என் மலர்
வழிபாடு
- முருகன் கோவில்களில் சிறப்ப அபிஷேகம், அலங்காரம்.
- ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 15 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நள்ளிரவு 12.55 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: அஸ்தம் (நாள் முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருவாரூர் தியாகராயர் உற்சவம் ஆரம்பம். கோவை கோனியம்மன் திருக்கல்யாணம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சாற்றுமுறை, நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. எரிபத்த நாயனார் குருபூஜை. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக் கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-கடமை
கடகம்-வரவு
சிம்மம்-பக்தி
கன்னி-பாசம்
துலாம்- உண்மை
விருச்சிகம்-தேர்வு
தனுசு- நிம்மதி
மகரம்-தனம்
கும்பம்-பரிசு
மீனம்-சுகம்
- காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.
- 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக இது உள்ளது. இங்கு மூலவர் 8 திருக்க ரங்களை உடை யவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது.

இந்த கோவிலில் கும்பாஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
- வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன.
1. வேங்கட மலை:
`வேம்' என்றால் பாவம், `கட' என்றால் `நாசமடைதல்'. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு `வேங்கட மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் `சேஷமலை' என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை:
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது `வேத மலை' எனப்பட்டது.
4. கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது `கருட மலை' எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது `விருஷப மலை' எனப்பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை `அஞ்சன மலை' எனப்படுகிறது.
7. ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது `ஆனந்த மலை' என்று பெயர் பெற்றது.
திருப்பதி மலைகளில் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி
இவர் தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்கிராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி
இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கவுதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோவிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி
கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு-செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி
இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என் றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றா ண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந் தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி
இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர். சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.
- நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
- எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.
யார் ``ஒம்"., ``ஓம்", ``ஒம்" என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். ``ஓம்" ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்.. ஓம்" என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.
இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும். எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும். மன சாந்தி ஏற்படும். உலகத்தோடு ஒட்டி வாழலாம். வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜெபிக்காமல் மனதிற்குள் ``ஒம்"., ``ஓம்", ``ஒம்" என ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜெபிக்கலாம். கிழக்கு பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜெபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும். எந்த மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.
உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் ``ஓம்" என எழுத அவர்கள் கல்வி மேம்படும். சுத்தமான பசுஞ்சாண விபூதியில் ``ஓம்" என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும். பிறரை ஆசிர்வாதிக்கும்போது "ஓம்" என்னும் மின்சக்தி தான், நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பி றருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ``ஒம்"., ``ஓம்", ``ஒம்" என்று ஒரு லட்சம் முறை ஜெபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும். அப்போது இருவருக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரியும்.
கர்ப்பமான தாய்மார்கள் ``ஒம்" , ``ஓம்", ``ஓம்" என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும் போதும் எந்த மந்திரமும் ஜெபிக்கக் கூடாது. மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.
மூச்சை உள்ளே இழுக்கும் போது ``ஓம்", ``ஓம்", ``ஓம்" என ஜெபிக்கலாம். அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும். ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது. அதாவது கும்பகம் செய்யக்கூடாது.
- காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களாலேயே உணர முடியும்.
- 10 உடல்நல பயன்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
காயத்ரி மந்திரத்தில் உள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, படிக்கும் போது வலிமை வாய்ந்த சக்தி உருவாகும் வகையில் அந்த வார்த்தைகளை ஒரு மந்திரமாக உருவாக்கியது ரிஷிகளும், முனிவர்களும் ஆவார்கள். காயத்ரி மந்திரத்தில் பல முக்கியத்துவங்கள் அடங்கி உள்ளது.
சரியான முறையில் உச்சரிக்கும் போது காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களாலேயே உணர முடியும். காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, கண்களை மூடிக்கொண்டு, நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வாரத்தையின் மீது மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அதன் பின் பாருங்கள் நடக்கபோகும் அதிசயங்களை.
முதன் முதலில் வேதங்களில் எழுதப்பட்ட இந்த மந்திரம் 24 அசைகளைக் கொண்டுள்ளது. இவைகள் நம் உடலின் மீது உளவியல் ரீதியான தாக்கத்தையும், உடலியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
இந்த மந்திரத்தால் அப்படி என்ன தான் நன்மைகள் கிடைக்க போகிறது என வியப்பாக உள்ளது தானே! அதைத் தான் பார்க்கப் போகிறோம். காயத்ரி மந்திரம் கூறுவதால் ஏற்படும் 10 உடல்நல பயன்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா.
மனதை அமைதியாக்கும் இந்த மந்திரம் ஓம் எனும் சொல்லோடு தொடங்கும். இந்த ஒலியின் விளக்கக் கூற்று உங்கள் உதடு, நாக்கு, மேல் வாய், நாக்கின் பின்புறம் மற்றும் மண்டை ஓட்டின் வழியாக அதிர்வை ஏற்படுத்தும். இது மனதை மிகவும் சாந்தப்படுத்தும் என்றும் ஹார்மோன்களை அமைதிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவர் மனதை ஒருமுகப்படுத்தி அதனால் அவர் மனம் அமைதியடையும் வண்ணம் காயத்ரி மந்திரத்தின் அசைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் உங்கள் தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் அதிர்வால் நாக்கு, உதடு, குரல் நாண், மேல் வாய் மற்றும் மூளையில் உள்ள இணைக்கும் பகுதிகள் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படும்.
இந்த அதிர்வுகள் மூளையின் அடிப்பகுதியான ஹைப்போதலாமஸை (நோய் எதிர்ப்பு சக்தி உள்பட உடலில் உள்ள பல செயல்பாடுகளையும் சுரப்பதையும் சீராக வைத்திருக்கும் பொறுப்பை கொண்டுள்ள சுரப்பி) மிகவும் சிறப்பாக செயல்பட வைக்கும்.
சந்தோஷ ஹார்மோன்கள் சுரப்பதற்கும் இந்த சுரப்பியே காரணமாக உள்ளது எனவும் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதனால் இதுவே உடலையும் மனதையும் இணைக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது.
நீங்கள் எந்தளவுக்கு சந்தோஷமாக உள்ளீர்களோ அந்தளவிற்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். இது போக, இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உங்கள் உடலில் உள்ள சக்கரங்களை ஊக்குவிக்க உதவும். உடலில் உள்ள குறிப்பிட்ட சில முக்கியமான நிணநீர் கணுக்கள் மற்றும் ஒட்டுமொத்த உடலின் செயற்பாடுகள் சீராக நடைபெற உதவும் உறுப்புகளில் இந்த சக்கரங்கள் ஒழுங்குப்படுத்திக் கொள்ளும்.
இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். அதற்கு காரணம், அனைத்து சக்கரங்களும் ஒழுங்குப்படுத்தி கொள்வதால், நோய்கள் இல்லாமல் இருக்கும் உங்கள் உடல்.
ஒருமுனைப்படுத்துதலும் கற்பதும் அதிகரிக்கும் மந்திரங்களை உச்சரித்தவர்களின் ஒருமுனைப்படுத்தும் ஆற்றலும் நினைவாற்றலும் சிறப்பாக இருந்ததாக, இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யோகா வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு காரணம், காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, அதனால் ஏற்படும் அதிர்வு முதலில் உங்கள் முகத்திலும் தலையிலும் உள்ள முதல் மூன்று சக்கரங்களை (துரியம், ஆக்கினை மற்றும் விசுத்தி) மற்றும் செயல்பட வைக்கும்.
இந்த மூன்று சக்கரங்களும் உங்கள் ஒருமுனைப்படுத்தும் ஆற்றலை மேம்படுத்த உதவும். அதற்கு காரணம், அவைகள் உங்கள் மூளை மற்றும் கூம்புச் சுரப்பி (துரியம் சக்கரம்), கண்கள், சைனஸ், கீழ் தலை, கபச் சுரப்பி (ஆக்கினை சக்கரம்) மற்றும் தைராய்ட் சுரப்பி (விசுத்தி சக்கரம்) ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது. இவைகளை செயல்பட தொடங்கினால், அதனால் உண்டாகும் அதிர்வுகள் சம்பந்தப்பட்ட சுரப்பிகளை ஊக்குவிக்கும். இதனால் ஒருமுனைப்படுத்துதலும் கவனமும் மேம்படும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் ஒருவர் சுவாசிப்பது மெதுவாகும். இதனால் அவரின் இதயத் துடிப்புகள் ஒத்திசைத்து சீராக உதவுவதால், ஆரோக்கியமாக இருக்கலாம் என பிரிட்டிஷ் ஜர்னல் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.
நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, உங்கள் நாக்கு, உதடு, குரல்நாண், மேல் வாய் மற்றும் மூளையையும் அதனை சுற்றியுள்ள இணைக்கும் பகுதிகள் மீது ஏற்படும் அழுத்தத்தினால் அதிர்வு உண்டாகும். இது உங்கள் நரம்பு செயல்பாடுகளை வலுவடைய செய்து ஊக்குவிக்கவும் உதவிடும்.
மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க உதவும் மந்திரத்தை உச்சரித்தால் அழுத்தம் தொடர்பான விஷத்தன்மை பாதிப்பை தடுக்க உதவும்.
உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதற்கு மட்டும் உதவுவதோடு மட்டுமல்லாது, தொடர்ச்சியான அழுத்தத்தால் உடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்யவும் உதவும். சீரான முறையில் உச்சரித்து வந்தால் அழுத்தம் ஏற்படாமல் இருப்பதால், காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மனதை வலுவடையச் செய்து மன அழுத்தத்தைப் போக்கும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உங்கள் மூளை ஊக்குவிக்கப்படும். இதனால் அமைதி கிட்டும், அதிக கவனத்துடனும் இருக்கலாம். மன அழுத்தத்தை போக்கி அதில் இருந்து மீண்டு வரவும் காயத்ரி மந்திரம் உதவுகிறது.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் சஞ்சாரி நரம்பின் செயல்பாடு ஊக்குவிக்கப்படும். மன அழுத்தம் மற்றும் வலிப்பு நோய்க்கான பொதுவான சிகிச்சை இதுவாகும் என இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யோகா என ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இது போக, இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், எண்டார்பின்ஸ் மற்றும் இதர அமைதிப்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பதற்கும் உதவிடும். இதனால் மன அழுத்தம் வராமல் இருக்கும்.
இது போக, ஆழமாக சுவாசிக்கும் போது, உங்கள் சருமத்திற்கு அதிகமாக ஆக்சிஜென் கிடைக்கும். உங்கள் உங்கள் சருமம் இளமையுடனும் பொழிவுடனும் காணப்படும்.
ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, ஒருவர் ஆழமாக சுவாசித்து, சிறிது நேரத்திற்கு மூச்சை அடக்க வேண்டும். இதனால் நுரையீரல் வலுவடையும். அதனால் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கும் நிவாரணமாக விளங்கும்.
- பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கும் வழக்கம் காலம்காலமாக உள்ளது.
- தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது.
கட்டுமான பணிகளை தொடங்கும் முன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கும் வழக்கம் காலம்காலமாக உள்ளது. அதற்காக பொருத்தமான நாள், நட்சத்திரம் போன்ற விஷயங்களை பலரும் தேர்வு செய்வது நடைமுறையாக உள்ளது. நான்கு திசைகளிலும், எந்த ஒரு திசையிலும் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான தலைவாசல் அமைக்கப்படலாம். அதற்கேற்ப நல்ல நாட்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார்.
இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம். அதன்படி மனைகோல நல்ல நேரங்கள், வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களின் பட்டியல் இதோ:-
வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள்
சித்திரை 10-ம் தேதி - காலை 8.00 9:30
வைகாசி 21-ம் தேதி - காலை 9:12 10:42
ஆடி 11-ம் தேதி - காலை 6:48 - 8:18
ஆவணி 6-ம் தேதி - மாலை 2:24 3:54
ஐப்பசி 11-ம் தேதி - காலை 6:48 8:18
கார்த்திகை 8-ம் தேதி - காலை 10:00 -11:30
தை 12-ம் தேதி - காலை 9:12 10:42
மாசி 22-ம் தேதி - காலை 9:12 - 10:42
மேற்கண்ட மாதம், நாள் மற்றும் நேரம் விவரங்கள் எல்லா வருடத்திலும் நிலையானதாக இருக்கும். மாற்றமில்லாத இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது என்பது ஐதீகம்.
மேற்கண்ட நாட்களில் பூஜை போட முடியாவிட்டால் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்து நல்லநாளில் பூஜை செய்யலாம்.
வடக்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை தேய்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்குவது கூடாது.
கிழக்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை வளர்பிறை நவமி முதல் சதுர்த்தசி முடிய உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.
தெற்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை பவுர்ணமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கக் கூடாது.
மேற்கு தலைவாசல் வீடுகளுக்கான மனை கோலும் பணிகளை அமாவாசை முதல் வளர்பிறை அஷ்டமி வரை உள்ள நாட்களில் தொடங்கி செய்வது கூடாது.
மனை கோலும் நேரத்தில் பஞ்சாங்கம் என்ற 5 அங்கங்களில் ஒன்றான யோகம் என்ற அம்சம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனை கோல ஏற்ற 14 யோகங்களாவன:
பிராம்மியம், மகேந்திரம், சாத்தியம், சிவம், சுப்பிரம், ஆயுஷ்மான், சவுபாக்கியம், துருவம், வைதிருதி, சோபனம், சுபம், பிரீதி, சித்தம், சித்தி ஆகியவையாகும்.
இந்த யோகங்கள் அமைந்த சுப நேரத்தில் மனை கோலுவது பல நன்மைகளை உண்டாக்கும் என்று வாஸ்து நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
- வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம்.
- பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது.
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார். அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
- சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 14 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 10.59 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: உத்திரம் நாளை விடியற்காலை 4.10 மணி வரை. பிறகு அஸ்தம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கோவை கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா. குடந்தை ஸ்ரீசாரங்கபாணி விடையாற்றி உற்சவம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பணிவு
மிதுனம்-பரிசு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-வெற்றி
கன்னி-லாபம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-சுகம்
தனுசு- மேன்மை
மகரம்-பரிவு
கும்பம்-களிப்பு
மீனம்-உவகை
- மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
- உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.
கடலூர்:
மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு கடலூா் முது நகா் மீன்பிடி துறை முகத்தில் இரவு நேர மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம். இதில், மீனவா் கிராமங்களில் பல்வேறு கோவில்களில் இருந்தும் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.
மின்விளக் குகள், பூக்களால் படகுகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் கடலில் உற்சவா்கள் வலம் வருவது வழக்கம். இதன்படி, தைக்கால் தோணித்துறையில் கருப்ப முத்துமாரியம்மன் படகில் எழுந்தருளி உப்பனாற்றில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல மீன்பிடி துறைமுகத்தில் தைக்கால் தோணித்துறை கெங்கை அம்மன், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளி ரியம்மன், சலங்கைக்காரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை முத்துமாரியம்மன், அக்கரைக்கோரி கண்ணனூா் மாரியம்மன் ஆகிய உற்சவா்கள் படகுகளில் எழுந்தருளி வலம் வந்தனா்.
பின்னா் மீன்பிடி துறை முகத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதனால், துறைமுகம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மேள தாளங்கள் முழங்கிட வாண வேடிக்கையுடன் சாமிகள் படகுகளில் கடற்கரையோரமாக உலாவந்து துறை முகம் மீன்பிடித்தளத்தில் நிறுத்தப்பட்டது.
விழா மிகவும் ரம்மியமாக இருந்ததால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நடை பெற்ற இந்த மாசி மக திருவிழாவில் பல்லாயி ரக்கணக்கானோர் குவிந்து விடிய விடிய சுவாமி தரிசனம்
செய்தனர்.
- 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
- 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா வில் குடவருவாயில் தீபாரா தனையும், 7-ம்திருவிழாவில் காலையில் வெட்டி வேர் சப்பர பவனியும், மதியம் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.
8-ம்திருவிழா அன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மதியம் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12-ம் திருவிழாவான இன்று இரவு 7மணியளவில் சுவாமி அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
- பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.
பூஜைகளின் போது கோவில்களில் கடவுளின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,
"ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே"
என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.
பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீடத்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.
பூஜைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது. அது ஆணவ மலம் எனும் தடையாகும்.
ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.
உலகத்தில் வெளிச்சம் வருதலும், இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.
`ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும்.
இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்' என்ற பொருளில்;
`விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!"
என்று திருமூலர் பாடியுள்ளார். `விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்' என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.
பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப்பெறுகின்றன.
நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப்பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.
ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரஸ்வதியையும், சுவாகாதேவியையும் குறிக்கும்.
ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.
1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.
கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.
தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் 'ஓம்' என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.
தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.
- அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
- திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.
சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?
உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்னத்தில்- ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஐந்தில்- ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.
உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உரிய, முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெறவில்லை என்றால், உங்களுக்கு வாழ்நாள் முழுக்க, தடைகள், முட்டுக்கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான்.
உங்கள் பரம்பரையின், ஒட்டு மொத்த பாவக் கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து, அதன்பிறகு உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குல தெய்வம்- உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க தன் உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.
சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?
இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்பசாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவாயில்லை.
அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம். இல்லையா, திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.
இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.






