என் மலர்tooltip icon

    வழிபாடு

    • மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வசேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.

    திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.

    • விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்.
    • கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார்.

    திருப்பதி:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. சனாதன கருத்துக்கு ஆதரவாக 'கோவிந்த கோடி' எழுதும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வரும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் அளிக்கப்படும், எனத் தெரிவித்தார்.

    இந்தநிலையில் திருப்பதியில் விநாயக சாகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'கோவிந்த கோடி' விநாயகரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கோவிந்த கோடியை விநாயகப்பெருமான் எழுதுவதுபோல் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நன்றாக இருக்கிறது. சிலை நிறுவப்பட்டுள்ள மண்டபத்தின் நான்கு பக்கமும் கோவிந்த கோடி நாமம் எழுதி வைத்திருப்பது சிறப்பு.

    விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும். வெங்கடாசலபதி, விநாயகர் ஆசியோடு திருப்பதி நகரம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார்.அதைத்தொடர்ந்து அறங்காவலா் குழு தலைவர், தெலுங்கில் எழுதப்பட்ட ஏராளமான கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார். அறங்காவலர் குழு தலைவர், சாமி தரிசனம் செய்தபோது மேயர் ஷிரிஷா, கமிஷனர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    • பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை நடக்கிறது.
    • இன்று மாலை முதல் நாளை இரவு வரை மலை பாதையில் பைக்குகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 3-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் முத்து பந்தல் வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    4-வது நாளான இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை கல்ப விருட்ச வாகன சேவை நடைபெற்றது. மாட வீதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலை மேளதாளம் முழங்க பெரிய ஜூயர் மண்டபத்திற்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர் ஆண்டாள் மாலை தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது.

    இதையடுத்து இரவு சர்வ பூபால வாகனம் சேவை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை நடக்கிறது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    இன்று மாலை முதல் நாளை இரவு வரை மலை பாதையில் பைக்குகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 64,277 பேர் தரிசனம் செய்தனர். 24,340 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.89 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்.
    • கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார்.

    திருப்பதி:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. சனாதன கருத்துக்கு ஆதரவாக 'கோவிந்த கோடி' எழுதும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வரும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் அளிக்கப்படும், எனத் தெரிவித்தார்.

    இந்தநிலையில் திருப்பதியில் விநாயக சாகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'கோவிந்த கோடி' விநாயகரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கோவிந்த கோடியை விநாயகப் பெருமான் எழுதுவதுபோல் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நன்றாக இருக்கிறது. சிலை நிறுவப்பட்டுள்ள மண்டபத்தின் நான்கு பக்கமும் கோவிந்த கோடி நாமம் எழுதி வைத்திருப்பது சிறப்பு.

    விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும். வெங்கடாசலபதி, விநாயகர் ஆசியோடு திருப்பதி நகரம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார்.அதைத்தொடர்ந்து அறங்காவலா் குழு தலைவர், தெலுங்கில் எழுதப்பட்ட ஏராளமான கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார். அறங்காவலர் குழு தலைவர், சாமி தரிசனம் செய்தபோது மேயர் ஷிரிஷா, கமிஷனர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    • மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வ சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.

    திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.

    • உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் பவனி.
    • விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

    • 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அவதாரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 4 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 10.52 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 1.10 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நாட்டரசன் கோட்டை குணசீலம் தலங்களில் ஸ்ரீ எம்பெருமான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், ஆழ்வார் ஹம்ச வாகனத்திலும் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி கமலத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனக் காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அவதாரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-தன்மை

    மிதுனம்-நட்பு

    கடகம்-நலம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-ஆதாயம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-நற்செய்தி

    தனுசு- ஓய்வு

    மகரம்-வெற்றி

    கும்பம்-உழைப்பு

    மீனம்-கவனம்

    • ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர்.
    • காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.

    ஒருநாள் காளிதாசர் வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். சிறிதுதூரம் சென்ற பிறகு காளிதாசருக்கு தாகம் எடுத்தது. அப்போது சிறிது தூரத்தில் கிணற்றில் இருந்து ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர். நேராக அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் காளிதாசர். அந்த பெண்ணை பார்த்து காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.

    கொஞ்சம் பருகுவதற்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்டார். அந்த பெண்ணும் நான் உங்களுக்கு தண்ணீர் தருகிறேன். ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் என்றாள்.

    உடனே காளிதாசர் அந்த பெண்ணிடம் நான் ஒரு பயணி என்று சொன்னார். இந்த உலகத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் சந்திரன் மற்றொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு-பகல் என்று பயணிப்பவர்கள் என்று அந்த பெண் கூறினார்.

    உடனே காளிதாசர் சரி... நான் ஒரு விருந்தாளி என்று வைத்துக்கொள்ளுங்கள் என்றார். இந்த உலகத்தில் இரண்டு விருந்தினர்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று செல்வம், இன்னொன்று இளமை. இவர்கள் இரண்டுபேரும் தான் விருந்தினர்களாக வந்துவிட்டு உடனே சென்றுவிடுவார்கள்.

    இந்த பதிலை கேட்டதும் காளிதாசருக்கு எரிச்சல் வந்தது. உடனே காளிதாசர் உனக்கு தெரியுமா பெண்ணே நான் மிகவும் பொறுமைசாளி என்று கூறினார். அந்த பெண் அந்த பொறுமைசாளியிலும் இரண்டு பேர்கள் மட்டும் தான் உள்ளனர். ஒன்று பூமி, இன்னொன்று மரம். எவர் மிதித்தாலும் தாங்குவது பூமி. யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்-கனிகளை கொடுப்பது மரம். இந்த இரண்டே பேர் தான் உலகத்தில் பொறுமைசாளிகள் என்று கூறினாள்.

    இதைக்கேட்டதும் கோபம் அடைந்த காளிதாசர், நான் ஒரு பிடிவாதக்காரன் என்று அந்த பெண்ணிடம் கூறினார். அதற்கும் அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு பிடிவாதக்காரர்கள் தான் உள்ளனர். ஒன்று முடி, மற்றொன்று நகம். இந்த இரண்டும் எத்தனைமுறை வேண்டாம், வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.

    இதை கேட்டுக்கொண்டெ இருந்த காளிதாசருக்கு தாகம் ரொம்ப அதிகரித்தது. உடனே கோபமுடனும், எரிச்சலுடனும் அந்த பெண்ணை பார்த்து உனக்கு தெரியுமா நான் ஒரு முட்டாள் என்று கூறினார் காளிதாசர். உடனே அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு முட்டாள்கள் தான் உள்ளனர். ஒருவர் இந்த நாட்டை ஆளும் அரசன். மற்றொருவர் அந்த அரசனுக்கு துதிபாடும் அமைச்சர் என்று கூறினாள்.

    இதைக்கேட்டதும் காளிதாசருக்கு என்னசெய்வது என்று தெரியாமல் கையை கூப்பி வணங்கியதும். காளிதாசரை பார்த்து அந்த பெண் மகனே என்று சொன்னாள். அந்த குரல் கேட்டதும் காளிதாசர் எதுவும் புரியாமல் அவரை நிமிர்ந்து பார்த்தார். பார்த்ததும் மலைத்துபோய் நின்றார்.

    சரஸ்வதி தேவி தான் அங்கு நின்றுகொண்டிருந்தார். சரஸ்வதிதேவியை பார்த்து காளிதாசர் கையைகூப்பு வணங்கினார். அதற்கு சரஸ்வதி தேவி காளிதாசா... எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கிறானோ, அவனே மனிதப்பிறப்பின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு என்று கூறிவிட்டு தண்ணீர் குடத்தை காளிதார் கையில் கொடுத்துவிட்டு சரஸ்வதி தேவி மறைந்து சென்றாள்.

    இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றாள் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மனிதனாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்தி உள்ளது.

    • பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
    • திருப்பதியில் நேற்று 67,267 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. அன்று இரவு பெரிய சேஷா வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்தனர்.

    இன்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தனர்.

    பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் எழுப்பினர்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் 2 அறைகளில் மட்டுமே பக்தர்கள் உள்ளனர்.

    மேலும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் குறைந்து 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    திருப்பதியில் நேற்று 67,267 பேர் தரிசனம் செய்தனர். 20,629 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நியாயமாக முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவானாலும் உடனடியாக நிறைவேறும்.
    • வீட்டிற்கே தேடி வந்து அருள் செய்வாள் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.

    வாராஹியிடம் நியாயமாக முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவானாலும் உடனடியாக நிறைவேறும். தூய எண்ணத்தோடு விளக்கேற்றி வைத்து, வாராகி நம்முடன் இருப்பதாக நினைத்து நம்பிக்கையுடன் வழிபட்டால், வாராஹி அம்மன் நம்முடைய வீட்டிற்கே தேடி வந்து அருள் செய்வாள் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.

    * பஞ்சமி திதி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, முதலில் குலதெய்வம் மற்றும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு வீட்டில் வாராஹி படம் இருந்தால் அதற்கு செவ்வரளி மலர் அல்லது சிவப்பு செம்பருத்தி மலர் சூட்ட வேண்டும்.

    * வாராஹி படம் இல்லாதவர்கள், விளக்கேற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி இருப்பதாக நினைத்து, நம்முடைய வேண்டுதல்களை சொல்ல வேண்டும்.

    * வாராஹிக்கு உரிய துதிகள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.

    நைவேத்தியம்

    பச்சை கற்பூரம், ஏலக்காய் கலந்த பால், பானகம், தோளுடன் கூடிய உளுந்தால் செய்யப்பட்ட வடை, சர்க்கரை வள்ளி கிழங்கு, தயிர் சாதம், எள் உருண்டை படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் சிவப்பு நிற மாதுளை முத்துக்களை உதித்து படைக்கலாம்.வெற்றிலை,பாக்கு, பூ, பழம் வைத்து வழிபடலாம். தேங்காய் பூ அல்லது சர்க்கரை கலந்த தேங்காய் துருவலை நைவேத்தியமாக படைக்கலாம்.

    ஓம் ச்யாமளாயை வித்மஹே

    ஹல ஹஸ்தாயை தீமஹி

    தன்னோர் வாராஹி ப்ரசோதயாத்

    என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து வணங்க வேண்டும்.

    தொழிலில் ஏற்படும் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, தீராத நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் உடனடியாக தீரும். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள், காரண காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும், வழக்குகள் தீர, செல்வம் பெருக வேண்டும் என நினைப்பவர்களும் வாராஹி அம்மனை வழிபட பலன் கிடைக்கும். எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதை தீர்த்து, நன்மைகளை வழங்குவாள் வாராஹி.

    • வருடந்தோறும் ஏராளமான உற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
    • தற்போது வருடாந்திர உற்சவமாக மாற்றப்பட்டுள்ளது.

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடந்தோறும் ஏராளமான உற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். திருப்பதிக்கு சென்றால் கூட்ட நெரிசலில் வேகமாக சென்று மூலவர் வெங்கடேச பெருமாளை மட்டுமே அவசரமாக பார்த்துவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் மூலவரின் காலடியில் சிறிய விக்ரஹமாக இருக்கும் போக ஸ்ரீனிவாசரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இவருக்கு வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு அபிஷேக உற்சவம் நடத்தப்படும்.

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

    போக ஸ்ரீநிவாசரின் பாதத்திற்கு கீழ் ஒரு பீடம் உள்ளது. இதில் யந்திரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற யந்திரம் மூலவரான துருவ பேரரின் திருவடிக்கு கீழும் உள்ளது. போக ஸ்ரீநிவாசர், மூலவரான துருவ பேரரின் திருவடிகளுக்கு அருகிலேயே காட்சி தருகிறார். ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, போக ஸ்ரீநிவாசர் மற்றும் விஸ்வசேனா ஆகியோருக்கு இந்த சகஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்படும்.

    ஆரம்பத்தில் வாரந்திர சேவையாக நடத்தப்பட்டு வந்த இந்த சகஸ்ர கலசாபிஷேகம், தற்போது வருடாந்திர உற்சவமாக மாற்றப்பட்டுள்ளது. சகஸ்ர கலசாபிஷேகத்தின் போது தங்க கதவிற்கு வெளியே போக ஸ்ரீநிவாசரின் விக்ரஹரம் எடுத்து வரப்படும். அப்போது பட்டு நூலின் ஒரு பகுதி போக ஸ்ரீனிவாசரின் பாதத்துடனும், நூலின் மறுமுனை மூலவருடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த போக ஸ்ரீனிவாசரின் திருமேனி 1400 ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. தினமும் சயன மண்டபத்தில் இந்த போக ஸ்ரீனிவாச மூர்த்தியே ஊஞ்சலில் கண் துயில வைக்கப்படுகிறார். அதுனால் இவருக்கு சயன பேரர் என்ற திருநாமமும் உண்டு. இவர் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அருளை வாரி வழங்கக் கூடியவராக திருமலையில் அருள் செய்கிறார்.

    தோமாலை சேவையின் போதும் ஏகாந்த சேவையின் போதும் போக ஸ்ரீனிவாசப் பெருமாளின் விக்ரஹம் தான் பயன்படுத்தப்படுகிறது. இவரே மூலவரான துருவ பேராவின் சக்தியை தூண்டு பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக சொல்லப்படுகிறது. இவரே மூலவரின் பிரதிநிதியாக உற்சவங்கள் காண்பதாகவும் சொல்லப்படுகிறது.

    ×