என் மலர்
நீங்கள் தேடியது "Anil Ravipudi"
- அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
- மற்றவர்கள் என்ன செயல்முறையைப் பின்பற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை
இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில், சிரஞ்சீவி நடிப்பில் உருவான 'மான சங்கர வர பிரசாத் கரு' திரைப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தின் நகைச்சுவை மற்றும் பழைய பாடல்களைப் பயன்படுத்திய விதத்தைப் பாராட்டிய ரசிகர்கள், ஒரு குறிப்பிட்ட பாடல் குறித்து கவலை தெரிவித்தனர். படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இடையேயான காதல் காட்சிகளில், இசைஞானி இளையராஜா இசையமைத்த "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா ஏதேனும் வழக்கு தொடர்வாரா என பலரும் கிண்டலாகவும், கேள்வியாகவும் பேசிவந்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குநர் ரவிப்புடி, இந்த அழகான பாடலை படத்தில் பயன்படுத்தினோம், அதற்கு முன், இளையராஜா சாரிடம் அனுமதி கேட்டோம். சிரஞ்சீவி இடம்பெறும் காட்சிகளில் இது பயன்படுத்தப்படும் என்று நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம், அவரும் ஒப்புக்கொண்டார். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் எங்கள் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்கி, விருப்பத்துடன் தனது சம்மதத்தை அளித்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
மற்றவர்கள் என்ன செயல்முறையைப் பின்பற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எங்கள் விஷயத்தில், நாங்கள் அவரை தனிப்பட்ட முறையில் அணுகி அனுமதி கேட்டோம், அவரும் வழங்கினார்" என்று மேலும் கூறினார்.






