search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபெருமான்பார்வதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.
    • கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில்.

    கும்பகோணத்திற்குள் இருக்கும் இந்த கோவிலைப் பற்றி புராணங்களில் அங்கங்கே லேசாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    எல்லா சிவன் கோவில்களில் காணப்படும் நெறிமுறைகள் இங்கு இருக்கிறது.

    மாசி மகப் பெருவிழா அன்று ஏகாம்பரேஸ்வரர் உத்சவர் மகாமகக் குளத்திற்கு எழுந்தருளுகிறார்.

    இக்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது.

    கோவிலில் உள்ள ராஜகோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.

    அலங்கார நாயகன் ஏகாம்பரேஸ்வரர் நான்கு கரங்களுடன் நின்ற வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

    அம்மன் சன்னதியின் இரு புறமும் அழகுற தீட்டப்பட்டுள்ள காயத்ரிதேவியின் திருவுருவமும், காமாட்சியம்மனின் ஓவியமும் அழகின் அற்புதமாகக் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது.

    மகாமண்டபத்தின் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அபயம், வரதம், அங்குசம், கதை, நாகாஸ்திரம், பாசம், எச்சரிக்கை ஆகிய கரங்களுடன் எழுந்தருளி தெய்வீகக்கலை அழகுடனும் சிம்ம வாகனத்தில் துவாரபாலகியர் வாசலை அலங்கரிக்க கொலு வீற்றிருக்கிறார் காமாட்சியம்மன்.

    • ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த ஆலயம் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
    • அந்த தகவல்கள் ஒவ்வொன்றும் ஈசனின் சிறப்பையும், தலப்பெருமையும் நமக்கு உணர்த்துகின்றன.

    சிவபெருமான் திருவதிகையில் முப்புரத்தை எரித்ததைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் நடந்தன.

    அந்த நிகழ்வுகள் தமிழ் நாட்டில் தோன்றி சிவாலயங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள ஆலயம் காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது.

    ரகசிய தகவல்களின் பெட்டகமாக உள்ள இந்த ஆலயம் பல்வேறு உண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

    அந்த தகவல்கள் ஒவ்வொன்றும் ஈசனின் சிறப்பையும், தலப்பெருமையும் நமக்கு உணர்த்துகின்றன.

    இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைத்து விட்டு வருகிறார்களோ... அவர்கள் வாழ்வில் ஈசன் நிகரற்ற ஒளியேற்றி ஓங்கச் செய்வார் என்பது நிச்சயமானது.

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க

    அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவண பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க,

    ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி "உங்களுக்கு மங்களம் உணடாகுக.

    உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தை சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாகு"

    என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும்,

    அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    • மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
    • இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.

    மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.

    இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.

    இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,

    சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.

    ×