என் மலர்
ஆன்மிகம்
- திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
- இன்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் மலைமேல் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. முருக பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகபெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மாலை 4.45 மணிக்கு முருகபெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி 6-வது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
- இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம்.
- ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-22 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி இரவு 8.22 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.37 மணி வரை. பிறகு திருவோணம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். குமார வயலூர், திருச்செந்தூர், மதுரை சமீபம் சோலைமலை தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம். சிக்கல் ஸ்ரீசிங்கார வேலவருக்கு காலையில் சூர்னோற்சவம். திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் சந்திர பிரபையில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-தாமதம்
சிம்மம்-நலம்
கன்னி-நன்மை
துலாம்- நட்பு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- மேன்மை
மகரம்-உறுதி
கும்பம்-புகழ்
மீனம்-இன்பம்
- ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது.
- இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது. இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள்.
அவரை நினைப்பதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.
வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.
ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.
ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு விரத வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.
ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.
புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர விரத பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.
ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விஷேசம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.
கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.
மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.
தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.
மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி விரதமிருந்து பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.
பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.
- ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
• சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.
• வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
• ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
• ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும் தேய்பிறை ஏகாதசி ஏகாதசி யோகினி என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகராக பலன்கள் கிடைக்கப்பெறும்.
• ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
• புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா என்றும் தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமைவளரும்.
- வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
- 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ‘ஸ்ரீசொர்ணஹர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
செல்வங்களை அதிகரிக்க ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.
அஷ்டமியில் அஷ்ட லட்சுமிகள் தங்கள் செல்வங்களை அதிகப்படுத்தி கொள்ள ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது.
நாமும் ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.
வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை 'ஸ்ரீசொர்ணஹர்சன பைரவாய நமஹ' என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
சொர்ணஹர்சன பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில் நடந்து வருகிறது.
- வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும்.
- இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.
விநாயகருக்கு உகந்த இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனுஷ்டிக்க வேண்டும்.
விரதத்தைத் தொடங்கும்போதே எத்தனை வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும் என்பதை சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.
அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
பூஜையறையில் கலச ஸ்தாபனம் செய்து, அந்தக் கலசத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பின்னர் கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது. இரவு படுக்கப்போவதற்கு முன்பு சிறிதளவு பழமும் பாலும் உண்ணலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும்.
இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
- எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வகை விரத வழிபாடு உள்ளது.
பெரும்பாலான விரதங்கள் நாள், திதி மற்றும் பண்டிகைகளை பின்பற்றியே வருகின்றன.
அந்த நாட்களில் விரதம் இருந்து சாமியை கும்பிடுவதால் பக்தர்களுக்கு திருப்தி உண்டாகிறது.
சரி.... நாம் இருக்கும் விரதம் சரியான விரதம்தானா? இந்த கேள்விக்கு விடை காண முயன்றால் விரதம் பற்றிய சரியான புரிதல் நமக்கு ஏற்படும்.
யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.
எந்தெந்த பண்டிகை நாட்களில் நாம் விரதம் இருக்க வேண்டும் என்பது தெரியவரும்.
இதன் தொடர்ச்சியாக விரதம் இருக்கும் போது கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் எவை&எவை என்பதும் தெரியும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
இந்து மத பண்டிகை நாட்களில், அடிக்கடி விரதம் இருக்கும் போது, நம்மையும் அறியாமல் நாம் நம் உடம்பை மேம்படுத்திக் கொள்கிறோம்.
எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள்.
அதற்கு உதவும் வகையில் எந்தெந்த பண்டிகை நாட்களில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்ற குறிப்பை உங்களுக்காக மாலைமலர் தொகுத்து வழங்கியுள்ளது.
விரதம் இருங்கள்... வினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது வரையறுத்து கூறப்பட்டுள்ளது.
- குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விரதம் இருப்பதை தவறாமல் கடைபிடிக்கிறார்கள்.
இறை வழிபாட்டில் எத்தனையோ ரகசியங்களும், நுணுக்கங்களும் உள்ளன.
இறைவனோடு இரண்டற கலக்க வேண்டும் என்பதையே எல்லா வழிபாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன என்றாலும் இம்மையில் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இறைவனிடம் வேண்ட தவறுவதில்லை.
இறைவனிடம் எல்லாவற்றையும் உரிமையோடு கேட்ட ஆதிகாலத்து மக்களின் பழக்கம், நாளடைவில் பல்வேறு வடிவங்களாக மாறியது.
அதில் ஒன்றுதான் எதுவும் சாப்பிடாமல், பட்டினி இருந்து, உண்ணாவிரதம் மேற்கொள்வது.
ஆரோக்கிய வாழ்க்கைக்கு விரதம் அவசியமானது என்ற அறிவியல் உண்மை உறுதிபடுத்தப்பட்ட பிறகு அது ஆன்மீகத்தில் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விட்டது.
இன்று உண்ணா நோன்பு இருப்பது என்பது உலகில் எல்லா மதத்திலும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.
குறிப்பாக இந்து மதத்தில் விரதம் இருப்பது அதிகமாக உள்ளது. நாள் விரதம், வார விரதம், மாத விரதம் என்று இந்து மதத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் விரதம் உள்ளது.
இந்த விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது வரையறுத்து கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உண்ணாவிரதம் இருந்து இறைவழிபாடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விரதம் இருப்பதை தவறாமல் கடைபிடிக்கிறார்கள்.
விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது நிச்சயமாக தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.
- தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
- தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
வேங்கிக்கால்:
நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.
வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
- பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்.
- ரூ1.57 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள்.

பத்மநாபசுவாமி கோவிலுக்கு கட்டிடங்கள், சிறப்பு பூஜைகள், யானை ஊர்வலத்துக்கான வாடகை, படங்கள்-உடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை என பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. அவற்றில் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்.
ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ1.57கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டப்படாமல் இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்டவேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த நிலுவை தொகையை கோவில் நிர்வாகம் செலுத்தாமல் இருந்திருக்கிறது.
ஆகவே நிலுவையாக உள்ள ரூ1.57 கோடியை உடனடியாக செலுத்துமாறு பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு ஜி.எஸ்.டி. துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் விலக்கு உள்ள பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவில் அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளனர்.
- ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.
- 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடை முறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், பம்பைக்கு வந்து செல்ல ஆன்லைன் மூலமாகவே பஸ் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும்.
கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தலைமையில் நடந்த முன்னேற்காடு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மந்திரி கணேஷ்குமார் கூறி யிருப்பதாவது:-
சபரிமலைக்கு யாத்திரை வரும் 40 பேர் கொண்ட குழுக்கள் 10 நாட்களுக்கு முன்னதாக பஸ் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே 220 பஸ்கள் அரை நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.
- தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள்
சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள்.
ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப்பெருமான்.

அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்த திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.
வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?
இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் முருகனை போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னி ரண்டு விழிகளும் பன்னி ரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக் காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், ரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
நோய்களை எடுத்துக் கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.






