என் மலர்
ஆன்மிகம்
- 18 நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்.
- 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு மாறுநாள் ஆடி 19-ம்நாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஆடி மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 நாட்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் ஆடி 19-ல் நேர்த்தி க்கடன் செலுத்துவார்கள்.
அதன்படி இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணியில் இருந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.
தொடர்ந்து கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்தார். இதையடுத்து மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாதணி மீது நின்று பூசாரி கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார், இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு தரிசித்தனர், இந்த தேங்காய் உடைக்கும் போது 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி.க்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,
கரூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இதை காண சென்னை, கோவை, திருச்சி, பெங்க ளூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
- ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.
- வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூச நட்சத்திர தினத்தையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.
ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.
- இன்று ஆடி அமாவாசை.
- சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமி பெருந்திருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-19 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை மாலை 5.32 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 2.55 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. வத்ராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமி பெருந்திருவிழா. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-பரிவு
சிம்மம்-பரிசு
கன்னி-ஓய்வு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-நன்மை
தனுசு- செலவு
மகரம்-அமைதி
கும்பம்-வரவு
மீனம்-சாதனை
- குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
- தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.
- நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
இன்று ஆடி 18, ஆடி பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ஆடி மாதம் 18ம் தேதி ஆடி பெருக்கு என்று நம் முன்னோர்கள் கருதி இந்த நாளை புனித நாளாக கருதி விவசாய பணிகள் தொடங்குவது, வீடுகள் கட்டுமான பணிக்கு நாள் செய்வது என செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- இன்று ஆடிப்பெருக்கு.
- திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-18 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று போதாயன அமாவாசை. ஆடிப்பதினெட்டு. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஐந்து கருட சேவை. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், இரவு பாலகுதிரை வாகனத்திலும் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பக்தி
மிதுனம்-உண்மை
கடகம்-சுகம்
சிம்மம்-பாராட்டு
கன்னி-உழைப்பு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- அமைதி
மகரம்-ஆதரவு
கும்பம்-விவேகம்
மீனம்-அன்பு
- பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
- கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எல்லா சிவன் கோவில்களில் காணப்படும் நெறிமுறைகள் இங்கு இருக்கிறது.
மாசி மகப் பெருவிழா அன்று ஏகாம்பரேஸ்வரர் உத்சவர் மகாமகக் குளத்திற்கு எழுந்தருளுகிறார்.
இக்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது.
கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.
அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.
அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது.
மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.
- இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.
- சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.
சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
முன்னொரு காலத்தில் ஏராளமான இயற்கை வளம் பொருத்தி செழிப்பாக விளங்கியது.
மாளிகை, கோட்டைச்சுவர் என்றெல்லாம் இந்த ஊரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.
இங்குள்ள சிவபெருமானுடைய கோவிலைச் சுற்றி மிக பலமான கோட்டை கட்டப்பட்டிருந்ததால் கோட்டைச் சிவன் கோவில் என்று வழங்கப்பட்டு வருகிறது.
அமிர்த கலசத்தின் நடுப்பகுதி இங்கு தங்கியதால் கலயநல்லூர் என்ற பெயர் முதலில் ஏற்பட்டது.
இந்த இடத்தில் பிரம்ம தேவர் தவம் இருந்து சிவபெருமானே வழிபட்டு வந்ததால் இந்த ஸ்தலத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு.
உமையவளே இங்கு வந்து கடுந்தவம் புரிந்து உயிர்களைக் காக்க முயற்சித்ததோடு சிவபெருமானையும் விரும்பி அமர்ந்த இடம் என்று தனிச்சிறப்பும் பெற்றது.
இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.
இங்குள்ள தீர்த்தத்திற்கு நால்வகைத் தீர்த்தம் என்று பெயர்.
- இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.
- அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.
இந்த அழகிய திருக்கோவில் கும்பகோணம் ரயில் சந்திப்பிலிருந்து வடமேற்கில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
மகா பிரளயத்தின் பொழுது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் உடைக்க எண்ணியபொழுது இந்த இடத்தில் நின்று கொண்டுதான் கும்பத்தின் மீது பாணம் தொடுத்தார்.
பாணம் தொடுத்த இடமாதலால் இந்த இடத்திற்கு பாணாத்துறை என்றும், இறைவன் பாணபுரீஸ்வரர் என்றும், அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
புராணத்தில் கூறப்படும் கோவில்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான கோவில் என்றும் சொல்லலாம்.
உலக அழிவை, பிரளயத்தை இங்கு இருந்துதான் சிவபெருமான் தடுத்தார் என்பதால் உன்னதமான தலம்.
இத்தலத்தில் மூன்று கால்கள் உடைய சிவபெருமானின் திரு உருவம் காணப்படுகிறது.
பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவில்தான் காட்சியளிப்பார்.
இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.
அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.
சூரசேனனின் மனைவி காந்திமதியும் இங்கு வந்து தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றார்.
காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய வியாசருக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான் பொய் உரைத்து நிறைய பாவத்தைப் பெற்ற நீங்கள், காசியில் இங்கு வந்து என்னை வணங்கினால் உங்கள் பாவம் கழியாது.
எனவே கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகக் குளத்தில் மாசிமகத்தன்று நீராடி அப்படியே பாணபுரீஸ்வரம் சென்று அங்கு எம்மை பூஜித்தால் யாம் அங்கு வந்து உமது சாபத்தை விமோசனம் செய்வோம் என்று சொன்னதால் வியாசபெருமான் இங்கு வந்து சாபவிமோசனம் பெற்றார்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானை மானசீகமாக வழிபட்டால், ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.
பிரளயம் முடிந்து முதலில் தோன்றிய சிவன் கோவில் என்பதால் மற்ற எந்தக் கோவில்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், அந்தஸ்து இந்தக் கோவிலுக்கு அதிகமாகவே உண்டு.
- இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
- இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.
ஆந்திராவில் சித்தூருக்குப் பக்கத்தில், திருப்பதி செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களுக்கெல்லாம் இறைவன் தானே அருள்பாலிக்கும் வகையில் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் காவிரி நதியின் தெற்கு பக்கத்தில் காளஹஸ்தீஸ்வரராக திருக்கோவில் கொண்டிருக்கிறார்.
இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயு சேத்திரம் என்று அழைக்கப்படும் காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.
யாருக்கு வெகு நாட்களாக கடுமையான ஜுரம் அடிக்கிறதோ என்ன மருந்து, மாத்திரை கொடுத்தாலும் நிற்கவில்லையோ, டாக்டர்களாலும் கைவிடப்பட்டாலும் பரவாயில்லை.
அவர்களை சேர்ந்தவர்கள் இந்த சன்னதிக்கு வந்து சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசியால் சாதம் செய்து நிவேதனம் செய்து, மிளகு ரசம், பருப்புத் துவையல் மற்றும் ஜுரகேஸ்வரருக்கு நைவேத்தியமாக செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.
இது இன்று வரை நடக்கின்ற அதிசயம்.
- அற்புதமான சிவஸ்தலம். அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.
- மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.
அற்புதமான சிவஸ்தலம். அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.
மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.
ஒரு சமயம் ஹேரண்ட முனிவர் காவிரியில் மூழ்கி இந்த தலத்தில் வெளியே வந்தார்.
இன்னொரு சமயம் திருவலம் சுழியிலுள்ள காவிரி படுகைக்குள் இறங்கி, மறைந்து போனவர், இந்த கோடீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்து நின்று தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு அத்தாட்சியாக கொண்ட முனிவரின் திரு உருவம் இந்தத் திருக்கோவிலில் அமைந்திருக்கிறது.
முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இருந்ததால் இந்த ஊருக்கு கொட்டையூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சோழ மன்னன் ஒருவன் தன் மீது கொண்ட அளவற்ற பக்தியைக் கண்டு இறைவன் கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்த ஸ்தலம் என்று பெருமைப்பட்ட ஸ்தலம்.
இதனால் இன்றைக்கு கோடீஸ்வரம் என்று பெயர் வழங்கி வருகிறது.
- மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.
- ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.
மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.
ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.
தஞ்சை, பழையாறைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தைதான் பொற்காசுகளை அடிக்கும் நிலையமாக வைத்திருந்தார்கள்.
அதனால் இந்த சுவாமிக்கு கம்பட்ட விஸ்வநாத ஸ்வாமி என்று முதலில் பெயர் ஏற்பட்டது.
உதயகிரி என்னுமிடத்தில் குடிகொண்டிருந்த மாதவர் என்பவர் சிவபெருமானை தரிசனம் செய்யும் பொருட்டு, தன் புதல்வன் தூம கேதுவுடன் இங்கு வந்தார்.
அப்போது இந்த இடம் மாலதி வனமாக இருந்தது.
இருப்பினும் அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் தூமகேது மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை வணங்கி மாலதி வனத்தில் குடியேறினார்.






