என் மலர்
ஆன்மிகம்
- 13-ந்தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
- 16-ந்தேதி திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
11-ந்தேதி (செவ்வாய்)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
12-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந்தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
* திருக்கோளக்குடி சிவபெருமான் புறப்பாடு.
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந்தேதி (வெள்ளி)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் திருவீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
15-ந்தேதி (சனி)
* கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசபெருமாள் திருவீதி உலா.
* திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் உலா,
* மேல்நோக்கு நாள்.
16-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
17-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பக்ரீத் பண்டிகை.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத் தில் பவனி,
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
- திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- கோமாசிமாற நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 29 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி இரவு 7.26 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: ஆயில்யம் நள்ளிரவு 1.38 மணி வரை. பிறகு மகம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கபூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கோமாசிமாற நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-அன்பு
மிதுனம்-பரிசு
கடகம்- லாபம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-இன்பம்
துலாம்- சாந்தம்
விருச்சிகம் -இனிமை
தனுசு- ஆசை
மகரம்-வரவு
கும்பம்-பண்பு
மீனம்-பரிவு
- அவையில் இருந்தவர்களிடம், “யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்கக்கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டான்.
- ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தோற்றத்தில் மயங்கி அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.
பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் தூது புறப்பட்டார் கிருஷ்ணர்.
கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்துண்டார்.
முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன்.
அவையில் இருந்தவர்களிடம், "யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்கக்கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டான்.
ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தோற்றத்தில் மயங்கி அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.
துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், "கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?" என்று கேட்டான்.
வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர்.
ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்துவிட்டான்.
நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால், விதுரரின் பிறப்புப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான்.
"தர்மத்தின் பக்கம் தான் நிற்பான்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவி செய்ய எனக்கு மனமில்லை!" என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்துவிட்டார்.
நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனனுக்கு உதவினால், பாண்டவர்களால் போரில் வெல்ல முடியாது என்பதால், துரியோதனனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி, அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்தது கிரிஷ்ணரின் தந்திரம் ஆகும்.
- கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர்.
- ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.
"அநுராக மனோரமம் முக்தசங்க மனோரமம்" என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றிப் பணிவர்.
அநுராக மனோரமம் என்றால் அன்பர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவன் என்று பொருள்.
முக்தசங்க மனோரமம் என்றால் முற்றும் துறந்த பற்றற்ற பரமஞானியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன் என்று பொருள்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு ஆழ்வார்கள், ஸ்ரீராமருக்கு வானரங்கள், சிவ பெருமானுக்கு நாயன்மார்கள் என்பது போல் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோபிகா ஸ்திரிகளும் அடியார்களைப் போல் அபரிதமான பக்தி கொண்டிருந்தனர்.
கண்ணன் மீது நீங்காத பக்தி பூண்ட கோபியர்கள் பூவுலகில் பெரும் புண்ணியத்தைச் செய்து பிறந்தவர்கள்.
கண்ணனின் மோகக் குழலோசைக்கு அந்த மோகனப் பதுமைகள் மதி மயங்கிப் போயினர்.
கோபிகாஸ்திரிகளின் பிரேமை (மயக்கம்) என்பது ஒரு வித்தியாசமான பக்தி.
அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது. அற்புதமானது, ஆனந்த மயமானது.
பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது. அதே போல் கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.
ஸ்ரீகிருஷ்ணன் மதுராபுரிக்குச் சென்றதும், அவனது பிரிவை கோபியர்களால் தாங்க முடியவில்லை. கண்ணனிடம் பூண்டுள்ள பிரேமையை அவர்களால் மறக்க முடியவில்லை.
கோபியர், கண்ணனின் திருமேனியைத் தரிசித்து மகிழ்ந்த பக்திப் பாவையர்கள். அவர்கள் நிலையான பேரின் பத்தைக் கண்டவர்கள். சிற்றின்பத்தைக் காணாதவர்கள்.
கோபியர், தாங்கள் ஸ்ரீகிருஷ்ணனிடம் கொண்டுள்ள அபரிதமான தாபத்தினால் உலகையே மறந்து விடுகிறார்கள்.
ஸ்ரீகிருஷ்ணன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் ஆனதால் கோபியர்களின் பிரேமையும் நிர்குணசொரூப மடைந்து ஜென்ம சாபல்யம் அடைகிறது.
கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர்.
ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.
அல்லும் பகலும் பக்தனைப் போல் பரந்தாமனிடம் பக்தி பூண்ட கோபியர் எங்கும், எதிலும், எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனுடைய மோகனரூபத்தைக் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டவர்கள்.
அதனால்தான் இன்றும் ஹரிகதா காலசேபங்கள் பூர்த்தி பண்ணும் போது, "கோபிகா ஜீவன ஸ்மரணம்" என்று கூறப்படுகிறது.
கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.
- உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள்.
- திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.
ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார்.
"கண்ணா, சீக்கிரம் வா!" என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான்.
பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, "கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!" என நின்று யோசித்தாள்.
"அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும் பொது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்" என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.
உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.
இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபொது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர்.
பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.
- ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவு பதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார்.
- முடிவாக சகுனி, “உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததை யெல்லாம் மீண்டும் பெறலாம்” என்று தூண்டினான்.
துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான்.
மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர்.
சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்து விட்டான்.
சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன்.
தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார்.
முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான்.
ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவு பதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார்.
முடிவாக சகுனி, "உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததை யெல்லாம் மீண்டும் பெறலாம்" என்று தூண்டினான்.
அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார்.
துரியோதனன், "நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள்" என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான்.
திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டி இருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனனிடம் கட்டளையிட்டான்.
அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான்.
துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனனிடம் சொன்னான்.
அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான்.
சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.
திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, "ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை" என ஓலமிட்டாள்.
அந்த அனா தரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது.
துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.
தனக்கு தக்க சமயத்தில் உதவிய திரவுபதிக்கு கிருஷ்ணரும் தக்க சமயத்தில் உதவி மானம் காத்தார்.
- முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள்.
- ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை
ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள்.
ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை.
தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள்.
அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை.
சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள்.
என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது.
இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.
பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.
கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
- யசோதைக்குப் பெரும் கோபம் வந்தது.
- ஒரு கயிற்றை எடுத்து குழந்தையின் இடுப்பில் கட்டினாள்.
குழந்தை கிருஷ்ணன் வளர வளர அவனுடைய விஷமங்களும் வளர்ந்து வந்தன.
பாத்திரங்களில் உள்ள தயிர், பால் முதலியவற்றைக் கவிழ்த்து விடுவான்.
அவனுக்கு வெண்யிணையில் பிரியம் அதிகம். தயிர் பானையில் கைையவிட்டு அளைவான். மேலெல்லாம் பூசிக்கொள்வான்.
அவனுக்கு வெண்ணையை கொடுத்து மகிழ்வார்கள். அவனும் விருப்பமாய் வாங்கி உண்பான். கண்ணனுடைய வருகைக்குப் பின்னர் கோகுலத்தில் பால்வளம் பெருகிற்று.
ஒரு நாள் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கிருஷ்ணன் தயிர்ப் பானையில் கையை விட்டு வெண்ணையை வாரினான்.
தயிர் கடைய ஒட்டாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
யசோதைக்குப் பெரும் கோபம் வந்தது. ஒரு கயிற்றை எடுத்து குழந்தையின் இடுப்பில் கட்டினாள். கயிற்றின் மறு முனையை ஓர் உரலுடன் சேர்த்துக் கட்டினாள்.
யசோதை உள்ளே சென்றதும் குழந்தை உரலை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போனான்.
குபேரனுடைய மக்களாகிய நளகூபரனும் மணிக்கிரீவனும் நாரதர் சாபத்தால் மருதமரமாகி, தோட்டத்தில் இருந்தனர்.
பகவானுடைய அனுக்கிரகத்தால் அவர்கள் பழைய உருவைப் பெறுவார்கள் என்று முனிவர் சாப விமோசனமும் அளித்திருந்தார்.
அந்த நாளை எதிர்நோக்கியிருந்தார்கள் அவர்கள்.
குழந்தை மெதுவாக அந்த மருத மரங்களை நோக்கிச் சென்றான்.
அவற்றின் இடையே நுழைந்து அப்பால் சென்றபோது உரல் மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
கிருஷ்ணன் முயன்று இழுத்த போது மரங்கள் இரண்டும் வேரோடு சாய்ந்து போயின.
சாபம் நீங்கபெற்ற நளகூபரனும் மணிக்கிரீவனும் தேஜோ மயமாய் வெளிப்பட்டனர்.
பகவானைப் பணிந்து விடைபெற்று வாண்வெளியில் மறைந்தனர்.
- எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன.
- என்னைச் சரணாகதி அடைந்துவிடு.
ஸ்ரீ கிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்,
"உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு.
அவமானத்தைத் தாங்கிக் கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாக கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய்.
எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு.
எனக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய். பற்றுகளில் இருந்து விலகி விடு.
தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு!"
- பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.
- வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் அத்தி வரதர் கோவிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.
தீர்த்தவாரி உற்சவத்தை யொட்டி வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், துளசி, உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.
வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வரதராஜ பெருமாளை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சன்னதி வீதி, நான்கு மாடவீதியில் வீதி உலா வந்தனர். தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு திரளான பக்தர்கள் வழியெங்கும் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதைதொடர்ந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு அருகே எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.
- அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது.
பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது.
அவரது புல்லாங்குழலில் இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சியுண்டாக்கும்படி செய்தது.
கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும்.
கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பு நிறைத்து விடும்.
தெய்வீகமான அப்புல்லாங்குழலில் இருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.
அது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும்.
அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை.
யாரொருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.
குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது.
அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது.
ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன.
அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்புணர்வு பெற்றது.
அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை.
- இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
- கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.
வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.
ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.
அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.
'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவானின்றன வும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'
கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.






