என் மலர்
கோவில்கள்
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்றே சொல்லலாம்.
சபரிமலை :
இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார்.
எருமேலி :
இங்கு ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.
ஆரியங்காவு :
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கேரளா மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார் ஐயப்பன்.
அச்சன்கோவில் :
செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் கல்யாண சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
பந்தளம் :
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.
குளத்துப்புழா:
செங்கோட்டையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலை வில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர் கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, தொழில்விருத்தியும் உண்டாகும்.
மருத மரம் நிறைந்த பகுதியை ‘அர்ச்சுனம்’ என்பார்கள். ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் - மல்லிகார்ச்சுனம் (தலை மருது), திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம் (இடைமருது), திருப்புடைமருதூர்- புடார்ச்சனம் (கடைமருது).திருப்பம் தரும் திருவிடைமருதூர்இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்புவாய்ந்த சன்னிதி உள்ளது.
ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று இந்தத் திருத்தலம். இந்த சன்னிதியில் மகா மேரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளின் திருநாமம் ‘பெருமுலையாள்’, ‘ப்ரஹத் சுந்தர குஜாம்பிகை’ என்பதாகும். மூலவர் சன்னிதிக்கு தென்பகுதியில் விநாயகர் சன்னிதி உள்ளது. இவர், மகாலிங்கப் பெருமானை பஞ்சாட்சர விதிப்படி பூஜித்து வருகிறார்.
மேலும் இந்த இடத்தில் இருந்து தனது அருட்சக்தியால் உலகை விநாயகர் ஆள்வதாக சொல்கிறார்கள். எனவே இவருக்கு ‘ஆண்ட விநாயகர்’ என்று பெயர்.மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, தொழில்விருத்தியும் உண்டாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் மூலவர் ‘மகாலிங்கம்’, ‘மகாலிங்கேஸ்வரர்’ என்று அழைக்கப்படு கிறார்.
* இந்த ஆலயத்தின் நான்கு திசைகளிலும் லிங்கங்கள் உள்ளன. கீழ வீதியில் விசுவநாதர்கோவில், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோவில், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோவில், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோவில் இருக்க, நடுநாயகமாக மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இது ‘பஞ்சலிங்க தலம்’ என்றும் அழைக்கப் படுகிறது.
* திருவலஞ்சுழி விநாயகர், சுவாமிமலை முருகன், சேய்ஞசலூர் சண்டிகேஸ்வரர், சூரியனார்கோவில் சூரிய பகவான் முதலான நவக்கிரகங்கள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி பைரவர், திருவாவடுதுறை நந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன், மையத்தில் மூலமூர்த்தியாக மகாலிங்கப் பெருமான் இருக்கிறார். எனவே இது ‘மூல லிங்க தலம்’ எனப் படுகிறது.
பட்டினத்தாரும், மன்னனாக இருந்து பட்டினத்தாரின் சீடராக மாறிய பத்திரகிரியாரும், இந்த ஆலயத்தின் இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.
இத்தல இறைவனுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர்.
சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர்.
ஐயப்பர் வரலாறு:
மகிஷாசுரனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கோபம் கொண்டு, அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வரங்களைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தாள். இதைக் கண்ட சிவபெருமானும், விஷ்ணுவும் மகிஷியை அழிக்க வேண்டி, விஷ்ணு மோகினி அவதாரமெடுக்க, சிவபெருமானுக்கும், விஷ்ணுவான மோகினிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனைத்து தெய்வாம்சங்களும் அமைந்திருந்தது. சிவனும், விஷ்ணுவும் காட்டில் ஒரு மரத்தடியில் குழந்தையை அதன் கழுத்தில் ஒரு மணி மாலையை அணிவித்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் இறைவனின் லீலை.
இதற்கிடையே கேரளாவில் பந்தள மகாராஜா ராஜசேகரனும், அவனது மனைவியும் குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். அவர்கள் இருவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் பந்தள மகாராஜா காட்டிற்கு வேட்டைக்கு வந்தார். அப்போது காட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. மகாராஜாவுக்கோ சந்தேகம், காட்டிலிருந்து எப்படி குழந்தை சத்தம் வருகிறது என்று தேடினார். அப்போது மரத்தடியில் இருந்த குழந்தையைப் பார்த்து அருகில் சென்றார். அங்கே ஜொலித்துக் கொண்டிருந்தார் ஐயப்பர்.
பந்தள மன்னனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தையில்லையே என்ற இறைவனை பிரார்த்திர்த்தது வீண் போகவில்லை. அந்த பகவான் தான் நமக்கு இந்த குழந்தையை கொடுத்திருக்கிறார் என்று ஆசையோடும், அன்போடும் அரண்மனைக்கு எடுத்து வந்தார். மகாராணியும் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள். ஜோதிடர்கள் இந்த குழந்தை தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்று கூறினார். கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பந்தள மகாராஜா. நாளடைவில் மகாராணியும் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். மகாராஜவுக்கும், மகாராணிக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. மணிகண்டன் வந்த நேரம் தான் நமக்கு இன்னொரு குழந்தை கிடைத்திருக்கிறது என்று எண்ணினர்.
மந்திரியின் சதி:
அரண்மனையில் சிறப்பாக வளர்ந்து வந்த மணிகண்டனுக்கு பந்தள மகாராஜா பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார். இதையறிந்த மந்திரி எங்கே மணிகண்டன் அரசரானால் தனக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயந்து சதி செய்தான். மகாராணியிடம் சென்று உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க, மன்னர் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யவிருக்கிறார். அதனால் ராஜராஜனுக்குப் பதிலாக மணிகண்டன் அடுத்த அரசராகி விடுவான் போலிருக்கிறது என்று ராணியின் மனதில் விஷத்தை விதைத்தான்.
புலிப்பால் கொண்டு வரச்சென்ற ஐயப்பர்:
மந்திரியின் சூழ்ச்சியால் ராணி தனக்கு தீராத வயிற்று வலி வாட்டுகிறது என்றும், அரண்மனை வைத்தியரைக் கொண்டு இதற்கு புலிப்பால் கொண்டு வந்தால் குணமாக்க முடியும் என்று சொல்ல வைத்தாள். சூழ்ச்சியை அறிந்து கொண்ட 12 வயது பாலகனான ஐயப்பன் காட்டிற்கு சென்றார். காட்டிற்குள் வந்து கொண்டிருந்த ஐயப்பனை தடுத்து நிறுத்தினாள் மகிஷி. வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியுடன் சண்டையிட்டு இறுதியில் மகிஷியை அழித்தார்.
மகிஷியின் அழிவால் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்திரன் புலியாக மாறினார். அவர் மீது அமர்ந்தார் ஐயப்பர். தேவர்களும் புலிப்படையாக மாறினர். ஐயப்பர் புலி மேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி வந்தார். ஊருக்குள் புலிகள் கூட்டமாக வருவதைக் கண்ட மக்களும், மகாராணியும் அஞ்சினர். மகாராணியும், மந்திரியும் தங்களது தவறை உணர்ந்து ஐயப்பனிடம் மன்னிப்புக் கோரினர்.
ஐயப்பனும் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், நான் பூமியில் எதற்காக பிறந்தேனோ அந்த வேலை முடிந்துவிட்டது. அதனால் நான் தேவலோகம் செல்கிறேன் என்றார். மகனைப் பிரியப் போகிறோமே என்று மனமுடைந்த பந்தள மன்னன் ஐயப்பனிடம் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக ஒரு கோயில் கட்ட விரும்புகிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று கேட்டான். ஐயப்பர் ஒரு அம்பை எடுத்து எய்தார். இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கே கோயில் கட்டுங்கள் என்றார். அந்த அம்பு சபரி மலையில் போய் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், பக்கத்தில் மாளிகைபுறத்தம்மனுக்கும் கோயில் கட்டுங்கள் எனக் கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டனின் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் பந்தள மன்னர் ஊண் உறக்கம் இல்லாமல் தானே நேரடியாக மேற்பார்வை கொண்டு பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். அங்கு ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து தரிசித்து ஐயப்பனின் அருளைப் பெறுகின்றனர்.
சபரிமலை கோயில்:
ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.
உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
மஞ்சமாதா கோயில்:
மகிஷியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்...’ என வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்...’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.
பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.
பம்பை நதி:
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த பம்பா நதியில் நீராடிய பின்பே சபரிமலை ஏறுகின்றனர். கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது. தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா, மாவட்டங்களின் வழியாக பாய்ந்தோடி வேம்நாட்டு ஏரியில் கலக்கிறது.

இங்கு உயிர் விடுவோருக்கு உமையம்மை தம் ஆடையால் விசிறி அவர்களின் பாவங்களை போக்குவர் என்றும் சிவன் ஐந்து எழுத்தை ஓதி மோட்சம் அளிப்பார் என்றும் புராணம் கூறுகிறது.
இறைவன்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவி: பெரியநாயகியம்மை
தீர்த்தம்: மணிமுத்தாறு
கோவிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். விருத்தகிரி, பழமலை என்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் முதன்முதலில் இங்குதான் மலைவடிவாக தோன்றினார். இந்தமலை தோன்றிய பிறகுதான் உலகில் மற்ற மலைகள் தோன்றின. இந்த தலம் ஒரு காலத்தில் குன்றாக இருந்தது. பின்பு விபசித்து முனிவர் இந்த கோயிலை திருப்பணி செய்யும் போது வேலை செய்பவர்களுக்கு இந்த ஆலயத்தின் ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் இலைகளை ஊதியமாக கொடுப்பாராம்.
அந்த இலைகள் அவர்களுடைய உழைப்புக்கு தகுந்தவாறு பொற் காசுகளாக மாறியதாகவும், மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இறைவன் தன்னை பாடமறுத்த சுந்தரரை தடுத்தாட்கொண்டு அன்னதானம் செய்ய பன்னீராயிரம் பொன் கொடுத்தார், தம்பிரான் தோழர் ஆகிய சுந்தரர் கள்வருக்கு பயந்து பொற்காசுகளை மணிமுத்தாறு நதியில் போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்து கொண்டதாக வரலாறு இந்த நிகழ்ச்சியால்தான் ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி வந்தது போலும்.
காசியை போன்று இதுவும் முக்தி ஸ்தலமாகும். இங்கு உள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி பழமலைநாதரை தரிசித்தால் காசியில் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டால் காசியை விட புண்ணியம் வீசம் அதிகம் என்பதை காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி (விருத்தாசலம்) என்று கூறுவார்கள்.
இங்கு உயிர் விடுவோருக்கு உமையம்மை தம் ஆடையால் விசிறி அவர்களின் பாவங்களை போக்குவர் என்றும் சிவன் ஐந்து எழுத்தை ஓதி மோட்சம் அளிப்பார் என்றும் புராணம் கூறுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கி விடுவதாக ஐதிகம் .சைவசமயத்தில் உள்ள 28 ஆகமவிதிப்படி 28 லிங்கங்களை முருகபெருமான் ஸ்தாபித்து உள்ளார். இந்த லிங்கங்களின் வரிசைகளின் நடுவே பிள்ளையாறும் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருக பெருபெருமானும் அருள் புரிகிறார்கள்.
இந்த கோவிலில் அனைத்தும் ஐந்து, ஐந்து மூர்த்தங்கள் இறைவனுக்கு ஐந்து திருநாமம், ஐந்து விநாயாகர், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், ஐந்து உள் மற்றும் வெளி மண்டபங்கள் ஐந்து தேர் மற்றும் தலத்துக்கு ஐந்து பெயர். இங்கு உள்ள அருகில் உள்ள ஆழத்து பிள்ளையார், பிள்ளையாரின் இரண்டாவது படைவீடாகும்
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 - 12.00 மற்றும் மாலை 3.30 - 9.00
கோவில் முகவரி:
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்,
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் 606 001.
தொலைபேசி:
யூ.பாலசுந்தரமூர்த்தி குருக்கள்: 04143 - 230203,
செயல் அலுவலர்: 98650 21498

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : பூதலிங்கசாமி.
அம்பாள் : சிவகாமி அம்பாள்.
மூர்த்தி : நினைத்ததை முடிக்கும் விநாயகர், கன்னி விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மகிழமுடைய சாஸ்தா, சண்டீகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சன்னதி உள்ளது. இது ஒரு குகைவரைக் கோவில். ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடி மரம் உள்ள கோவில், எடை அதிகம் உடைய தேர் உள்ளது, கோவில் உள்ளே தேர் வலம் வரும். பூதபாண்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது.
தல வரலாறு : பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சுமார் 500-600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோவில் உள்ளது. ஔரங்கசிப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது. தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும்.
நடைதிறப்பு: காலை 4.00 மணி முதல் 11.00 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
பூஜை விவரம் :
பௌர்ணமி விசேச பூஜை,
பிரதோஷ வழிபாடு,
அமாவசை கிரிவலம் சிறப்பில் ஒன்று.
கோவில் முகவரி :
பூதலிங்கசாமி திருக்கோவில்,
பூதபாண்டி,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம்.

இந்த அகிலத்திரட்டு ஆகமம் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக, தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் பல உள்ளன.
உலகைப் படைத்த ஆதிமூலப் பரம்பொருள் உருவத்தாலும், செயல்களாலும் மாறுபாடு உடையதாக 84 லட்சம் வகையான உயிரினங்களைப் படைத்தார். எல்லா உயிர்களுக்கும் இப்படி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இயல்பினைக் கொடுத்த ஆதிமூலப் பரம் பொருள், மனித இனத்திற்கு மட்டும் உலகத்தை செப்பனிடத்தக்க வல்லமை பொருந்திய பகுத்தறிவைக் கொடுத்தார். அதோடு தம்மையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் அதிபதிகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளாக்கிக் கொண்டார்.
ஆனால் இந்த உலகமும், உயிரினங்களும் சில காலம் படைத்த நிலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதை உணர்ந்த மும்மூர்த்திகளும் “இப்போது நல்வினை மட்டுமே இருப்பதால்தான் உலகம் இயக்கமற்று இருக்கிறது. எனவே இந்த உலகத்தை இயங்கச் செய்ய வேண்டுமானால், தீவினையும் வேண்டும்” என்று முடிவுசெய்தனர்.
சணப்பொழுதில் தீய சக்தியாக குறோணி என்ற அசுரன் தோன்றினான். அவன் பசி பொறுக்காமல் இந்த உலகத்தையே உணவாகக் கொள்ள முனைந்தான். அதைப் பார்த்த இறைவன், உலக இயக்கத்திற்கு பசியையே அடித்தளமாக அமைத்தான். இதன் காரணமாக அற்புதமான பகுத்தறிவைப் பெற்ற மனித இனம் வயிற்றுப்பசி, பணப் பசி, பதவிப் பசி, அதிகாரப் பசி, காமப் பசி போன்றவற்றின் மயக்கத்தால் பேராசை என்ற வலைக்குள் அகப்பட்டு, பகுத்தறிவைப் பயனுள்ளதாகப் பரிபாலனம் செய்யாதவர்களாயினர். அதனால் அசுர சக்திகள் மனிதர்களை ஆக்கிரமித்தது. தர்மம் தடம்புரண்டது. அதர்மம் ஆட்சி புரிந்தது. அந்த அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் இறைவன் அவதரித்திருக்கிறார். அப்படி இந்த கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டர்.
கலியுகத்திற்கு முன்புள்ள ஆறு யுகங்களிலும் அராஜகம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. ஆனால் இந்த கலியுகத்து அரக்கனுக்கோ உடல் இல்லை. கலி என்பது ஒரு விதமான மாயை. அதை பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, போலித்தனம், நுண்மையான சூது, வாது என்று வேத நூல்கள் விளம்புகின்றன. இத்தகைய கலியானது, உலகில் உள்ள அனைத்து மக்களின் சிந்தை பீடத்திலும் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துவிட்டது. ஆகவே நேர்த்தியான அன்பு, அறம், அமைதி, பண்பு, பாசம், பக்தி, பொறுமை, செம்மை, உண்மை, தியாகம், இணக்கம், இரக்கம் போன்ற நற்பண்புகள் எல்லாம் நலிந்துபோய் விட்டன.
இதற்கொரு விடிவுகாலம் வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் இறைவனை வேண்டி முறையிட்டனர். இதனால் இரக்கமுற்ற விண்ணவர்களும், கலியின் கொடுமையை இறைவனிடம் விண்ணப்பித்தனர். அதற்கு இசைந்த மும்மூர்த்திகளும் கலிக்கு, அவதார காலத்தை கவனத்தில் கொண்டு ஆலோசிக்கலாயினர்.
அந்த ஆலோசனையில், கலி என்பது சிறிய எலியின் அளவு உடல் கூட இல்லாத ஓர் அளப்பரிய நினைவு மாய்மாலம். உண்மையைத்தான் பேச வேண்டும் என்று உறுதியாக இருப்போரையும் பொய் பேசவைத்து, அந்த பொய்க்குள்ளே ஐக்கியமாக்கிவிடும் அரக்கத்தனம் கொண்ட அந்த அருவற்ற கலியை, வாள், அம்பு, தடி போன்ற எவ்வகை ஆயுதங்களாலும் அழித்துவிட முடியாது. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் இருந்த அரக்கர்களை, இந்தக் கலியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் அனைவரும் கலிக்கு முன்பு தூசுக்கு சமமானவர்களே.
ஆகையால் எல்லா யுகங்களிலும் மகாவிஷ்ணு மட்டுமே அவதரித்து அரக்கர்களை அழித்ததுபோல, இந்தக் கலியாகிய மாயையை அழிக்க முடியாது. மும்மூர்த்திகளும் தனித்தனியாக சென்றும், கலியரக்கனின் கண் முன்பு நின்று வென்றுவிட முடியாது. எனவே நாம் மூன்று மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, பரப்பிரம்ம நிலையோடு மண்ணகத்து மனிதனைப் போல் சென்று, அன்பு, பொறுமை, தர்மம் ஆகியவற்றின் வலிமையை மக்களின் மனதில் விதைத்து, அவரவர் மனதில் மாசாகப்படிந்திருக்கும் மாயக்கலியை தானாகவே கரைந்துபோகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அதன்படி கலியுகம் பிறந்த 4934-ம் ஆண்டு, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ந் தேதி, மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாகி திருச்செந்தூர் திருப்பாற்கடலின் உள்ளிருந்து அரூபமாய் வெளிப்பட்டு, வைகுண்டர் என்ற திருநாமத்தோடு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ்திசையாகிய கன்னியாகுமரிக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள தாமரைகுளம் என்ற இடத்தில் வந்து அமர்ந்தார்.
வைகுண்டரின் அருள் பிரவாகத்தால் அந்தப் பகுதி மக்களெல்லாம் அவரை அதிசயமாய் பார்த்தனர். அருள்வேண்டி நின்றனர். மக்களின் நோய், மன சஞ்சலம் போன்ற அனைத்தையும் தம் பார்வையாலேயே பறந்தோடச் செய்தார். அதனால் அவரைக் காணவரும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. அப்போது மண்ணையும், தண்ணீரையும் மருந்தெனக் கொடுத்து, ஊமை, கூன், குருடு, செவிடு, முடம் போன்ற அனைத்து ஊனங்களையும் நலமடையச் செய்தார். மக்கள் அவர் மீது அபரிமிதமான பக்தி செலுத்தினர். நாளடைவில் அந்த இடத்தை ‘சாமிதோப்பு’ என்றும், வைகுண்டரை ‘அய்யா’ என்றும் அழைத்தனா்.
தன்னிடம் வந்த மக்களுக்கு அய்யா வைகுண்டர் பல உபதேசங்களையும் வழங்கினார். கலி என்பது எலியளவு உருவம் கூட இல்லாதது. அதை அழிக்க மோதிரம் அளவிலான ஆயுதம் கூட அவசியமில்லை. நீங்கள் பவ்வியமாக வாழ்ந்தீர்கள் என்றால், அதற்குள் கலியானது அகப்பட்டுக் கொள்ளும். மானத்தோடு வாழ்ந்தால் கலியானது தன்னாலேயே மாண்டுவிடும். எனவே சொத்து, சுகமென்று எண்ணாதீர்கள். அடிப்பார் அடிக்க வந்தால் அதைச் சகித்து விட்டு விடுங்கள். சத்ருவோடும் சாந்தமுடனே இருங்கள். அற்பமான இந்த வாழ்வில் அநியாயங்களைச் செய்யாதீர்கள். நினைத்ததெல்லாம் உங்களுக்கு நிச்சயமாய் நிறைவேறும் என்பது போன்ற பல உபதேசங்கள் செய்தார்.
அதன் காரணமாக ஜாதி, மத பேதங்களைக் கடந்து சகலரும் ஒரு தலத்தில் குவிந்தனர். ஒரே கிணற்று நீரைக் குடித்தனர்; குளித்தனர். ஒரே சமையலை உண்டு மகிழ்ந்தனர். இதைக் கண்டு சில ஆதிக்கவர்க்கத்தினரின் மனம் சஞ்சலப்பட்டது. அவர்கள் திருவாங்கூர் மன்னனிடம் இதுபற்றி கூறி அவனது கோபத்தை தூண்டும் வகையில் கோள் மூட்டினர். மன்னன் படைகளை அனுப்பி, அய்யா வைகுண்டரை கைது செய்ததோடு, அவருக்கு ஆலகால விஷம் கொடுத்து அருந்தச் செய்தான். சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினான். பெரிய நெருப்பு குண்டத்தில் நடந்துவரச் செய்தான். புலியுடன் கூண்டில் அடைத்தான். இப்படி பல சோதனைகள் செய்தாலும், அதில் இருந்து மீண்டும் 112-ம் நாள் சாமிதோப்புக்கு வந்து சேர்ந்தார்.
ஏழை, எளிய மக்களும் பிரபஞ்ச வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எழுதப்படிக்கத் தெரியாத அரிகோபால கீசரை வைத்து, அகிலத்திரட்டு என்னும் ஆகமத்தை அருளினார். கலியுகத்தில் 18 ஆண்டுகள் மட்டுமே தெய்வமாய், மனிதனாய் மக்கள் மனம் போற்ற வாழ்ந்தார் அய்யா வைகுண்டர். அவர் தனது அன்புக்கொடி மக்களிடம், “நீங்கள் அனைவரும் நான் அருளியுள்ள ஆகமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழுங்கள். அப்படி வாழ்ந்தீர்கள் என்றால், தர்மயுக வாழ்வினைப் பெறுவீர்கள்” என்று திருவாய் மலர்ந்துவிட்டு விண்வெளியில் மறைந்தார்.
இந்த அகிலத்திரட்டு ஆகமம் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக, தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் பல உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும், பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்பு பதியைப்போல, நித்திய வாகன பவனியும், நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது.
-ஆ.மணிபாரதி

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார் கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 200-வது ஆலயம் ஆகும். மேலும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது, 10-வது தலமாகும்.
கஜபுஷ்கரணி (யானை மடு), சிவகங்கை காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் இங்கு உள்ளன.
இந்த ஆலயத்தின் முன்பாக இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் அமைந்துள்ளது. பெரிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியனும், சிறிய கோபுரத்தை மருதுபாண்டியர்களும் கட்டியுள்ளனர்.
இங்கு சோமேசர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்மன் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன.
இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க, பல ஆயிரம் சிவாலயங்களை வழிபாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் ஒருபகுதியாக இங்கும் வந்து வழிபட்டான். இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு 1000 லிங்கங்களால் உருவான ’சகஸ்ரலிங்கம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தைப்பூசம் அன்று சொர்ணகாளீஸ்வரருக்கும், வைகாசி விசாகம் அன்று சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரம் அன்று சொர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த் திருவிழா நடைபெறும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார் கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பூர்வ ஜென்ம பாவத்தை விலக்கும் சக்தி இத்தல இறைவனுக்கு உள்ளது.
சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
யானை மடு
இந்திரனின் வாகனமான வெள்ளை யானைக்கு ‘ஐராவதம்’ என்று பெயர். இந்த யானை, தான் பெற்ற சாபத்தால் இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. மனிதனின் பார்வையில் படக்கூடாது என்பது இந்த யானைக்கான விதி. ஆனாலும் ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால் அந்த யானை தன்னுடைய தலையால் பூமியை முட்டி பாதாளத்திற்குள் நுழைந்தது. யானை முட்டியதில் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் பெருகி ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு ‘யானை மடு’ என்று பெயர்.
பெயர்க்காரணம்
ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள், விருதுநகரில் உள்ள திருமேனிநாதரை வழிபட்டு இந்த வழியாக வந்தார். அப்போது சொர்ணகாளீஸ்வரரை வணங்க நினைத்தார். ஆனால் வழி எங்கும் சிவலிங்கமாக தென்பட்டதால் அவரால் உள்ளே சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. இதனால் இறைவனை நினைத்து வேண்டினார். தன் நண்பன் மீது இரக்கம் கொண்ட ஈசன், காளையை அனுப்பினார். அது ஆலயத்தில் இருந்து ஓடி வந்து, சுந்தரமூர்த்தி நின்றிருந்த இடம் வரை வந்து விட்டு, மீண்டும் ஆலயம் சென்றது. காளை வந்த வழித்தடத்தில் சிவலிங்கம் இல்லை என்பதை உணர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதன்வழியே சென்று இறைவனை தரிசித்தார். காளை வழிகாட்டியதால், இதற்கு ‘காளையார்கோவில்’ என்று பெயர் வந்தது.
சிவகங்கையில் இருந்து கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டரிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டரிலும் காளையார்கோவில் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சிற்பங்களுக்குப் பெயர் பெற்ற பேளூர், ஹலபேடு ஆலயங்கள் இருக்குமிடத்துக்குச் சற்றுத் தள்ளி பெலவாடியில் வீரநாராயணர் ஆலயம் அமைந்துள்ளது.
வீரநாராயணர் கோவில் (Veera Narayana temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.
போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோவில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள், வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.
சன்னதிகள்
வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.
வீரநாராயணர் வெகு கம்பீரமாக காட்சி தருகிறார். கண்களிலும் வீரம் தெறிக்கிறது. நான்கு கரம் கொண்டவராக, தாமரை ஒன்றின்மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எட்டடி உயரம் அந்தச் சிற்பத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகிறது. அந்த சாளக்கிராமத்தைச் சுற்றிலும் கருடன், காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் உருவங்கள் காட்சியளிக்கின்றன. கீழே அதே கல்லில் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் காட்சியளிக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 28 அன்று ஏழு வாசல்களையும் கடந்து பெருமாளின்மீது சூரியக் கதிர்கள் படும். அது ஓர் அற்புதக் காட்சி.
ஏழடி உயரத்தில் அமர்ந்த வடிவத்தில் காட்சி தருகிறார் யோக நரசிம்மர். கையில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார். இரு புறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் இங்கும் காட்சியளிக்கின்றனர். முக்கிய உருவத்தின் தலைக்கு மேற்புறத்தில் உள்ள அரை வளைவுப் பகுதியை சிற்பக் கலையில் பிரபாவதி என்பார்கள். யோக நரசிம்மரைச் சுற்றியுள்ள பிரபாவதியில் திருமாலின் பத்து அவதாரங்களும் காட்சியளித்து வியக்க வைக்கின்றன.
இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது. இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன், பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது.
இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.
கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.
இந்த ஆலயத்துக்கு மூன்று விமானங்கள்; அதாவது மூன்று கருவறைகள். ஒவ்வொன்றிலும் ஒருவித திருமாலின் வடிவம். கூரைப்பகுதி சாய்வாகக் கட்டப்பட்டிருக்கிறது. யானைகளின்மீது ஹொய்சாளர்களுக்குத் தனிப் பிரியம் என்கிற அளவுக்கு அங்கே, இங்கே என்று பல யானை உருவங்கள் காட்சிதருகின்றன.
பழைய கருவறை என்பது நுழைந்தவுடன் நேரே இருப்பது. அங்கு ஒரு திறந்த மண்டபமும், மூடப்பட்ட மண்டபமும் காணப்படுகின்றன. அவற்றை அடைவதற்கு இருபுறமும் உள்ள பளபளவென்ற தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் கீர்த்தி வாய்ந்தது பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது. இந்த அம்மன் பாதாளத்தில் மறைந்திருந்து பக்தர்களைக் காப்பதற்காக தானே வெளிப்பட்ட சுயம்பு சக்திதேவி. இந்த வடிவை சிந்தாமணிதேவி என்ற சிற்ப சாஸ்திர நூலான சிற்ப விவேக சூடாமணி தெரிவிக்கிறது. நூறுஆண்டுகட்கு முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்பத் திருமேனி ஆறு மாதமாகுமாம்! சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதிஉலா சென்றதாலேயே இத்தனை காலம்! கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.
அம்மனுக்கு அலங்காரமும் நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள். நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குலதெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த அம்மன் கோயிலுக்கு ஏழு இடங்களில் தோரண வாயில் அமைந்திருந்தனவாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம் என்றழைக்கப்பட்டன. இந்த மண்டலத்தை பல்வேறு தொண்டைமான்கள் ஆண்டனர். பின்னர் சிறிது காலம், நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராயர்கள் ஆட்சி. விஜய நகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த தளபதிகள் நாயக்கர் எனப்பட்டனர். அவர்களின் ஒருவர் சென்னப்ப நாயக்கர். அவரிடம் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் ஆட்சியுரிமை செலுத்திவந்தனர். அப்பொழுது புரசைவாக்கம் பகுதியில் மாந்தோப்புகளும், பூவரச மரங்களும் நிறைந்திருந்தது.
காய்கறிகள், பழங்கள் பயிரிடப்பட்டன. இருநூறு ஆண்டுகளுக்கு முன் விவசாய பாசனத்திற்கு நீர் அதிகம் தேவைப்பட்டது. தோட்டத்தின் வடக்கு மூலையில் நீர் சுரப்பதை அறிந்து, கூலி ஆட்கள் உதவியுடன், கிணறு வெட்டத் தொடங்கினர். ஏழடி தோண்டினாலே நீர் கிடைக்கும் இந்த பகுதியில், தொடர்ந்து முப்பதடி ஆழம் தோண்டியும் நீர் வரவில்லை. நிலச்சொந்தக்காரரும், வேலையாட்களும் சோர்ந்து விட்டனர். ஆனாலும் சக்தி அம்மாவை வேண்டியபடி கடப்பாரையை மேலும் இறக்க, அது ஒரு பாறைமீது பட்டு, தீப்பொறி வந்தது, அதைத் தொடர்ந்து தண்ணீரும் பீறிட்டு அடித்தது. சுற்றியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாறையை நெம்பி எடுக்க, கடப்பாரையால் தோண்ட, அனைவரும் ‘சிலை, சிலை’ என்று கூச்சலிட்டனர். அது அபூர்வமான அம்மன் சிலை அமர்ந்தக் கோலத்தில் காட்சியளித்தது. அம்மன் சிலையை வெளியே எடுத்தபோது, அதற்குக் கீழே ஐம்பொன் விக்கிரகம் ஒன்றும் கிடைத்தது. அனைவரும் ஒன்றுகூடி இரு சிலைகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்யம் செய்து வழிபட்டனர்.
அப்போது ஒரு பெண்மணிமீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன்.’’ அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து மூலவராக கல் விக்கிரகத்தையும், உற்சவராக ஐம்பொன் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர். பாதாளத்திலிருந்து கிடைத்ததால் பாதாள பொன்னியம்மன் என்று பெயரும் வைத்தனர். கிணறு தோண்டிய வேலையாட்களின் பரம்பரையினரே இன்றுவரை ஆடி மாத வீதி ஊர்வலத்தின்போது இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் செய்கின்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கையும், காணிக்கையும் பெருகப் பெருக ஆலயமும் விரிவடைந்தது. அடுத்து அண்ணன்மார் சிலைகள் தனி கருவறையில் காவல் தெய்வங்களாக வைக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரசமர மேடை நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கருவறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் படைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது. அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள்; சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.
வலதுப்புற வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நதியில் நான்கு கைகளுடன் பாசம், அங்குசம், மோதகம், ஏக தந்தம் ஆகியன ஏந்தி மூன்றரை அடி விக்கிரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் விநாயகர். இடது புறத்தில் நின்றகோல முருகனுக்கும் தனிச் சந்நதி. அபய-வரதம் அருளும் கைகளுடன் ஐந்தடி விக்ரமாகக் காட்சி தருகிறார். இவரிடம் வேல் ஆயுதம் உள்ளது. அடுத்து துர்கா தேவி நின்ற கோலத்தில் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். பாதாள பொன்னியம்மனின் கருவறை எதிரே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத் தூணில் புடைப்பு சிற்பங்களாக கணபதி, முருகன், சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், துர்க்கை, அனுமன், விஷ்ணு, பிரம்மா, கால பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். நவராத்திரி மண்டப மேல்விதானத்தில் சக்கர வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.
அம்மன் சந்நதி எதிரே உள்ள நவராத்திரி மண்டபத்தினுள் அண்ணன்மார் சந்நதி உள்ளது. இங்குள்ள நீளமான கருங்கல் மேடையில் புடைப்புச் சிற்பமாக ஆண் வீரர்கள் எழுவரின் சிலைகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. இவர்கள் அனைவரும், இடது கையில் கேடயம் வைத்துள்ளனர். வலது கையில், கத்தி, கோடரி, தண்டம், அரிவாள், கதை, சூலம், வாள் முதலியவற்றை வைத்துள்ளனர். இவர்கள் அம்மனின் படைவீரர்கள் என்றும், பரிவார தேவதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி என்ற மரங்களை உரசி, அதன் மூலம் யாகத் தீயை உருவாக்கினார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெருவெடிப்பில், பூமியில் இருந்து நீர் வெளிப்பட்டு, பெருக்கெடுத்து ஓடியது. அதுவே ‘ஆரணி நதி’ ஆகும். இந்த நதிக்கரை ஓரத்தில், சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களை குறிக்கும் வகையில் 5 ஆலயங்கள் தோன்றின. இவை ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. நாம் ஆரணிக் கரையோரம் உள்ள பஞ்ச பிரம்ம தலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
அரியத்துறை
சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது, கவரப்பேட்டை. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை இருக்கிறது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் - வரமூர்த்தீஸ்வரர், அம்பாள் - மரகதவல்லி. உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது.
ஆரணி பெரியபாளையம்
சென்னையில் இருந்து வடக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆரணி. இங்குள்ள பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘வாமதேவபுரம்’ ஆகும். பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரிய ஆலயம் இதுவாகும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலின் மூலவர், சுயம்பு மூர்த்தி ஆவார். மூலவர் பெயர்- பிச்சாலேஸ்வரர், அம்பாள் பெயர் - மரகதவல்லி. இங்குள்ள சிவலிங்கத்தின் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருப்பது விசேஷம்.
ராமகிாி
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுருட்டப்பள்ளி. இந்த ஊரைத் தாண்டியதும் ராமகிரி உள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருக்காரிக்கரை’ என்பதாகும். மூலவர் பெயர் வாலீஸ்வரர். மரகதாம்பாள் என்பது அம்பாள் திருநாமம். சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய ஆலயம் இது. மூலவர் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருக்கிறாா்.
கருங்காலி
சென்னை அருகே உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்தான் கருங்காலி திருத்தலம் இருக்கிறது. இது பழங்காலத்தில் ‘நைமிசான்யம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய கோவில் இங்கு உள்ளது. ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம், சிந்தாமணீஸ்வரர். அம்பாள் பெயர் சிவகாமவல்லி. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால், இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடலோடு நதி கலக்கும் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது.
சுருட்டப்பள்ளி
சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் நாட்டரசன்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை.
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
பிரமோற்சவம், கொடியேற்றம் உள்ளிட்ட காப்பு கட்டும் நிகழ்வுகள், சிவாச்சாரியார்கள், வைணவ பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.
பாரசைவர்களாகிய உவச்சர் குலத்தினரால், இந்த ஆலயத்தில் பூஜை செய்யப்படுகிறது.
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ‘களியாட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. இது கும்பகோணம் மகாமக திருவிழா போன்று நடத்தப்படும்.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு
வனமாக இருந்த இடத்தில் கண்ணுடைய நாயகி அம்மன், ஒரு மரத்தின் அடியில் சுயம்புவாக புதையுண்டு இருந்தார். பால் வியாபாரிகள், இந்தப் பகுதியில் வரும்போது, பால் குடம் கவிழ்ந்துபோவது வாடிக்கையாகிப்போனதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.
இப்பகுதியை ஆண்ட மன்னனின் கனவில், தான் இருப்பதை அம்மன் உணர்த்தியதை அடுத்து, அந்த பகுதியை தோண்டி, அம்மனை வெளிக்கொண்டு வந்தனர்.
புதையுண்ட அம்மன் சிலையை மீட்கும் பணியின்போது, ஒருவரது கண்ணில் கடப்பாரை நுனி பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் அவர் அம்மனை வெளிக்கொண்டு வரும் பணியை தொடர்ந்தார். முழுமையாக அம்மன் சிலை வெளிவந்ததும், அவரது கண்ணில் பட்ட காயமும் முழுமையாக நீங்கியது. இதனாலேயே ‘கண்ணத்தாள்’ என்ற பெயரும் அம்மனுக்கு உண்டு.
திருவிழாக்கள்
* சித்திரை மாத முதல் செவ்வாய் அன்று அம்மனுக்கு கண் திறப்பு விழா நடைபெறும். 22 நாட்கள் திருவிழா இது.
* வைகாசி பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.
* ஆடி மாதத்தில் முளைகொட்டு திருவிழா, 10 நாட்கள் நடத்தப்படும்.
* புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியும் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
* ஐப்பசியில் 10 நாட்கள் நடைபெறும் கோலாட்ட திருவிழாவும் விசேஷமானது.
* தை மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் தைலக்காப்பு உற்சவமும் பிரசித்திப்பெற்றது.

இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர் – வில்வவனேசுவரர்
அம்மன் – வளைக்கைநாயகி
தல விருட்சம் – வில்வமரம்
தீர்த்தம் – எமதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவைகாவூர், வில்வவனம்
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.
சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எமதீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.
இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் “வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி)” மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.
வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி, தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு “வில்வவனேசுவரர்” என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும்.
சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.
இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்குநோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் – வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சந்நிதியும், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை:
வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்,
திருவைகாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.