என் மலர்
வழிபாடு
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-19 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி இரவு 9.41 மணி வரை பிறகு சப்தமி.
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.20 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மயிலாடுதுறை உத்திரமாயூரம் வள்ளலார் கோவில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆராய்ச்சி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-திடம்
கடகம்-புகழ்
சிம்மம்-நன்மை
கன்னி-உதவி
துலாம்- வரவு
விருச்சிகம்-பிரீதி
தனுசு- வெற்றி
மகரம்-மாற்றம்
கும்பம்-உயர்வு
மீனம்-செலவு
- தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறப்பேன்.
- 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான்.
திரேதாயுகத்தில் விஷ்ணு பகவான் ராமாவதாரத்தை முடித்து வைகுண்டம் சென்ற பிறகு பூலோகத்தில் தன்னைத்தானே அரசன் என்று பிரகடனம் செய்துகொண்ட பெரும் அரக்கர்களின் பெருஞ்சுமையை தாங்கிக்கொள்ள முடியாத பூமாதேவி விஷ்ணு பகவானிடம் முறையிட்டபோது அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த நானே யது வம்சத்தில் வாசுதேவரின் மகனாய் பிறந்து பல லீலைகள் புரிந்து வாசுதேவ கிருஷ்ணராய் பூமியில் அவதரிப்பேன் என்று பூமாதேவிக்கு வாக்களிக்கிறார்.
அதன்படி போஜவம்சத்தை சேர்ந்த உக்கிரசேனனின் மகனான கம்சனின் சகோதரி தேவகிக்கும், யது வம்ச மன்னரான வாசுதேவருக்கும் திருமணம் நடக்கிறது. கம்சனின் சகோதரி தேவகியை சந்தோசப்படுத்த 400 யானைகள், 15 ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், 18 ஆயிரம் ரதங்கள் என்று தேவகிக்கு சேசகம் செய்ய 200 பணிப்பெண்கள் என்று பிரம்மாண்டமாக திருமணம் முடிந்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு வரும்போது கம்சனுக்கு ஒரு அசரிரீ ஒலிக்கிறது.
அதில் கம்சா நீ உன் சகோதரிக்கு தேரோட்டி செல்கிறாய். ஆனால் இவளுடைய 8-வது ஆண் குழந்தைதான் உனக்கு காலனாக வரப்போகிறான் என்ற சத்தத்தை கேட்ட கம்சன் தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயற்சி செய்கிறான். உடனே தேவகியின் கணவரான வாசுதேவர் தன் மனைவியை காக்கும் பொருட்டு கம்சனே உனக்கு கேட்ட அந்த அசரிரீ உண்மை என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையை உன்னிடமே ஒப்படைத்துவிடுகிறோம். நீ என்னவேண்டுமோ செய்துகொள் என்று சொல்லி கம்சனிடம் இருந்து தேவகியின் உயிரை காப்பாற்றினார்.
அதன்பிறகு தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. வாக்கு தவறாத வாசுதேவர் சொன்ன சொல்லை தவறாமல் குழந்தையை கம்சனிடம் கொடுத்தார். அதற்கு கம்சன் உன்னுடைய 8-வது குழந்தையால் தான் எனக்கு மரணம். இந்த குழந்தை தேவை இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார். கிருஷ்ணரின் வருகைக்காக காத்திருக்க முடியாத நாரதர் வசுதேவர் உன்னை ஏமாற்றலாம் 7 வது குழந்தையை காட்டி இதுதான் 8-வது குழந்தை என்று கூறலாம். எனவே இருவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு. எந்த குழந்தையால் கூட உனக்கு ஆபத்து வரலாம் என்று கூறினார் நாரதர்.
நாரதர் பேச்சை கேட்டு பயந்த நாரதர் எந்த குழந்தையையும் நம்ப முடியாது வரிசையாய் எல்லா குழந்தையையும் கொன்றுவிட எண்ணினார். அதற்கு முதலில் தன்னுடைய தந்தையான உக்கிரசேனனை சிறையில் அடைத்து அரசனாக முடிசூடிக்கொண்டார். அதன்பிறகு வசுதேவரையும், தேவகியையும் சிறையில் அடைத்து அவர்களுக்கு பிறந்த 6 ஆண்குழந்தைகளையும் வரிசையாக வதம் செய்தார்.
தேவகி 7-வது முறையாக கர்பம் அடைந்தார். கிருஷ்ணருக்கு உதவியாக அனந்தனாகிய ஆதிசேஷன் தோன்றினார். இந்த குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவான் என்று எண்ணிய விஷ்ணுபகவான் தன்னுடைய யோக சக்தியால் தேவகியோட 7-வது கர்ப்பம் கோகுலத்தில் வாழும் வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகினியின் வயிற்றுக்கு மாற்றப்படுகிறது.
8-வது முறையாக ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திர வம்சத்தில் விஷ்ணு பகவானே பூமாதேவிக்கு வாக்களித்தபடி பூலோகத்தில் பிறக்கிறார். அவர் பிறந்ததும் நான்கு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் வசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி கொடுத்தார்.
வசுதேவரும், தேவகியும், கம்சனை பற்றிய பயம் துளியுமின்றி முழுமுதற்கடவுளான விஷ்ணுவை வணங்கினர். விஷ்ணு பகவான் கோகுலத்தில் உன் நண்பனான நந்தனுக்கும், அவனது மனைவி யசோதைக்கும் பிறந்த பெண்குழந்தையை எடுத்துவா நான் யசோதையின் மகனாய் கோகுலத்தில் வளர்கிறேன். உரிய காலம் வரும்போது கம்சனை வதம் செய்து உங்களையும் மீட்கிறேன் என்று கூறினார் விஷ்ணு.
விஷ்ணுவும் சிறைகாவலர்களை மயக்கமடைய செய்து வசுதேவரின் மூலம் கோகுலத்தில் யசோதையின் மகனாக கிருஷ்ணர் வளர்கிறார். வசுதேவர் நந்தனின் மகளை மதுராவிற்கும் எடுத்து வந்துவிடுகிறார். சிறையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து கம்சன் பெண் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து போகிறார்.
என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று அந்த பெண்குழந்தையை எடுத்து சுவற்றில் அடிக்கும் போது விஷ்ணுவின் இளைய சகோதரி துர்க்கையின் வடிவத்தில் காட்சி தந்து உன்னை கொல்லப்போகும் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது என்று கூறிவிட்டு அந்த பெண்குழந்தை மாயமாக மறைந்தது.
கிருஷ்ணர் கோகுலத்தில் மாயோண் கண்ணனாய் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த வெண்ணெய் திருடனாய், கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்து, ஆடிப்பாடி குழலூதி, நண்பர்களுடன் விளையாடி குறும்புத்தனம் செய்து காலத்தை கழித்து கோகுலத்திலேயே செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தார்.
ராதையுடன் காதல்கொண்டு சிறுவயதிலேயே பிரம்மதேவர் முன்னிலையில் இரண்டுபேருக்கும் திருமணம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. 13 வயதில் தன்னுடைய தாய்மாமனான கம்சனை கிருஷ்ணர் வதம் செய்தார். ராதைக்கும் அயன்கூட திருமணம் நடக்கிறது. கிருஷ்ணர் மதுராவிற்கு சென்றபின்னர் கோகுலத்திற்கு திரும்பிவரவில்லை, ராதையையும் சந்திக்கவில்லை.
கம்சனை வதம் செய்தபிறகு மதுராவில் அரசனாக முடிசூடிக்கொண்டு ஆட்சி செய்து வந்தார் கிருஷ்ணர். மாபெரும் பலசாலியான கம்சன் தன்னோட மருமகனால் கொல்லப்பட்டான் என்ற செய்து அறிந்த கம்சனின் மாமன் ஜராசந்தன் தன்னுடைய இரண்டு பெண்களும் விதவையானதற்கு காரணம் கிருஷ்ணர் தான் காரணம் அவரை கொன்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்தார்.
குதிரைப்படை, யானைப்படை என்று பல படைகளை உடைய மாவீரன் ஜராசந்தன். 17 முறை மதுரா மீது போர்தொடுத்து வருகிறார். ஆனால் கிருஷ்ணர் பிறந்ததற்கான காரணமே பூமாதேவியின் பாரத்தை குறைப்பது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தரின் படைகளை கிருஷ்ணரும், பலராமரும் சேர்ந்து தோற்கடித்தனர்.
அப்படியும் ஜராசந்தன் மற்ற நாட்டு படைகளை கூட்டிக்கொண்டு மதுரா மீது தொடர்ந்து போர்தொடுத்து சென்றார். ஜராசந்தனின் வெறி அடங்கவில்லை. கிருஷ்ணரின் வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று முடிசெய்கிறார். ஆனால் கிருஷ்ணர் நினைத்திருந்தால் ஜராசந்தனின் வம்சத்தையே அழித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நாட்டை பாதுகாக்க மனிதர்களும், அரக்கர்களும் போக முடியாதபடி. ஒரு கோட்டையை உருவாக்க முடிவு செய்கிறார்.
பாகவத நூலில் கிருஷ்ணர் கடலுக்கு மத்தியில் எவ்வாறு கம்பீரமான துவாரகையை உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமே வியந்துபோகிற அளவுக்கு யாருமே படை எடுத்து கிட்ட கூட நெருங்காதபடி ஒரு நகரத்தை உருவாக்க முடிவெடுக்கிறார்.
சாதாரன கட்டிடக்கலை நிபுணர்கள் வேண்டாம் என்று தேவசிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து ஆலோசனை கேட்டார். அதற்கு விஷ்வகர்மா நிலத்தில் வேண்டாம். கடலுக்கு நடுவில் அப்படி ஒரு நகரத்தை உருக்கலாம் என்று கிருஷ்ணரிம் சொல்கிறார். அதற்கு கிருஷ்ணர் கடல் அரசனிடம் கேட்டு குஜராத் கடலுக்கு நடுவில் ஒரு தீவை ஆக்கிரமித்து மிகப்பெரிய மாளிகையை விஷ்வகர்மாவால் கட்ட வைக்கிறார்.
நாம் பாகுபலி படத்தில் எவ்வாறு மிகப்பிரமாண்ட மாளிகைகளை பார்த்திருக்கிறோமே, அதேபோல் பிரமாண்டமான மாளிகையை கட்டினார்கள். கிட்டத்தட்ட 9 லட்சம் மாளிகைகள் கொண்ட அப்படி ஒரு கோட்டையை விஷவகர்மா இதுவரை கட்டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மாளிகை மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்தது.
எலாமே தங்கத்தாலும், வைரத்தாலும் செதுக்கி அரண்மணைகளை உருவாகினார்கள். எல்லா வகை வசதிகளுடனும் துவாரகை நகரம் உருவாக்கப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் எந்த தேவைக்காகவும் வெளியே செல்லாத அளவுக்கு அங்கு விவசாயம்,, வணிகம் ஆகிய துறைகள் சிறந்து விளங்கியது. ஒரு வளர்ச்சி அடைந்த செல்வசெழிப்பான கோட்டையை விஷ்வகர்மா, கிருஷ்ண்ருக்காக உருவாக்கி கொடுத்தார்.
கிருஷ்ணர் அந்த கிராமத்திற்கு துவாரகை என பெயரிட்டு யாதவ குல மக்களை மதுராவில் இருந்து துவாரகைக்கு குடியேற்றுகிறார். யாதவ குலமக்கள் அனைவரும் செல்வச்செழிப்புடனும், சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
- இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது.
- மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில், அத்திக்குளம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை பக்தர்கள் புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை புண்யாவசனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேச பலி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை, கலச ஸ்தாபனம், முதல் கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை இரண்டாம் கால பூஜை, சுவாமி கரிக்கோலம், சயனவாசம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மூன்றாம் கால பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
காலை 10 மணிக்கு விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், மகா அலங்காரம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. திருக்கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் அருகே அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்.
- சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன.
* குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னை கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்.
* குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர்.
*ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.
* கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஒருநாள் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப்பற்றிக் குறை கூறினார்கள்.
'அம்மா! உங்கள் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித் தின்கிறான். உரலின் மீதேறி, உரியில் உள்ள பானைகளைக் குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்' என்று புகார் செய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அப்பாவியாய் நடித்து தாயை நம்ப வைத்தார்.
* ஒருமுறை வெண்ணெய் திருடும்பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகக் கூறினார். தான் துடைத்து விடுவதாகக் கூறினார். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.
அங்கு வந்த யசோதையிடம், 'அம்மா! இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெ யைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறாள். இவளது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்' என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, 'நீ தவறு செய்துவிட்டு என் குழந்தைமீது பழி போடுகிறாயா?' என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகர வேணி 'அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெ யைத் தடவி விட்டு ஏமாற்றுகிறான்' என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.
* ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, 'கிருஷ்ணா! நீ மண்ணைத் தின்றாயா?' என்று அதட்டிக் கேட்டாள். 'இல்லை யம்மா' என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான். ' அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு' என்றாள் யசோதை. கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது.
சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளி கைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பில் இருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இது போன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.
- ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
- அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
கிருஷ்ண பரமாத்மாவை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் முறை
கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக் கண்ணனின் பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம்.
அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும். துவாதச மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
- ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
- ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும். சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும்.
பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றில் இருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள். ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல் களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் 'ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள். முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.
பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
- மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- 2-ம் திருவிழாவில் இருந்து 6-ம் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் நடை பெற்று தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், டி.வி.எஸ். ஸ்ரீனிவாசா சேவா அறக்கட்டளை இயக்குனர் விஜயகுமார், பி.ஜி. மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் வி.சி.ஜெயந்திநாதன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காலை10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, நடக்கிறது. இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ந்தேதி 5-ம் திரு விழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
9-ந்தேதி 6-ம் திருவிழா அன்று காலை கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா நடைபெறும். 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சேர்கிறார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
11-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகி்ற 13-ந்தேதி (புதன் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.
2-ம் திருவிழாவில் இருந்து 6-ம் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30-க்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
7-ம் திருவிழா 10-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-18 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 10.38 மணி வரை பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 3.39 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. பெருவயல் முருகப்பெருமான் உற்சவ கொடியேற்று விழா. திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரருக்கு சிறப்பு சோமவார அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-வெற்றி
கடகம்-உற்சாகம்
சிம்மம்-அனுகூலம்
கன்னி-புகழ்
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- ஊக்கம்
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-சாதனை
மீனம்-பயணம்
- காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
- திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.s
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.
இயைடுத்து காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.
- வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
- மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த சதுர்த்தி தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு உங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். இந்த பூஜை விரதம் இருந்து செய்வது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.
இதற்கு நமக்கு 11 அகல் விளக்குகள் தேவை. இதற்கு புதிதாக வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டில் இருக்கும் பழைய அகலையே கூட தேய்த்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளலாம். அடுத்து 11 அரச இலை அல்லது வெற்றிலை இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் விநாயகருக்கு பிடித்தமான நைவேதியம் ஏதாவது செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கான நேரமும் மிகவும் முக்கியம். இதை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, அல்லது 8.15-ல் இருந்து 9.15 வரையும், காலை 10.45 முதல் 11.45 வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 வரையும் இந்த நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த பூஜை செய்து கொள்ளுங்கள்.
இந்த பூஜை செய்ய நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 11 இலையும் 11 அகல் விளக்கையும் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு இரண்டில் ஏதாவது ஒரு திசையில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல அனைத்து அகலையும் வெற்றிலை அல்லது அரச இலை மேல் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வைத்து விடுங்கள்.
வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு பிடித்த நைவேதியத்தை வைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் என சகலமும் வைத்து பூஜையை உங்களால் முடிந்த வரையில் சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் செய்த பிறகு இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திஹி ப்ரசோதயாத் என்ற இந்த மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்து விடுங்கள். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் வரையாவது எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பூஜை செய்யும் நாளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும்.
- குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
- சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.
இன்று மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கேது தோஷம், சந்திர தோஷம் நீங்கும்.
சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய அருள் வளர்ந்தது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் நீங்கவும் விநாயகரை வழிபடலாம்.
விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம்.
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண
கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல
சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம்
கணபதயே ஸ்வாஹா."
இந்த கணபதி மந்திரத்தை சங்கடஹர சதுர்த்தி முடிவதற்குள், அதாவது, காலை முதல் மாலைக்குள் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் சொல்வது சிறப்பானதாகும். சுப காரியங்கள், மங்கள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், புதிய ஆடைகள் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது என எந்த சுப காரியம் தொடங்குவதாக இருந்தாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று தொடங்கலாம். அப்படி செய்வதால் வீட்டில் தொடர்ந்து சுபகாரியங்கள் நிகழும்.
- முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
பணிகள் முடிவடைந்த நிலயைில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைப்பதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, கடந்த 31-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 1-ந் தேதி 2,3-ம் கால யாகசால பூஜையும், நேற்று 4, 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தோளில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.
தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணிக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.






