search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறுவாபுரி முருகன் கோவில் திருக்கல்யாணம்-  குவிந்த பக்தர்கள்
    X

    சிறுவாபுரி முருகன் கோவில் திருக்கல்யாணம்- குவிந்த பக்தர்கள்

    • காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
    • திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.s

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

    இயைடுத்து காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×