் பரிசாக வழங்கினர். விழாவில் ஓதுவார்கள் தேவாரப் பாடல்கள் பாடினர்.

தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா இசைத்த `ஓம் சிவோஹம்' பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார்.

பின்னர், ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் வெளியிட்டார்.
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, 'வணக்கம் சோழ மண்டலம்' என்று தொடங்கி, 'நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.
ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்குரியவர்கள். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையும், திறனையும் பிரதிபலிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர்.

ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.
சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வலிமையான அரசை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் தற்போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்த்து வியக்கிறது.
சோழ அரசர்கள் பாரதத்தை கலாசார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நமது அரசாங்கம் சோழர்களுடைய இதே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறது.
தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது.
தேசத்தின் கலை சின்னங்கள் களவாடப்பட்டு அயல்நாட்டில் விற்கப்பட்டு விட்டன. இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறோம்.
2014-ம் ஆண்டுக்கு பின்பு 600-க்கும் அதிகமான தொன்மையான கலை படைப்புகள் உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை மேலும் பலப்படுத்தினார்.
யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் உலகமே உற்றுப் பார்த்தது.
ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோவிலைவிட உயரம் குறைந்த விமானம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். அவ்வாறு புகழ்பெற்ற ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில்,'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
படத்திலிருந்து பாடல்கள் நீக்கப்பட்டதாகவும், இனி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
- டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது
- டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும்.
நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.
அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது ‘டிரெண்ட்' ஆகியுள்ளது.
- முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.
நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா தரப்பு வக்கீல், ''இந்த விவகாரத்தில் எக்கோ நிறுவனத்துக்கு எதிராக இந்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது'' என்று கூறினார். உடனே நீதிபதி, ''30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது 'டிரெண்ட்' ஆகியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? அதுமட்டுமல்ல முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதுபோல யாரும் இல்லை என்று நோட்டீஸ் கடிதம் திரும்ப வந்துவிட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனிடையே, 'கருத்த மச்சான்' பாடலை 'டியூட்' படத்தில் இருந்து நீக்க 7 நாள் அவகாசம் தேவை என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையே நீதிபதி நிராகரித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- 'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் வைரலாகியுள்ளது.
- இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது
அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணையில் Dude திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு வாதம் முன்வைத்தனர். அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து 'Dude' படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்கக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது. பாடல்களை கேட்டு ரசிப்பதால் எப்படி இளையராஜா பாதிக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு இளையராஜா தரப்பு, "அனுமதியின்றி பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது
'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






