என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பால் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
- கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.
- நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.
ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியரை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதற்கென தனி வழிபாட்டு முறை உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தினத்தன்று இரவு குழந்தை பாக்கியம் பெற விரும்பும் பெண்கள் ஆண்டார் குப்பம் தலத்தில் தங்கி வழிபாடு செய்யவேண்டும்.
மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மூன்று கிருத்திகை நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்து வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.
நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.
Next Story






