என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"
- கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
- இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார்.
மொகாலி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியிலும், 2-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற உள்ளது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்துள்ளது. டேவிட் வார்னர், லபுசேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 146 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் இந்தியா 54 முறையும், ஆஸ்திரேலியா 82 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டம் முடிவு இல்லை.
இரு அணி வீரர்களின் விபரம் வருமாறு:
இந்தியா:
லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுசேன், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.
- நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும்.
மொகாலி:
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.
அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்து உள்ளது. டேவிட் வார்னர், லபுஸ்சேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.
இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
இந்தியா:- லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான்கிஷன் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:- கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
- இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலிய அணி வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- உலகக் கோப்பைக்கு முன்பு சோர்வு ஏற்படும்.
- இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தி விடும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.
உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.
- சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார்.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர். முதல் 2 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார்.
தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (1994 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அனில் கும்ப்ளே (1996 ஆம் ஆண்டு), ஜாகீர் கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017 - 2019) ஆகியோர் 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களில் ஆல் அவுட்டானது.
சென்னை:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ரன்களை கடந்த 8-வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
- ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.
- இதன்மூலம் ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்தது.
புதுடெல்லி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் போட்டியை வென்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இதற்கிடையே, 3-வது ஒருநாள் போட்டி தொடங்கும் முன், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததுடன், நம்பர் ஒன் இடத்தையும் இந்திய அணி இழந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து நீடிக்கிறது.
- 270 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 54 ரன்கள் சேர்த்தார்.
சென்னை:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார். அலெக்ஸ் கேரி 38 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்சர் பட்டேல், சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் சற்று நிதானமாக ஆடிய சுப்மன் கில் 37 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் விராட் கோலி-கேஎல் ராகுல் ஜோடி சற்று தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்தது. கேஎல் ராகுல் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 2 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சூரியகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
185 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். அவர் 40 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்தது.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஷமி 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 49.1 ஓவர்களில் இந்திய அணி 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என கைப்பற்றியது.
- ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்
- இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சென்னை:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 68 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் அரை சதத்தை நோக்கி பயணித்த மிட்செல் மார்ஷ் 47 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
லபுசங்கே (28), அலெக்ஸ் கேரி (38), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (25), சீன் அப்பாட் (26) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்க, 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்சர் பட்டேல், சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது.
- முதலில் நடந்த இரண்டு போட்டியில் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.
- சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
சென்னை:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் நடந்த இரண்டு போட்டியில் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் இடம் பிடித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர் நோக்கி இருந்தனர்.
இந்தியா பிளேயிங் லெவன்:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:-
மிட்செல் மார்ஷ், வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.