என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • கண்டனூர் மீனாட்சி அம்மன் உற்சவம்.
    • சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி.

    இந்த வார விசேஷங்கள்

    25-ந் தேதி (புதன்)

    * அமாவாசை.

    * திருவள்ளூர் வீரராகவர் தெப்ப உற்சவம்.

    * ஆவுடையார்கோவில், சிதம்பரம் தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    26-ந் தேதி (வியாழன்)

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் விழா தொடக்கம்.

    * கண்டனூர் மீனாட்சி அம்மன் உற்சவம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

    * ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி விழா தொடக்கம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (சனி)

    * ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

    * கண்டனூர் மீனாட்சி அம்மன் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (ஞாயிறு)

    * சதுர்த்தி விரதம்.

    * மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

    * திருக்கோளக்குடி ககோளபுரீசுவரர், கண்டதேவி சிவபெருமான் தலங்களில் விழா தொடக்கம்.

    * சிதம்பரம், ஆவுடையார் கோவில் தலங்களில் சிவ பெருமான் திருவீதி உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    30-ந் தேதி (திங்கள்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆனி உற்சவம்.

    * சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி.

    * திருவில்லிபுத்தூர் பட்டர் அம்ச வாகனத்தில் பவனி.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தலங்களில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-11 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை மாலை 5 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் காலை 11.39 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று

    இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருவள்ளூர் வீரராகவர் தெப்பம். சிதம்பரம், ஆவுடையார் கோவிலில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழக சேவை காண்பித்தருளல். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்காரம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கீர்த்தி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-சலனம்

    கடகம்-வரவு

    சிம்மம்-பரிவு

    கன்னி-செலவு

    துலாம்- பரிவு

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- வெற்றி

    மகரம்-திடம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-கடமை

    • பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான்.
    • அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது.

    சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை வருகிறது.

    ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. எனவே அமாவாசை நேர இரவு வழிபாட்டை இன்றிரவு செய்யலாம்.

    நாளை அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.



    தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான். இந்த இரண்டுமே மிக உயர்ந்த சக்தி கொண்டவை. எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகம்.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

    நாளைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்துத் தூய்மையாக்கும் நாள்.

    சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும்கூட நிகழும் இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

    நாளை காலதேவனின் 3-வது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும். அதன் மூலமாக குடும்பத்தில். சகோதர ஒற்றுமை பெருகும். அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும்பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே நாளை செய்யும் முன்னோர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை ஓங்க செய்யும்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் திருவாதிரை நட்சத்திர நேரம் நாளை (புதன் கிழமை) பகல் 11.39 மணிக்குத்தான் தொடங்குகிறது. அதிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப்படும் முன்னோர் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். மேலும் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.

    சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.

    நம் ஜாதகத்தில் கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்க, சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை என்கிற இந்த ஆனி மாத அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

    மேலும் நாளை கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.

    நாளை முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் விலகி சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதமான நிலையில் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

    • அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களை பெற்றார்.
    • வைகாசி விசாகம் அன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி சிவனையும், பார்வதி தேவியையும் மன்றாடி வணங்கினர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பச்சூரில் உள்ள நூலாற்றங்கரையில் அமைந்துள்ளது, சித்தி காளியம்மன் கோவில். இந்த ஆலயம் நோய் நொடிகள், பில்லி சூனியம் போக்கி, குழந்தை பாக்கியம், திருமண யோகம், அருளும் தலமாக விளங்குகிறது.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களை பெற்றார். இதனால், தானே அனைவரிலும் மேலானவன் என்ற ஆணவம் கொண்டார். ஒரு சமயம் பார்வதி தேவியை சுக்ராச்சாரியார் சந்தித்தார். அப்போது ''உன்னைவிட நானே பெரியவன். அதனால் நீ என்னை வணங்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார்.

    அதற்கு பார்வதி தேவி, ''உன்னை நான் வணங்க முடியாது'' என மறுத்தார். இதனால் கோபம் கொண்ட சுக்ராச்சாரியார், ''உன்னை வணங்கும் பூலோக மக்களை நான் கொன்று குவிப்பேன். அப்போது நீ என்னை வணங்குவாய்'' என சபதமிட்டார். தனது சீடரான அசுரனை பூலோகம் அனுப்பி, காலரா, அம்மை போன்ற தீவிரமான நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தினான். இதனால் கடும் அவதியுற்று பலபேர் மாண்டனர்.

    இதையடுத்து வைகாசி விசாகம் அன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி சிவனையும், பார்வதி தேவியையும் மன்றாடி வணங்கினர். அன்று இரவு காத்தான் என்பவரது கனவில் தோன்றிய பார்வதி தேவி, ''என்னை நூலாற்றங்கரையில் காளியாக பிரதிஷ்டை செய்யுங்கள். நான் மக்களை காப்பேன்'' என்றார். இதையடுத்து காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்பு காளியம்மன் அசுரனை வதம் செய்தார். மக்களும் நோய் நொடியில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்தனர். அதன்பின் மக்களின் வேண்டுகோளின்படி இத்தலத்திலேயே காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.

    கோவில் அமைப்பு

    கோவில் ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் மூல விக்ரமாக சித்தி காளியம்மன் அருள்பாலிக்கிறார். பரிவார மூர்த்திகளாக விநாயகர், சிவன், பெரியாட்சி, காத்தவராயன், பொம்மி, ஆரியமாலா ஆகியோர் காட்சி தருகின்றனர். வெளிபிரகாரத்தில் பிள்ளையார், ராகு, கேது, ஐந்து தலை நாகம் அமைந்துள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக அரசமரம், வேம்பு, வன்னி ஆகியன உள்ளன.

    வழிபாடு

    மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், அன்னதானமும் நடைபெறும். ஆடி, தை மாதத்தில் பெண்கள் விளக்கு பூஜையும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரம், கார்த்திகை தீப திருவிழா, கன்னி பொங்கல் திருவிழா, மார்கழி மாதம் அதிகாலை பூஜை, ஆடி மாதம் கஞ்சி ஊற்றுதல், வைகாசி மாதம் 5 நாட்கள் அசுர சம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பூச்சொரிதல், சந்தன காப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை, பாலாபிஷேகம், அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம், காளி படையல், காத்தவராயனுக்கு படையல் போன்ற நிகழ்ச்சிகளும் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

    அரச மரம், வேப்ப மரத்துடன் கூடிய ராகு, கேது பகவான் அமைந்துள்ளதால், திருமணம் யோகம், குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள் இங்குள்ள மரத்தை சுற்றி வருகிறார்கள். நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி வருபவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கிவிட்டு அன்னதானம் அருந்திவிட்டு செல்கிறார்கள்.

    அமைவிடம்

    காரைக்கால்-திருநள்ளார் மெயின்ரோட்டில் உள்ளது பச்சூர் கிராமம். இங்கு நூலாற்றங்கரையில் அமைந்துள்ளது சித்தி காளியம்மன் கோவில்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-10 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி இரவு 6.56 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 12.52 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சிதம்பரம், ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம்.

    திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-புகழ்

    கடகம்-பக்தி

    சிம்மம்-மேன்மை

    கன்னி-பெருமை

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- கண்ணியம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-ஆதரவு

    மீனம்-உழைப்பு

    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திரு மஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் கொடியேற்றி பூஜைகளை நடத்தினார்.

    நாளை (24-ந் தேதி) வெள்ளி சந்திரபிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 25-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    27-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 28-ந் தேதி வெள்ளி யானை வாகனம், 29-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.

    2-ந் தேதி அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது.

    அன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. 4-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமண சேவை.
    • சிதம்பரம் ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-9 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 9.06 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.18 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவான்மியூர், மயிலாப்பூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்

    இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமண சேவை. சிதம்பரம் ஆவுடையார் கோவில் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணிகை ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-வரவு

    சிம்மம்-நட்பு

    கன்னி-களிப்பு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- புகழ்

    மகரம்-ஆசை

    கும்பம்-பரிவு

    மீனம்-பண்பு

    • முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
    • சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.

    சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ விரதம் வரும். அந்த வகையில், நாளை ஆஷாட கிருஷ்ண பக்ஷத்தில் வரும் பிரதோஷ விரதம் திங்கட்கிழமை வருவதால் இது சோம வார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மிக வளர்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருகும். ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

    சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷம் எப்படி கிடைப்பதற்கு அரிய பலன்களை தரக் கூடிய மிக முக்கியமான பிரதோஷமோ, அதே போல் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும் மிகவும் முக்கியமானதாகும். சிவ பெருமானுக்கும், சந்திரனுக்கும் உரிய திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.

    அதிலும் நாளை சோமவார பிரதோஷம், ஆனி மாத சிவராத்திரி மற்றும் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.

    கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது மேலும் ஒரு விசேஷம். கிருத்திகை முருகப் பெருமானின் நட்சத்திரம். முருகனும் சிவபெருமானும் வேறுவேறல்ல. சிவபெருமானின் அக்னி வடிவமே முருகக் கடவுள். முருகக் கடவுள் தேவர்களின் துயர்தீர்க்க அவதரித்தவர். கருணையே வடிவான வேலினைக் கையிலே கொண்டவர். அதோடு தகப்பன் சாமியாக சுவாமிமலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர். எனவே நாளை விரதம் இருந்து சிவபெருமானையும் முருகப் பெருமானையும் கட்டாயம் வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

    நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம். நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-8 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி இரவு 11.25 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : பரணி பிற்பகல் 3.52 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    கார்த்திகை விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை

    இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம், திருத்தணிகை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும், அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-கடமை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-போட்டி

    துலாம்- வரவு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- தெளிவு

    மகரம்-நன்மை

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பண்பு

    • அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது.
    • அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.

    மதுரை அருகே உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது, வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி அம்மன் கோவில். இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

    யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது. இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இந்த தீர்த்தம் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதால், இங்கு நீராடினால் தீராத பல நோய்களும் நீங்குவதாக நம்பப்படுகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது 'சிலம்பாறு' என்று வழங்கப்படுகிறது.

    அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு 'தேனாறு' என்றும் பெயர்.

    இங்கிருக்கும் "மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி செய்தியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமார் தீர்த்தம். இங்கே ஓர் அனுமன் கோவில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் இருக்கிறது. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாவத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் உள்ளது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே உள்ளது உத்தர நாராயண வாவி தீர்த்தம். இந்த தீர்த்தத்தினால் தான் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் சென்று தங்கி இருக்கும்போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.

    • திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதூர் பூதேஸ்வரர் பூஜை.
    • திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-7 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி நள்ளிரவு 1.52 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : அசுவினி மாலை 5.30 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ ஏகாதசி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

    இன்று சர்வ ஏகாதசி. திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாசிரமத்தில் ஸ்ரீ மாதூர் பூதேஸ்வரர் பூஜை. நெல்லை சமீபம் இரட்டை திருப்பதி ஸ்ரீசீனிவாசன், தேவர்பிரான், அலமேலு மங்கை பத்மாவதி தாயார், செந்தமாமரை கண்ணன் திருமஞ்சனம். திருத்தணிகை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்குளம் வலம் வரும் காட்சி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

    மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமான் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-அமைதி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-நலம்

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நன்மை

    மகரம்-புகழ்

    கும்பம்-அன்பு

    மீனம்-ஆசை

    ×