என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராக்காயி அம்மன் கோவில் நூபுர கங்கை தீர்த்தம்
    X

    ராக்காயி அம்மன் கோவில் நூபுர கங்கை தீர்த்தம்

    • அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது.
    • அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும்.

    மதுரை அருகே உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது, வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி அம்மன் கோவில். இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

    யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது. இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இந்த தீர்த்தம் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதால், இங்கு நீராடினால் தீராத பல நோய்களும் நீங்குவதாக நம்பப்படுகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது 'சிலம்பாறு' என்று வழங்கப்படுகிறது.

    அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு 'தேனாறு' என்றும் பெயர்.

    இங்கிருக்கும் "மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி செய்தியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

    இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமார் தீர்த்தம். இங்கே ஓர் அனுமன் கோவில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் இருக்கிறது. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாவத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் உள்ளது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே உள்ளது உத்தர நாராயண வாவி தீர்த்தம். இந்த தீர்த்தத்தினால் தான் கோவில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் சென்று தங்கி இருக்கும்போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.

    Next Story
    ×