என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் மூலவர்
- கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.
- அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.
அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
திருவருள் பெருகும் கண்களுடன் காட்சி தரும் பாலசுப்பிரமணியரை வணங்கிப்பின் வெளியே வருகையில், இடப்புறம் காசி விஸ்வநாதப் பெருமானின் சன்னிதி உள்ளது.
அதற்கு அருகே பதினாறுகால் மண்டபத்தின் வடபுறம் விசாலாட்சி அம்பாள், சுப்பிரமணியர், சண்முகர், நடராஜர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
தெற்குப் பிராகாரத்தில் சுவாமிக்கு நிவேதனப் பொருட்களைத் தயாரிக்கும் மடப்பள்ளியும், அடுத்து திருக்கோவில் அலுவலகமும், அதனையொட்டி கல்யாண மண்டபமும் உள்ளன.
மேற்குப் பிராகாரத்தில் வாகனக் கிடங்கும், அதனையடுத்து உக்ராண அறையும் உள்ளன.
கோவிலின் வடகிழக்கு மூலையில் யாகசாலை மண்டபமும், அடுத்து நவக்கிரக சன்னதியும், அதற்கு வெளியே சம்வர்த்தன லிங்கமும் உள்ளன.
Next Story






