என் மலர்
கோவில்கள்
திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் உடனுறை கொடியிடை அம்மனை முழு நிலவு நாளாம் பவுர்ணமியில் தரிசித்து நமது அக, புற இருளை அகற்றிக் கொள்வோம்.
சென்னை அண்ணா நகரில் இருந்து அம்பத்தூர் செல்லும் ரோடில் ஆவடிக்கு செல்வதற்கு முன்னால் உள்ளது திருமுல்லைவாயில். இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் (ஸ்ரீ நிர்மலமணீஸ்வரர்) உடனுறை அம்பாள் : ஸ்ரீ கொடியிடை நாயகி (ஸ்ரீ லதாமத்யாம்பிகா ) தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகள் தீர்த்து வருகிறாள்.
வள்ளலார், சுந்தரர், அருணகிரிநாதர் பாடி வழிபட்ட இந்த தலம் 32 தேவார பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.
தல வரலாறு
காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான்.
அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொறுத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அந்த இரண்டு வெள்ளருக்கத் தூண்களையும் கருவறையின் வாசலில் காணலாம்.
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
.இத்திருக்கோவிலுக்குள் நுழையும் முன்னால் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றது.
கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது.
தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில், நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல், கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன..
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள திருமுல்லைவாயில் சென்று மாசிலாமணீஸ்வரர் உடனுறை கொடியிடை அம்மனை முழு நிலவு நாளாம் பவுர்ணமியில் தரிசித்து நமது அக, புற இருளை அகற்றிக் கொள்வோம்.

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் மிக பெரிய பழமையான பெருமாள் கோவில் என்று சொல்லப்படுவது ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில். தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் மிக பெரிய பழமையான பெருமாள் கோவில் என்று சொல்லப்படுகிறது
ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான்.பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். ஒருநாள் தேவர்கள் பெருமாளை இதே இடத்தில் எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணை கூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப் போலவே ஒரு விக்கிரகத்தை நியமிக்கும் படி கூறினார். தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து வைத்தார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்
இக்கோவில் திராவிடக் கட்டடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ரங்கநாத பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக நம்பப்படுகிறது. தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் மிக முக்கியமான தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
கட்டடக்கலை:
இக்கோயிலின் ராஜ ராஜகோபுரமானது உயரம் குறைந்து கோபுரம் மொட்டை வடிவில் காணப்படுகிறது. மேலும் கோயிலானது உயரமான கருங்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள ரங்கநாதபெருமாள் உருவமானது சயன கோலத்தில் 29 அடி நீளத்தில் கிரானைட் கல்லால் செய்யப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக காட்சியளிக்கிறார்.
ஸ்ரீதேவியும், பூதேவியும் இத்தலத்தில் கால்பகுதியில் கருடன் வணங்கிய கோலத்திலும் ,கருவறை முன்பு ஆழ்வார் மண்டபமும் உள்ளது. தாயார் ரங்கநாயகிக்கு தனியாக ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்றுகால தானிய சேமிப்பு கொள்கலன் (களஞ்சியம்) உள்ளது. இந்தக் களஞ்சியமானது திருரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் பாபநாசம் பாலைவனநாதர் கோவில்களில் உள்ளது போல உள்ளது. இது கோயிலுக்கு விவசாயிகள் அளிக்கும் தானியங்களை சேமித்து வைக்க கட்டப்பட்டிருக்கிறது.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் வைணவர்கள் கொண்டாடக்கூடிய வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடி பூரம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக முதன்மையான கோவில் என சொல்லப்படுகிறது. இக்கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் கோவில் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு, செயல் பெயர் அளவில் மட்டுமே உள்ளது. இன்றும் புதர் மண்டிய வண்ணம் பராமரிப்பு இன்றி ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் இருப்பது பெருமாள் பக்தர்களை மனம் நோகச் செய்கிறது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ள, ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
பத்து விரல்கள் வடுக்களாக அமைந்த அதிசய லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், பல மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம், மூலிகை நீரால் இரு வேளை அபிஷேகம் நடக்கும் கோவில், மணப்பேறு மற்றும் மகப்பேறும் தரும் திருத்தலம், நோய் தீர்க்கும் அபிஷேக நீர் உள்ள ஆலயம், கள்வனுக்கும் அருள் செய்த கருணை தெய்வம் வீற்றிருக்கும் திருக்கோவில், பேரூர் ஆதீனத்து கோவில் எ பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ள, ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
தல வரலாறு :
இத்தலத்தின் பெயர் ‘ஆதியூர்’ ஆகும். அடி அண்ணாமலை போல, இது ஆதி அகஸ்தீஸ்வரமாக இருந்து, காலப்போக்கில் ஆதியூர் என்பது மருவி ‘ஆடையூர்’ என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இதனை இங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. இத்தலத்தின் இறைவனை அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாக இத்தல இறைவனின் திருநாமம் ‘அகஸ்தீஸ்வரர்’ என வழங்கப்படுகிறது. தன்னை வணங்கும் தன் அடியாரின் பெயரைத் தன் பெயராக்கி மகிழும் இறைவனின் விருப்பப்படி, இப்பெயர் நிலைத்துவிட்டது.
கல்வெட்டுச் சான்று:
இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் சிறப்பு பெற்று விளங்கியதற்கு, இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டு சான்றாக அமைந்துள்ளது. ராஜேந்திரசோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் (கி.பி.1030), இந்தக் கோவிலுக்கு நிலதானம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இத்தலத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர் மற்றும் தேய்ந்த நிலையில் உள்ள விநாயகர் இருவரும் சோழர் காலத்தைச் சார்ந்தவர்களாக அமைந்துள்ளனர்.
பழங்காலத்தில் ஆதியூர் தலத்தின் அருகே புனல்காடு என்ற தலம் இருந்தது. அங்கிருந்த நந்தவனத்தில் இருந்து, அண்ணாமலையாருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி புனல்காடு பகுதியில் இருந்து திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களிடம் கொள்ளையடிக்கும் கொள்ளையன் ஒருவன் இருந்தான். நாளுக்கு நாள் அவனது அட்டகாசம் அதிகரித்து வந்தது.
அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் ஒருவன் கொள்ளையடிப்பது, அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மன்னன், கொள்ளையனைப் பிடிக்க அரண்மனைக் காவலர்களை அனுப்பியும், கொள்ளையன் தப்பித்துக் கொண்டே இருந்தான். ஆகையால் மன்னனே நேரடியாக கொள்ளையனைப் பிடிக்க, களத்தில் இறங்கிவிட்டான்.
தன்னைப் பிடிக்க மன்னனே மாறுவேடத்தில் களம் இறங்கியிருப்பதை அறிந்த கொள்ளையன், என்ன செய்வதென்று சிந்திக்கத் தொடங்கினான். பிடிபட்டால் கடுமையான தண்டனைக் கிடைக்கும் என்பதை அறிந்திருந்ததால் அவனை பயம் தொற்றிக்கொண்டது. தன்னிடம் இருந்த திருட்டுப் பொருட்கள் அனைத்தையும், பெரிய மண் பானையில் சேகரித்தான். பின்னர் அந்த பானையை மறைத்து வைப்பதற்கு இடம் தேடினான்.
அப்போது அவனுக்கு ஆடையூர் சிவன் கோவில் தென்பட்டது. அங்கு சென்ற கொள்ளையன், கோவிலுக்குள் பானையைக் கவிழ்த்து வைத்து விட்டு, மன்னனின் தண்டனையில் இருந்து தன்னைக் காத்து அருளும்படி இறைவனிடம் மனமுருக வேண்டினான். பின்னர் வெளியே வந்த அவனை, அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த மன்னன் சிறைபிடித்தான்.
கொள்ளையன் பயத்தை வெளிக்காட்டவில்லை என்றாலும், அவன் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான். மன்னனோடு வந்த காவலர்கள், ஆலயத்திற்குள் சென்று அங்கிருந்த பானையைத் தூக்கி வந்தனர். அதை மன்னன் முன்னாக வைத்து கொட்டினர். ஆனால் அதில் தங்கம், பணம் மற்றும் பொருட்களுக்குப் பதிலாக இறைவனின் பூஜைக்கு தேவையான தேங்காய், பூ, பழம் என மாற்றம் கண்டிருந்தது.
அதைக் கண்ட மன்னன், தவறான ஒருவனை சிறைபிடித்து விட்டோமோ என்று எண்ணி, கொள்ளையனை விடுவித்துவிட்டுச் சென்றான். கொள்ளையனுக்கோ ஆச்சரியம். மன்னன் சென்ற பிறகு, சுவாமியின் எதிரே நின்று, தன்னைக் காத்தருளிய இறைவனிடம் தன்னுடைய தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். கண்ணீர் வடித்தான்.
அன்று முதல் கொள்ளையனின் மனம் பக்தி சிந்தனையில் திரும்பியது. அந்தப் பகுதியில் வாழும் அடியார்களுக்கு தேவையான தொண்டு செய்யும் சேவகனாக தன்னை மாற்றிக்கொண்டான் என்கிறது இத்தலம் குறித்த கர்ணப்பரம்பரை கதை ஒன்று.

ஆலய அமைப்பு :
இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஞான பிள்ளையார், முருகன் வாசலில் காட்சிதர, அருகே பழமையான சோழர் கால விநாயகர் திருமேனி தனியே வைக்கப்பட்டுள்ளது. கருவறைச் சுற்றில் தல மரமான வில்வம் உள்ளது. மேலும் அகத்தியர், தட்சிணாமூர்த்தி ஆகியோரது சிலை வடிவங்களும் காட்சியளிக்கின்றன. தட்சிணாமூர்த்தி சன்னிதியின் மேற்புறம் உள்ள கல்வெட்டு, இத்தலத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.
மூலவர் அகஸ்தீஸ்வரர் மேற்கு முகமாக வீற்றிருக்க, அம்பாள் அறம்வளர்த்த நாயகி கிழக்கு முகமாக நின்று சுவாமியை தரிசித்தபடி அருள்பாலிக்கிறார். மூலவர் அகஸ்தீஸ்வரர், சோழர் கால விநாயகர் ஆகிய சிலை வடிவங்கள் மட்டுமே இந்த ஆலயத்தில் பழமையானவையாக காணப்படுகின்றன. மற்ற வடிவங்கள் 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது உருவாக்கப்பட்டவை ஆகும்.
ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. தல தீர்த்தம் அகஸ்தீஸ்வரர் தீர்த்தக் குளமாகும். இந்தத் திருக்குளம் மிகவும் தூர்ந்துபோய் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆடையூர் அகஸ்தீஸ்வரர் ஆலயத்து இறைவனுக்கு நாள்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகள் மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாகவும், மணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு வரம் தரும் விதத்திலும் அமைந்துள்ளது.
சிவலிங்கத் திருமேனி மகிமை :
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் வைகாசி மாதம் வரை 3 மாதங்களுக்கு, சூரியன் தன் ஒளிக்திர்களால் மாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் இறைவனின் திருமேனி மீது ஒளிவீசி வழிபடுவது சிறப்பான அம்சமாகும். இத்தல இறைவனின் திருமேனி மணல் லிங்கத் திருமேனியாக அமைந்துள்ளது. அபிஷேக காலங்களில் சிவலிங்கத்தில் உள்ள மணல் துளிகள் கரைந்தாலும், அதன் மேனி அமைப்பு இன்றும் குறையாமல் வளர்ந்த வண்ணமே இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகம். இறைவன் திருமேனியின் பின்புறம் சடைமுடிக் கொண்டை போன்ற வடிவம் காணப்படுவது மற்றொரு அதிசயம். இதேபோல் சிவலிங்கத்தின் பின்புறம் பத்து விரல்களின் வடுக்கள் காணப்படுகிறது. இவை சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தியரின் விரல்களா? அல்லது அன்னை பார்வதிதேவியின் விரல்களா? என்பது வெளிவராத ரகசியமாக உள்ளது.
இத்தல இறைவனை தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தை பேரூர் ஆதீனத்தில் திருவண்ணாமலை மடத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.
அமைவிடம் :
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சந்திர லிங்கத்திற்கும், வாயு லிங்கத்திற்கும் நடுவில், வடக்கே காஞ்சி செல்லும் சாலையில், சுமார் அரை கி.மீ. தொலைவில் ஆடையூர் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

அகஸ்தீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி

சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த ஏழு சிவாலயங்களையும் ‘சப்த சிவ ஸ்தலங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆலயங்களை முறையே காரணீஸ்வரர் கோவில், தீர்த்த பாலீஸ்வரர் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில், விருபாட்சீஸ்வரர் கோவில், வாலீஸ்வரர் கோவில், மல்லீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் என்ற முறையில் வரிசையாக வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த ஆலயங்கள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ராமபிரான் இந்த 7 தலங்களையும் வழிபாடு செய்ததாகவும், அந்த முறையிலேயே இன்றும் இந்த ஆலயத்தை வரிசையாக வழிபடும் மரபு உள்ளதாகவும் ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
காரணீஸ்வரர் கோவில்
சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இதன் அருகில் மாதவப் பெருமாள் திருக்கோவிலும் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு, பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப் பணிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. அம்பாளின் திருநாமம் சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது. இங்குள்ள சொர்ணாம்பிகையை வழி படுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும், பொருளும் செழிக்கும்.
தீர்த்தபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் இருக்கிறது, தீர்த்த பாலீஸ்வரர் ஆலயம். மாசி மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத் தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனாலேயே இத்தல இறைவனுக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திரு நாமம் ஏற்பட்டது. அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இதுவாகும். சப்த சிவாலயங்களில் இந்தக் கோவில் இரண்டாவதாக வழிபட வேண்டிய ஆலயம். பழங்காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக் குளங்கள் அருகருகே இருந்ததாக கூறப்படுகிறது. தெய்வீ சக்தி வாய்ந்த அந்த தீர்த்த குளங்களில் தான், முன் காலத்தில் இறைவனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றிருக்கிறது.
வெள்ளீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது, வெள்ளீஸ்வரர் கோவில். சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக இது அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி செய்த யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகா விஷ்ணு என்றும், தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்ராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி, கமண்டலத்தில் நீர் வரும் பாதையை அடைத்தார். வாமனராக வந்த விஷ்ணு, தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இதையடுத்து இத்தல இறைவனை வழிபட்டு தனது கண்பார்வையை சுக்ராச்சாரியார் திரும்பப் பெற்றார். சுக்ர பகவானுக்கு வெள்ளி என்ற பெயரும் உண்டு. எனவே இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
விருபாட்சீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும், காரணீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தான் விருபாட்சீஸ்வரர் ஆலயமும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோவில் இதுவாகும். விசாலாட்சி அம்பாள் சமேதராக விருபாட்சீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பைரவர் சன்னிதியும், சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது, இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த ஈசன் இங்கு அருள்கிறார். இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், நமது மனம், உடல், இதயம் மூன்றையும் இணைக்கும் ஆத்ம பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாலீஸ்வரர் கோவில்
‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்று கூறப்படும், கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது வாலீஸ்வரர் கோவில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் பெரியநாயகி சமேதராக வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். இந்தக் கோவில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. கவுதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோவில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. எனவேதான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள், இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 5-வதாக வழிபடவேண்டிய கோவில் இது.
மல்லீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்குப் பின்புறம் மல்லீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோவில் கொண்ட இறைவனுக்கும் ‘மல்லீஸ்வரர்’ என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இதுவாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 6-வது தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை.
கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூரின் அடையாளமாக திகழ்வது தான் கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வரர் கோவில். இதுவே சப்த சிவ ஸ்தலங்களில் நாம் நிறைவாக வழிபட வேண்டிய ஆலயம். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது இந்தக் கோவில். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும். சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய ஆலயம் அமைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு ‘மயிலாப்பூர்’ என்று பெயர் ஏற்பட்டது.

கூத்தூர் என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது நாராயனேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘நாராயனேஸ்வரர்’. இங்குள்ள இறைவியின் பெயர் தான் அதலாம்பிகை.
தாள இயலாத குடும்ப பிரச்சினைகள், தவிர்க்க முடியாத இடர்பாடுகள். இல்லத்தில் நிம்மதி இல்லை. என்ன செய்வது?. இப்படி பல பிரச்சினைகளால் கலங்கி நிற்கும் பெண்கள் அன்னை அதலாம்பிகையிடம் ஓடி வருகின்றனர்.
அன்னையின் சன்னிதியில் முன் நின்று கண்கள் கலங்க மனம் உருகி பிரார்த்தனை செய்கின்றனர். குடும்ப பாரத்தை அன்னையின் காலடியில் அர்ப்பணித்து இல்லம் செல்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் பிரார்த்தனைகளின் பலன் தெரியத் தொடங்குகிறது.
ஆம்... பிரார்த்தனை செய்த பெண்களின் துன்பங்களும், இடர்பாடுகளும் மெல்ல மெல்ல விலகுகின்றன. அவர்கள் வாழ்க்கையின் துயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது. அவர்கள் மனதில் நிம்மதி பெருகிறது.
மனம் மகிழும் அவர்கள் அன்னையை நோக்கி வருகின்றனர். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துக்கின்றனர். பின் நிம்மதியை மனம் நிறைய சுமந்து இல்லம் திரும்புகின்றனர்.
இந்த அன்னை அதலாம்பிகை எங்கே இருக்கிறாள்?
கூத்தூர்.. இந்த சின்னஞ் சிறிய கிராமத்தில் உள்ளது நாராயனேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘நாராயனேஸ்வரர்’. இங்குள்ள இறைவியின் பெயர் தான் அதலாம்பிகை. அந்த அன்னையே இவ்வளவு பெருமைக்கும் உரியவள்.
ஆலய அமைப்பு
இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றி உயர்ந்த திருமதில் சுவர்கள். ஆலயத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் என இரண்டு நுழைவு வாசல்கள். உள்ளே நுழைந்ததும் சிறப்பு மண்டபமும் நந்தி பகவானின் மண்டபமும் உள்ளன. அடுத்து உள்ள நுழைவு வாசலின் வலதுபுறம் சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார்.
மகா மண்டபத்தில் வலதுபுறம் அன்னை அதலாம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரையையும், மேல் இடது கரத்தில் சங்கையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை வீற்றிருக்கிறாள். அன்னையின் முகத்தில் தவழும் புன்னகையைக் காணும் போது, ‘உன்னுடைய துயரங்கள் யாவும் துச்சம். அதை நான் விலக்குகிறேன்’ என்று சொல்வது போல, நம் மனதில் நம்பிக்கை ஏற்படுவது இயல்பான ஒன்று.
அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் நாராயனேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தினசரி ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் இந்த ஆலயத்தில் உற்சவர்கள் இல்லை. எனவே இறைவன்- இறைவி வீதியுலா நடைபெறுவது கிடையாது.
இந்த ஆலயத்தில் பொங்கல், தீபாவளி, மார்கழி 30 நாட்களும் அன்னைக்கும் ஈசனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிரதோஷமும் இங்கு பக்தர்கள் நிறைய பேர் சூழ சிறப்பாக நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இங்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கூத்தூர் என்ற இந்த தலம்.

வைகுண்ட ஏகாதசி நாளில் காஞ்சீபுரம் கயிலாயநாதர் திருக்கோவிலில் வழிபட்டு, பின்னர் அருகிலுள்ள பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்டநாதப் பெருமாள் ஆலயத்திலும் வழிபாடு செய்ய வேண்டும்.
மோட்சம் என்பதனை சைவர்கள் ‘கயிலாயம்' என்பார்கள். வைணவர்கள் ‘வைகுண்டம்' என்பார்கள். காஞ்சீபுரத்தில் கயிலாயநாதர் திருக்கோவிலும் உள்ளது. அதுபோல வைகுண்டநாதப் பெருமாள் திருக்கோவிலும் இருக்கிறது. இந்த இரண்டு திருக்கோவில்களிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் காஞ்சீபுரம் கயிலாயநாதர் திருக்கோவிலில் வழிபட்டு, பின்னர் அருகிலுள்ள பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்டநாதப் பெருமாள் ஆலயத்திலும் வழிபாடு செய்ய வேண்டும்.
வைகுண்டநாதனின் பரமபத வாசலை காப்பவர்கள், ஜெய- விஜயர்கள் ஆவர். இவர்கள் கயிலாயநாதர் அனுக்கிரகத்தால் பூலோகத்தில் பிறப்பெடுத்து, தங்கள் பரமபத நாதனான வைகுண்டநாதருக்கு காஞ்சீபுரத்தில் ஆலயம் அமைத்தனர். வைகுண்ட ஏகாதசி நாளில் இந்த ஆலயத்தில் வழிபடுவது, ஒருவரது ஆயுட்காலத்திற்கு பிறகு வைகுண்ட பதவி பெற்றுத் தரும் என்கிறார்கள்.
விதர்ப்ப நாட்டின் மன்னன் விரோசனன். இவன் பகவான் கண்ணனின் வம்சம். விரோசனனுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் மன்னன், சில முனிவர்களிடம் சென்று வழி கேட்டான். அதற்கு முனிவர்கள், “கண்ணபிரான், ருக்மணியை திருமணம் செய்த போது அவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இதையடுத்து கண்ணபிரான், திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வழிபட்டார். சிவனருளால் கண்ணனுக்கும்- ருக்மணிக்கும் ‘ப்ரத்யும்னன்’ என்ற குழந்தை பிறந்தது. அதுபோல கண்ண பிரான் வம்சத்தில் வந்த தாங்களும் திருக்கயிலாயம் சென்று கயிலாயநாதரான சிவபெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்று கூறினர்.
அதனைக் கேட்ட மன்னன் விரோசனன், “முனிவர்களே! திருக்கயிலாயம் நெடுந்தொலைவில் உள்ளது. அங்கே சென்று வர மாதக் கணக்கில் ஆகுமே” என்று கூறி கலங்கினான்.
“கவலை வேண்டாம் மன்னா! காஞ்சீபுரத்தில் உள்ள கயிலாயநாதர் ஆலயம் சென்று வழிபட்டாலே திருக்கயிலாயம் சென்று ஈசனை வழிபட்ட நற்பலன் கிட்டும்” என்று முனிவர்கள் ஆலோசனை கூறினர்.
மன்னனும் அதன்படியே கயிலாயநாதர் ஆலயம் சென்று, ஆலயத் திருப்பணிகளைச் செய்து வழிபாடு செய்தான்.
மன்னன் கனவில் தோன்றிய ஈசன், “மன்னா! உமக்கு வைகுண்டத்தின் வாசல் காப்பாளர்களான ஜெய- விஜயர்களே குழந்தைகளாக வந்து அவதரிப்பர்” என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியபடியே மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு பல்லவன், வில்லவன் என்று பெயரிட்டு வளர்த்தான். அவர்கள் சிறு வயதில் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்து வந்தனர். வாலிப வயது வந்த போது பல்லவனும் வில்லவனும், காஞ்சீபுரத்தில் கயிலாயநாதர் ஆலயத்தின் வடக்கு மூலையில் அஸ்வமேத யாகம் செய்தனர். அவர்களுக்கு வைகுண்டத்தில் இருக்கும் வடிவிலேயே மகாவிஷ்ணு அருள் பாலித்தார். அவர் காட்சி அளித்த இடத்திலேயே பெருமாள் கோவிலும் கொண்டார்.
அந்த திருத்தலமே தற்போதைய காஞ்சீபுரத்தில் உள்ள ‘பரமேஸ்வர விண்ணகரம்' என்னும் திருத்தலமாகும். ‘விண்ணகரம்’ என்றால் ‘வைகுண்டம்’ என்று பொருள். வைகுண்டத்தில் அருளும் அதே திருக் கோலத்தில், பரமபதநாதராய் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார். வைகுந்தவல்லி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் தனிச்சன்னிதியில் அருள்கிறார். இங்கு ஆலயக் கருவறை மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது.
அதில் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை மேல் தளத்திலும், பல்லவனுக்கும், வில்லவனுக்கும் காட்சி தந்து அமர்ந்த திருக்கோலத்தை கீழ் தளத்திலும், வடக்கே தலை வைத்து தெற்கில் திருப்பாதம் நீட்டிய வண்ணம் அருளும் சயனித்த திருக்கோலத்தை நடு தளத்திலும் கண்டு வழிபடலாம். மகாவிஷ்ணு மூன்று கருவறைகளில் தனித்தனியாய் அருளும் அமைப்பினைக் கொண்டது இத்தலம். நான்காவது கருவறையும் இங்கு உள்ளதாம். ஆனால் நான்காவது கருவறையில் எதுவும் இல்லை.
ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல பெருமாளை வழிபட்டால், சகல மேன்மைகளும் நம் வாழ்வில் வந்து சேரும் என்கிறார்கள். மணல் பாறை களால் ஆன, அதிக புடைப்பு சிற்பங்கள் நிறைந்த குடைவரை கோவில் அமைப்பினை உடையது இத்திருத்தலம். பெரும்பாலும் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபத வாசல் திறப்பார்கள். ஆனால் இங்கு ஜெய விஜயர்களே ஆலயம் அமைத்ததால், இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் தனியாக சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் கிடையாது.
வைகுண்ட ஏகாதசி நாளில் இத்தல கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வைகுண்டநாதரை வழிபடுவதை சிறப்பாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழவும், குழந்தைகளுக்கு நல்லறிவு, ஒழுக்கம் வாய்க்கவும் முதலில் இங்குள்ள கயிலாயநாதர் ஆலயத்தில் வழிபட்டு, அதன்பின்னர் பரமபத நாதரான வைகுண்ட நாதரை வழிபட வேண்டும் என்கிறார்கள். இத்திருத்தலத்தில் சர்ப்ப தோஷங்கள் உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வந்து வழிபட சர்ப்ப தோஷங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது.

இந்தியாவிலேயே சிங்கிரியில் மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழக எல்லையான ஊத்துகோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் அடுத்த நாரயணவரம் ஸ்ரீதிருமலை கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அருகே சிங்கிரி என்ற இடத்தில் நான்கு திசைகளுக்கு மலைகளின் நடுவே அடர்ந்த மூலிகைகள் வாசம் நிறைந்த காட்டுபகுதியில் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராய பல்லவ பேரசால் கட்டபட்ட இந்த கோயில் நரசிம்மர் சுயம்பாக அதாவது இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார்.
பாலக பக்தன் பிரகலா தன் தன்மேல் கொண்ட தூய அன்பிற்காகவும், தீயவன் இரண்ய கசிபுவை அழிப்பதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த திருவடிவம்தான் நரசிம்ம அவதாரம் அந்நேரத்தில் அசுரனை அழித்துவிட்டு இந்த சிங்கிரி மலை காட்டுபகுதிக்கு உக்கிர நரசிம்மராக வந்தபோது சிவபெருமான் நாரத ரிஷியிடம் ஸ்ரீவிஷ்ணு உக்கர அவதாரமான நரசிம்மரை சாந்தபடுத்த என்ன செய்வதேன்று யேசித்த போது ஸ்ரீமகாலஷ்மியால் மட்டுமே சாந்தபடுத்த முடியும் என்று கூறிய நாரத ரிஷி உடனே மகாலட்சிமியிடம் முறையிடவே உடனே அதனை ஏற்று லஷ்மி தேவி சிங்கிரி மலை காட்டு பகுதிக்கு சென்று வனதேவதையாக உருமாறி நரசிம்மரை சாந்தபடுத்தியதால் இத்தலத்தில் நரசிம்மர் மற்றும் மகாலட்சுமி இருவருமே பக்தர்களுக்கு வரம்கொடுக்கவே நின்றபடியே காட்சியளிகிறார்கள்.
வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில், சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லபடுகிறது. அவ்வேளையில் இங்கு வரும் பக்தர்களுக்கு உள்ள அனைத்து குறைகளும் நீங்கும். நரசிம்ம அவதாரம் அந்த வேளையில் நிகழ்ந்ததால் நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக பிரதோஷம் கருதப்படுகிறது. எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.
இந்த சிங்கிரி லஷ்மி நரசிம்மரை அந்த நேரத்தில் வணங்க நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், திருமண தடை நீங்கும், குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும்,தீராத நோயும் தீரும், கடன்கள் தீரும்,மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்தால் பூரண குணம் கிடைக்கும், மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.
இந்த திருத்தலத்தில் நரசிம்மரின் அவதாரத் திருநாளான நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை. அபிசார தோஷம் எனப்படும் பில்லி சூனிய பிரச்னை, கடன் தொல்லை, வீட்டில் எப்போதும் சண்ட சச்சரவு, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேரவே இல்லை என்ற ஏக்கம் போன்ற பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனி போல விலகிவிடும்.

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும்.
ஆபத்து வரும் போதும், ஆற்றாமை ஏற்படும் சமயத்திலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது உலக உயிர்களின் இயல்பு. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராமாயண காலத்தில் வாழ்ந்த சுக்ரீவன், வணங்கி வழிபட்ட தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை திருத்தலம்.
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும். தற்காலம் ஆடுதுறை என அழைக்கப்படும் இவ்வூர், சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் பூபாளகுலவள்ளி வளநாடு, துரைமூர்நாடு என்று அழைக்கப் பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் மற்றும் வள்ளலாரால் பாடப்பெற்ற பெருமைக்குரிய ஆலயம் இதுவாகும்.
இத்தல இறைவனின் திரு நாமம் ஆபத்சகாயேஸ்வரர், இறைவியின் பெயர் பவளக் கொடியம்மை என்ற பிரபாளவள்ளி. ஆலய தல விருட்சம் பவளமல்லி, தீர்த்தம் சூரிய தீர்த்தம் மற்றும் சகாய தீர்த்தம் ஆகும்.
தல வரலாறு :
ராமாயண காலத்தில் கிஷ்கிந்தை நாட்டை ஆட்சி செய் தவன், வானர அரசனான வாலி. அவனது சகோதரன் சுக்ரீவன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாலியைக் கண்டு அச்சமடைந்த அசுரன், புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இதனால் தம்பி சுக்ரீவனை குகைக்கு வெளியே காவல் இருக்கச் செய்து விட்டு, மற்ற வானரர்களுடன் குகைக்குள் சென்றான் வாலி.
ஆனால் ஒரு வருடம் முடிந்த பின்னரும் வாலியைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. குகைக்குள் சென்ற வானரங்கள் அனைவரும் வந்து விட்ட நிலையில் வாலி மட்டும் வரவில்லை. மேலும் அவ்வப்போது அபயக்குரல் கேட்பதும், ரத்தம் வெளிவருவதுமாக இருந்ததால், வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுக்ரீவன் கருதினான்.
பின்னர் தன் சகோதரனைக் கொன்றவன் வெளியே வரக்கூடாது என்பதற்காக, குகையின் வாசலை ஒரு பெரும் பாறையால் மூடிவிட்டு, கிஷ்கிந்தைக்கு திரும்பினான். அரசவை அமைச்சர்கள், சுக்ரீவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். சுக்ரீவனும் நீதி நெறிப்படி அரசாட்சி செய்து வந்தான்.
சில மாதங்கள் கழித்து, அனைவரும் வியக்கும் வகையில் வாலி உயிருடன் வந்து நின்றான். அவன் அசுரனை கொன்றுவிட்டு திரும்பியபோது, குகை மூடியிருப்பது கண்டு அதிர்ந்தான். கிஷ்கிந்தை வந்தபோது சுக்ரீவன் அரசாட்சியில் இருப்பதை பார்த்ததும், வாலிக்கு கடும் கோபம் உண்டானது. குகை வாசலை மூடிவிட்டு ராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன் மீது குற்றம் சாட்டி, அவனை நாட்டை விட்டே வெளியேற்றினான்.
தன் தவறான அனுமானத்தால், அண்ணனுக்கு தீங்கு இழைத்து விட்டதாக கருதிய சுக்ரீவன், அதற்கு பிராயசித்தம் தேடினான். மேலும் அண்ணனால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சிவபெருமானை வேண்டினான்.
தன்னை சரணடைந்த சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலி யிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார் ஆடுதுறை ஈசன். இதனால் அவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார் என்று தல புராணம் சொல்கிறது.
சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தில்லை திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்காகவும், வியாக்கிர பாதருக்காகவும் ஆனந்த திருநடனத்தை ஆடிக் காண்பித்தார் சிவபெருமான். அதைக் கேட்டு பிரம்மிப்பில் ஆழ்ந்த தேவர்களும், பிற முனிவர்களும் தங்களுக்கும் அந்த நடனத்தை இவ்வாலயத்தில் ஆடிக் காண்பிக்க வேண்டும் என்று ஈசனை வேண்டினர். அதன்படி ஈசன் ஆடுதுறையிலும் ஆனந்த தாண்டவத்தை ஆடி அருளினார். எனவே நடனக் கலையில் சிறந்து விளங்க விரும்பு வோர், சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போல, இத்தல இறைவனையும் பிரார்த்திக்கலாம்.
ஒரு சமயம் நாரதர், ஆகாய வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் அனுமன் இருப்பதைப் பார்த்து நலம் விசாரிக்க கீழே இறங்கினார். ஆனால் நாரதர் வந்ததை அனுமன் கவனிக்கவில்லை. ஏனெனில் அவர் ராம கீர்த்தனையில் மெய்மறந்திருந்தார். நாரதரோ, அனுமனின் சங்கீத கலை மறந்து போகுமாறு சபித்தார். அதில் இருந்து விடுபட அனுமன் இந்த ஆலய இறைவனை வணங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு:
இவ்வாலயம் கிழக்கு நோக்கி 3 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது. கோபுர வாசலைக் கடந்து சென்றால், கொடிமரத்து விநாயகரையும், பலிபீடத்தையும், சிறு மண்டபத்துக்குள் உள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப்பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களும், திருப்புகழ்ப் பாடல்களும் வடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வாசலின் முன்பாக நின்று நிமிர்ந்துப் பார்த்தால், வானரங்களின் ராஜனும், தனது சகோதரனுமான வாலியின் கொடுமையில் இருந்து மீள சுக்ரீவன் சிவபூஜை செய்வதும், சுக்ரீவனை இறைவன் அன்னப் பறவையாகவும், அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றி அருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை சிற்பமாக உருவாக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக காட்சியருளிக் கிறார். உள் பிரகாரத்தின் இடதுபுறத்தில் நால்வர் உள்ளனர். மேற்கு திருமாளப்பத்தியில் உள்ள ஏழு சன்னிதிகளில் முறையே வாயுமூர்த்தி, மகாகணபதி, காசிவிசுவநாதர், சுக்ரீவனுக்கு அருள்புரியும் சுவாமி மற்றும் அம்பாள், வருணலிங்கம், விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், இந்திர லிங்கம், குபேரலிங்கம், கஜலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் கிணறும், நடராஜர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நாகர், சொர்ண காலபைரவர், சூரியர், சனி பகவான், பாணலிங்கம், ஹரதத்தர், நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன.
கருவறை கோட்டத்தின் தென்புறம் கோஷ்ட கணபதி, நடராஜர், அகத்தியர், சிவன் (இவர்கள் நால்வரையும் பூஜிக்கும்) ராணி செம்பியன் மாதேவி சிற்பம். மற்றும் தட்சிணாமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். மேற்குபுறம் அண்ணாமலையார், (இவரை பிரம்மாவும் விஷ்ணுவும் வழிபடுகின்றனர்). வடபுறம் பிரம்மா, சிவனை வழிபடும் காரைக்கால் அம்மையார், எட்டுத் திருக்கரங்களோடு அருளும் துர்க்கா தேவி, கங்கா விசர்சன மூர்த்தி, பைரவ மூர்த்தி உள்ளனர். கருவறையின் முன் நந்தியம்பெருமானை பார்த்து புன்னகைத்தவாறு ஆபத்சகாயேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
இவ்வாலய முருகப்பெருமான் சிறப்புக்குரியவர்்; அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெரு மானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும். ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தை - மகன், இவ்வாலயம் வந்து முருகப்பெருமானை வேண்டி பரிகார பூஜை செய்துக் கொண்டால், வினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
அக்கரையில் அருட்காட்சி :
தீவிர சிவ பக்தராக விளங்கிய ஹரதத்தர், அனுதினமும் திருநீலக்குடி, திருக்குழம்பியம், திருக்கோடிக்காவல், கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு, இறுதியாக ஆடுதுறை இறைவனை தரிசித்து விட்டுதான் உணவு அருந்துவாராம். ஒருநாள் காவிரியில் வெள்ளம் காரணமாக தண்ணீர் அதிகமாக ஓடிற்று. ஆற்றை கடந்துச் சென்று இறை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த ஹரதத்தர், தனக்கு ஏற்பட்ட இன்னலைத் தவிர்க்க வேண்டும் என இத்தல இறைவனிடம் முறையிட்டார். இதையடுத்து ஆற்றின் அக்கரையில் இருந்த ஹரதத்தருக்கு, இறைவன் அங்கேயே காட்சி தந்து அருள்புரிந்தாராம்.
இவ்வாலயத்தில் சிவாலயங்களுக்கு உரிய அனைத்து உற்சவங்களும், திருவிழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
அமைவிடம் :
இத்திருக்கோவிலுக்குச் செல்ல மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள் ளன. அருகாமை ரெயில்நிலையம் மயிலாடுதுறை மற்றும் ஆடுதுறை.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.
இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.
இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.
ஈஸ்வரன் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். பரமேஸ்வரன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, ஈசனின் கண்டத்தை (கழுத்தை) பிடித்தாள் உமாதேவி. இதனால் விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதனால் தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று அழைக்கிறோம்.
விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் பார்வதி தேவி ‘சர்வமங்களா’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.
5 அடி உயர நந்தீஸ்வரர் :
இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பள்ளிகொண்டீஸ்வரரை சுற்றி பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கவுதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, தேவேந்திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருட்காட்சி புரிகிறார்கள்.
3 நிலை கொண்ட ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் உள்ளார். இந்த கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினியாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு பசு காணப்படுகிறது.

ஏகபாத திரிமூர்த்தி :
மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்களுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கிறார்கள்.
வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது.
அதிகார நந்தி :
பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் வேணுகோபாலசுவாமி தனது கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். மற்றொரு பக்கம் வேறெங்கும் காண முடியாத வகையில், நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள்கிறார்.
கிழக்கு பக்கத்தில் ஒரு சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்சநேயர் உள்ளனர். இதை கடந்து சென்றால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீகிஸ்வரர் சிலை உள்ளது.
பல கோவிலில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். ஆனால் இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அற்புதம் ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ வழிபாடு :
இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. மேலும் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை aதிறந்திருக்கும்.
அமைவிடம் :
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். நாம் பஸ்சைவிட்டு இறங்கினாலே, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலின் கோபுரம் நம்மை வரவேற்கும்.

பள்ளிகொண்டீஸ்வரர்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காலவ மகரிஷியின் மகளாக இருந்த லீலாவதி, ஒரு சாபத்தின் காரணமாக அசுர குலத்தில் மகிஷியாகப் பிறந்தாள். அவள் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக வித்தியாசமான வரம் ஒன்றை பிரம்மனிடம் கேட்டுப் பெற்றிருந்தாள். ‘சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறந்த பன்னிரண்டு வயது பாலகனால் மட்டுமே தன் அழிவு இருக்க வேண்டும்’ என்ற வரம் அது.
ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் அழகில் மயங்கிய சிவபெருமான், மோகினியுடன் இணைந்தார். இதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் கழுத்தில் மணி மாலை அணிவித்து காட்டில் விட்டுச் சென்றனர். அங்கு வேட்டையாட வந்த பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன், அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று ராணியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான். குழந்தை இல்லாத அவர்களுக்கு அந்தக் குழந்தை ஆறுதலாக இருந்தது. கழுத்தில் மணி மாலை இருந்ததால் குழந்தைக்கு ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டனர்.
இந்த நிலையில் ராணிக்கு ஒரு மகன் பிறந்தான். எனவே மணிகண்டன் மீது இருந்த அன்பு, ராணிக்கு குறையத் தொடங்கியது. தனக்கு பிறந்த மகனே அரசாள வேண்டும் என்று நினைத்த ராணி, அதற்கு தடையாக இருக்கும் மணிகண்டனை அழிக்க நினைத்தாள். எனவே தனக்கு தீராத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தீர்க்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றும் அரண்மனை வைத்தியரை வைத்து பொய் கூறினாள்.
புலியின் பாலைக் கொண்டு வர பலரும் தயங்கிய நிலையில், தாயின் நோய் தீர்க்க தானே செல்வதாக முன் வந்தான் 12 வயதான பாலகன் மணிகண்டன். காட்டில் தன்னை வழி மறித்த மகிஷியையும் வதம் செய்தான். இதனால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவர்களே புலிகளாக மாறி, மணிகண்டனுடன் நாடு திரும்பினர். புலிகள் சூழ, ஒரு புலியின் மேல் அமர்ந்து வந்த மணிகண்டனைக் கண்டு ராணி திடுக்கிட்டாள். மணிகண்டனின் தெய்வீக சக்தியை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
தான் இந்த பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டதாகவும், இனி நான் வேறு இருப்பிடம் செல்ல வேண்டும் என்றும் மணிகண்டன் சொன்னார். பின்னர் ஒரு அம்பை எடுத்து எய்து, ‘நான் எய்த அம்பு விழும் இடத்தில் எனக்குக் கோவில் கட்டுங்கள்’ என்று தந்தை ராஜசேகரனிடம் சொன்னார். அதன்படி அமைக்கப்பட்டது தான் சபரிமலை என்று தல வரலாறு சொல்கிறது.
கோவில் அமைப்பு :
சபரிமலையில் பதினெட்டுப் படிகளில் மேல் ஏறிச் செல்லும்படி உயரமான இடத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் ஐயப்பன் சன்னிதி இருக்கிறது. கோவில் கருவறையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன், அறிவின் உயர்நிலையைக் கைவிரல்களால் காட்டும் அடையாளமான சின் முத்திரையோடு காட்சி தருகிறார். மேலும் ஒரு ஆடையால் முழங்காலைச் சுற்றிக் கொண்டு, குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கோவில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, நாகராஜா உள்ளிட்டோருக்கும் சன்னிதிகள் உள்ளன. அருகில் மாளிகைப் புறத்து அம்மன் சன்னிதி இருக்கிறது.
ஆலயம் ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நாட்களில் அதிகாலை 4 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடை திறந்திருக்கும். தவிர கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படும். இந்த நாட்களில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மண்டல பூஜையின் நிறைவு நாளில் தங்கத்தால் ஆன உடை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தை மாதம் மகர விளக்கு பூஜை, சித்திரை விஷு ஆகிய தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோவிலுக்குக் காப்பீடு :
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலைச் சுமார் ரூ.30 கோடி அளவில் காப்பீடு செய்திருக்கிறது. மேலும், இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு விபத்துகளில் இருந்து இலவசக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்திச் செயல் படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து மலையேற்றப் பாதையில், சன்னிதானம் சென்றடையும் வரையிருக்கும் 18 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில், விபத்துக்குள்ளாகி காயமடைவோர் மற்றும் உயிரிழப்பவர்களுக்குச் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக வழங்க முடியும்.
ஐயப்பன் சிலை :
சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை, 1950-ம் ஆண்டில் நடைபெற்ற தீ விபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து ‘சிலையை யார் செய்ய வேண்டும்?’ என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சன்னிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த இருவரின் பெயர்கள் வந்தன. அவர்கள் இருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கி, சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.
இருமுடி வண்ணங்கள் :
சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி செல்வார்கள். பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பட்ட பையினுள், இறைவனுக்குப் படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் இருக்கும். இந்தப் பையைத் தான் ‘பள்ளிக்கட்டு’ அல்லது ‘இருமுடிகட்டு’ என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு, சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளைப் பயன்படுத்துகின்றனர்.
சபரிமலை செல்ல.. :
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதற்குப் பல வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதி நகரங்களான குமுளி, செங்கோட்டை ஆகிய ஊர்களின் வழி யாகச் சபரிமலைக்குச் செல்கின்றனர். குமுளி வழியில் செல்பவர்கள், அங்கிருந்து வண்டிப்பெரியார், எருமேலி, பிலாப்பள்ளி ஆகிய ஊர்களின் வழியாக சுமார் 176 கிலோமீட்டர் தூரமும், செங்கோட்டை வழியில் செல்பவர்கள் அங்கிருந்து புனலூர், பத்தனம்திட்டா வழியாகச் சுமார் 166 கிலோமீட்டர் பயணித்தும் பம்பையை அடையலாம். பம்பையில் இருந்து நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டும். ஐயப்ப பக்தர்களில் சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபுவழியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.
அமைவிடம் :
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலைக்கு செல்ல, பம்பை என்ற இடம் வரை பஸ் வசதி உள்ளது. பம்பையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்லலாம். சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபு வழியில் பயன்படுத்தி வரும் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்தே சபரிமலைக்குச் செல்கின்றனர். கோட்டயம் நகரிலிருந்து மணிமலை வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில்இருக்கும் பம்பைக்குப் பேருந்து வசதி இருக்கிறது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள் காட்சி தந்து, அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும் ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.
மரமே மூர்த்தி
சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனக்கலவையைப் பூசி அதன் மேல் வெள்ளியில் ஆன நெற்றிப்பட்டம், திருக்கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பெற்று திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தைச் சார்ந்துள்ள முகப்புமேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.
இறைவடிவங்கள்
முகப்பில் அழகான பித்தளை தகட்டினால் செய்யப்பட்ட தோரண வாயிலில் இறை வடிவங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மரத்தின் முழுவடிவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்ட நிலையில் திருவாட்சி ஒளி செய்ய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமானின் திருமுகம் “லிங்கம்” போன்ற வடிவத்தைக் காட்டி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிலைப்படியும், திருக்கதவும் பித்தளை தகடுகளால் அழகுபடுத்தப்பட்டு ஒளி வீசுகின்றன. அதன் எதிரே நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
சோமவாரவழிபாடு
கார்மேகம் திரண்டு வந்து கனமழைப் பொழியும் கார்த்திகை மாதம் தான் இந்த ஆலயத்தின் திருவிழாக் காலமாகும். கார்த்திகை மாதத் திங்கட்கிழமை (சோமவாரம்) ஒவ்வொன்றும் சிறப்பு வழிபாட்டிற்கு உரிய நாட்கள் ஆகும். பகல் நேரத்தில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்திருந்தும், பெருந்திரளாக வரும் பக்தர்கள் கருவறை கதவிலேயே மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து அபிஷேகம், அர்ச்சனை முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி செல்கின்றனர்.
சோமவார திருவிழாக்காலங்களில் முடிகாணிக்கை, மா விளக்கு போடுதல் என பல்வேறு வகைகளில் தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். ஒவ்வொரு சோமவாரத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுவர். கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பகலில் நடை திறக்கும் கோவில்
பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் பகலில் நடை திறக்காமல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டும் நடை திறக்கப்பட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் தைப்பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரை என நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும்.