என் மலர்
ஆன்மிகம்
- ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை ‘ரன்ஸகதி’ என்பர்.
- சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை.
கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது.
சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் 'சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம்.
எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.
சாதாரணமாக 'சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால், விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.
எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன்இடத்திற்கே திரும்பி விடுகிறது.
சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது.
எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.
ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை 'ரன்ஸகதி' என்பர்.
சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை.
அதனுடைய உருவம்/வடிவம் எத்தகையது என்றால், சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
- நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-28 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி இரவு 6.17 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: பூசம் இரவு 11.37 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விழா தொடக்கம். திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-ஆசை
கடகம்-ஜெயம்
சிம்மம்-உவகை
கன்னி-ஈகை
துலாம்- கீர்த்தி
விருச்சிகம்-வரவு
தனுசு- திறமை
மகரம்-உழைப்பு
கும்பம்-பயணம்
மீனம்-மேன்மை
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-27 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை மாலை 5.37 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.19 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைநாயகி சிறப்பு அலங்கார வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. நம்பியாண்டார் நம்பி நாயனார் குருபூஜை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு வழிபாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-போட்டி
மிதுனம்-வரவு
கடகம்-உவகை
சிம்மம்-தனம்
கன்னி-உதவி
துலாம்- லாபம்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- மேன்மை
மகரம்-உயர்வு
கும்பம்-இனிமை
மீனம்-செலவு
- வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார்.
- பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்கும் மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில். காஞ்சிபுரம் மாவட்டம் உலக வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாக விளங்கும் தலசயன பெருமாள் கோவில்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிபி 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களில் ஒருவரான பரங்குசண் என்கிற மன்னன் ஆகம விதிப்படி இக்கோயிலைக் கட்டி பெருமாளை வழிபட்டு வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
இவ்வாலயத்தின் மூலவராகத் தலசயனப் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாராக நிலமங்கை தாயாரும் காட்சி அளித்து வருகிறார். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலம் 12 ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் ஆதரித்த தலமாகக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக்குளத்தில் மாசி மகத்தன்று தல சயன பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.
மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி இல்லாமல் படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும், சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும், திருமணத் தடைகள் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும், குழந்தையின்மை நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் தல விருட்சமாகப் புன்னை மரமும், தல தீர்த்தமாகப் புண்டரீக புஷ்கரணி தீர்த்தமும் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்களால் மங்களா சாசனம் பாடப்பட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது.
- ஆசைகளை நிறைவேற்றும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு.
- திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் உள்ளன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாஸ்து படி கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது பல பிரச்சனைகளை சமாளிக்கும்.
இரவில் கிராம்பு வைத்து கற்பூரம் கொளுத்துங்கள். ஆசைகளை நிறைவேற்றும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு. உங்கள் விருப்பம் நன்றாக இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.
பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, சனிக்கிழமை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், கிராம்பு மற்றும் கற்பூரத்தை வெள்ளிக் கிண்ணத்தில் எரிக்கவும். இப்படிச் செய்தால் பணப் பற்றாக்குறையைப் போக்கலாம்.

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது. இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும். கற்பூரம், ஐந்து ஏலக்காய், ஐந்து கிராம்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எரிக்கவும். முதலில் பூஜையறையில் வைத்து எரித்துவிட்டு அந்த புகையை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் அமைதி உண்டாகும், கண் தோஷம் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்படும். வீட்டில் இருப்பவர் மீது தீய பார்வை இருந்தால் அது நீங்கும். இவற்றை எரிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எந்த நோய்வாய்ப்பட்ட நபரின் உடலில் இருந்தும் அந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சனிக்கிழமை மாலை வீட்டில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிரிகளிடமிருந்து விடுபடுங்கள். இந்த பரிகாரம் எதிரிகளை விட மேலான கையைப் பெற உதவுகிறது. மேலும் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரித்து வர வீட்டில் உள்ள பிணக்குகள் நீங்கும்.

சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலில் வெற்றி பெற முடியாது. இது போன்ற சமயங்களில் கற்பூரத்துடன் இந்த தீர்வை முயற்சிக்கவும். இந்த அணுகுமுறை நீங்கள் விரும்பிய வெற்றியைத் தரும். வேலை நேர்காணலுக்குச் செல்லும்போது கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது நல்லது. மேலும் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுவிட்டு வெளியே செல்லவும். நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் அவற்றை அசைக்கவும். இப்படி செய்தால் வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம். கடுகு எண்ணெயில் இரண்டு கிராம்புகளைப் போட்டு, காலையில் கடவுளுக்கு அருகில் தீபம் ஏற்றவும். அதன் பிறகு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும். அறையின் மூலையில் இரண்டு கற்பூரங்களை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் இரவில் கற்பூரம் மற்றும் கிராம்புகளை எரிப்பதால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். ஆறு கற்பூரம் மற்றும் 36 கிராம்புகளை எடுத்து வீட்டில் தூவி உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-26 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை மாலை 5.26 மணி வரை. பிறகு திருதியை
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 9.21 மணி வரை. பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பக 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராகோபால சுவாமி, திருப்புல்லாணி ஸ்ரீஜெகநாதப்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூல வருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-துணிவு
மிதுனம்-பணிவு
கடகம்-பெருமை
சிம்மம்-உண்மை
கன்னி-உதவி
துலாம்- நலம்
விருச்சிகம்-உறுதி
தனுசு- நன்மை
மகரம்-ஆக்கம்
கும்பம்-பரிவு
மீனம்-பாசம்
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.
- பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 25 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை மாலை 5.30 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.35 மணி வரை. பிறகு திருவாதிரை.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-செலவு
கடகம்- வரவு
சிம்மம்-களிப்பு
கன்னி-தனம்
துலாம்- பரிவு
விருச்சிகம்-உதவி
தனுசு- நற்செயல்
மகரம்-ஆர்வம்
கும்பம்-ஈகை
மீனம்-கடமை
- கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.
- நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.
ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியரை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதற்கென தனி வழிபாட்டு முறை உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தினத்தன்று இரவு குழந்தை பாக்கியம் பெற விரும்பும் பெண்கள் ஆண்டார் குப்பம் தலத்தில் தங்கி வழிபாடு செய்யவேண்டும்.
மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மூன்று கிருத்திகை நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்து வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.
நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.
- முருகன் முதியவராக வந்து விளையாட்டு புரிதல்,
- வள்ளி தினைப்புனம் காத்தல், குறிகேட்டல் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
மூலவர் எழுந்தருளியுள்ள கர்ப்பகிரக விமானத்தின் கிழக்குப்புறம் திருப்பரங்குன்ற முருகன், சூரியன், சந்திரன்,
தெற்குப் புறம் காமதகன காட்சி, சம்பந்தருக்கு இறைவிபால் அளிப்பது, விநாயகருக்கு அம்மையப்பர் மாம்பழம் அருளுதல்,
மேற்குப்புறம் பரமபதநாதர், பாற்கடல் நாதரைக்கருடனும், அனுமனும் வணங்குதல், கோபியருடன் கண்ணன்,
ராமர் அகலிகையின் சாபம் நீக்கும் காட்சி, விசுவாமித்திரர், லட்சுமணர் ஆகிய சிற்பங்கள் உள் வடக்குத்திசையில் விநாயகர் யானையாக வந்து வள்ளி யைப் பயமுறுத்தல்,
முருகன் முதியவராக வந்து விளையாட்டு புரிதல், வள்ளி தினைப்புனம் காத்தல்,
குறிகேட்டல் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
ராஜகோபுரத்திற்கு வெளியே தென்கிழக்குத் திசையில் குமாரசுவாமி குளமும், வடகிழக்கு திசையில் பாலநதியும் (தற்போது பூமியினுள் அந்தர்வாகினியாய் ஓடி) முருகனுக்கு அணி செய்கின்றன.
- கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.
- அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.
அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
திருவருள் பெருகும் கண்களுடன் காட்சி தரும் பாலசுப்பிரமணியரை வணங்கிப்பின் வெளியே வருகையில், இடப்புறம் காசி விஸ்வநாதப் பெருமானின் சன்னிதி உள்ளது.
அதற்கு அருகே பதினாறுகால் மண்டபத்தின் வடபுறம் விசாலாட்சி அம்பாள், சுப்பிரமணியர், சண்முகர், நடராஜர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
தெற்குப் பிராகாரத்தில் சுவாமிக்கு நிவேதனப் பொருட்களைத் தயாரிக்கும் மடப்பள்ளியும், அடுத்து திருக்கோவில் அலுவலகமும், அதனையொட்டி கல்யாண மண்டபமும் உள்ளன.
மேற்குப் பிராகாரத்தில் வாகனக் கிடங்கும், அதனையடுத்து உக்ராண அறையும் உள்ளன.
கோவிலின் வடகிழக்கு மூலையில் யாகசாலை மண்டபமும், அடுத்து நவக்கிரக சன்னதியும், அதற்கு வெளியே சம்வர்த்தன லிங்கமும் உள்ளன.
- சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், பழமதிர் சோலை முருகன் முதலான சிற்பங்களும் உள்ளன.
- அடுத்து அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பிரசன்ன விநாயகர் சன்னதி இருப்பதை காணலாம்.
முருகன் பிரம்மனைச் சிறையில் அடைத்ததன் அடையாளமாக, தாமரைப் பூவின் மீது அரூபநிலையில் பிரம்மன், மூலவரை நோக்கி வணங்கி இருக்கும் அருட்காட்சி, அம்மண்டபத்தின் நடுவே உள்ளது.
இது அனைவரும் கண்டு வணங்க வேண்டிய ஒன்றாகும்.
மண்டபத்தின் மேல்முகப்பில் ஆண்டார்குப்பத்து ஐயன், வள்ளித் திருமணக்காட்சி, தெய்வானைத் திருமணக்காட்சி,
பிரணவ உபதேசக்காட்சி, முருகன் பிரமனின் சிரசில் குட்டும் காட்சி ஆகியனவும்,
இதர பக்கங்களில் கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களிலிருந்து ஆறு குழந்தைகளை எடுப்பது,
முருகன் சக்திவேல் வாங்குவது, அருணகிரியாருக்கு மயில்வாகனர் அருளுவது, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்,
சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், பழமதிர் சோலை முருகன் முதலான சிற்பங்களும் உள்ளன.
அடுத்து அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பிரசன்ன விநாயகர் சன்னதி இருப்பதை காணலாம்.
எண்ணிய காரியங்களை ஈடேற்றும் அந்த விநாயகரை வணங்கிச்சென்று பாலசுப்பிரமணியர் சன்னதியை அடையலாம்.
- போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
- இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.
சுப்பிரமணியப் பெருமான் சூரனுடன் போர்புரிந்த சமயத்தில், இந்திரன் மயிலாக உருமாறிப் பெருமானைத் தாங்கினான்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கோவில் விழாக்காலத்தில் மயில்வாகனத்தில் பெருமானை எழுந்தருளச் செய்வார்கள்.
அதில் மயிலின் தலைபாகம் முருகனது இடப்பக்கத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.
போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.
இதனை உணர்த்தும்வண்ணம், உற்சவ காலத்தில் சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் மயில்வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.
அப்போது, மயிலின் தலை, முருகனது வலப்பாகத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.
அடுத்து மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பெற்ற சிற்பங்களுடன் கூடிய பதினாறுகால் மண்டபம் காட்சி தருகின்றது.






