என் மலர்
அமெரிக்கா
- தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானை தாக்குவது கடினமாகும்.
- தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும்.
தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
தைவானின் பெரும்பகுதி மலைப்பாங்கான தீவு ஆகும். எனவே தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானை தாக்குவது கடினமாகும். இதில் சீனர்களுக்கு அதிக ஆபத்தும் இருக்கும். தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும். தைவானை சீனா தாக்கினால் அது உக்ரைனில், ரஷியா செய்ததை போன்று ஒரு தவறான பாதையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன்.
- பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது.
இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் அதிபர் ஜோபைட னின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற 218 இடங்கள் தேவை.
பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது. இதில் குடியரசு கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
இந்தநிலையில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியது. அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 211 இடங்களை கைப்பற்றியது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வெல்லும் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து குடியரசு கட்சிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, "குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு அதன் தலைவர் கெவின் மெக்கார்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன். ஜனநாயக கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் என யாராக இருந்தாலும் அவர்கள் என்னுடன் இணைந்து பணிபுரிய ஆவலுடன் இருப்பின், யாருடன் வேண்டுமானாலும் பணிபுரிவேன்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்க்கிங் செய்ய இடத்தை தேர்வு செய்வதற்காக காரை நிறுத்தியபோது தாக்குதல்
- இந்த சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் பிரபல நடிகையும் முன்னாள் மாடல் அழகியுமான டெனிஸ் ரிச்சர்ட்ஸ் தனது கணவர் ஆரோன் பைப்பர்சுடன் காரில் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அவர்கள் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு சாலையோரம் காரை பார்க்கிங் செய்யும் இடத்தை தேர்வு செய்வதற்காக காரை நிறுத்தியிருக்கிறார்கள். அப்போது பின்னால் நின்றிருந்த காரில் இருந்த நபர், எரிச்சலைந்து கத்தத் தொடங்கினார். அத்துடன் நடிகையின் காருக்கு முன்னால் தனது காரை கொண்டு வர முயற்சித்துள்ளார். அப்போது நடிகையின் கணவர் ஆரோன், வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.
எனினும் ஆத்திரத்தில் அந்த நபர் துப்பாக்கியால் நடிகையின் காரை நோக்கி சுட்டுள்ளார். இதில் காரில் குண்டு துளைத்தது. காருக்குள் இருந்த நடிகையும், அவரது கணவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.
- விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது.
முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் தேதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 16ம் தேதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது.
அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இந்திய நேரப்படி இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.
நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது.
விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.
- டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார்.
- கடந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நவம்பர் 15-ந்தேதி (நேற்று) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார்.
டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது என்றார்.
டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
- அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விர்ஜீனியா:
அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர் என விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.
சந்தேகிக்கப்படும் குற்றவாளியான அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு, தேடி வருகின்றனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இதுவாகும்.
- முதல் முறையாக ஜனாதிபதி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நோமியின் (வயது28). திருமணம் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் சனிக்கிழமை நடக்கிறது.
ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹிண்டரின் மகள் நோமியும், பீட்டர் நீலும் (25) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். வெள்ளை மாளிகையில் நடைபெறும் 19-வது வரலாற்று திருமணம் இதுவாகும்.
பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இதுவாகும். ஜனாதிபதி மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. முதல் முறையாக ஜனாதிபதி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.
- முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
- பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.
திவாலாகி கொண்டு இருக்கும் நிறுவனத்தை சீரமைக்க அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக 3,788 பேர் வேலை இழந்தனர்.
இந்த நிலையில் மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், பொறியியல் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- இனி, 800 கோடியில் ஒருவர் நாம்.
- நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.
நியூயார்க் :
நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.
ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்!
பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம்.
பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்...
'நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது' என்கிறார்.
அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது...
'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார்.
2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
- பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது.
- நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபைகளுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது. ஜனநாயக கட்சி 204 இடங்களை பெற்றது.
சென்ட் சபையை அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அக்கட்சி 50 இடங்களை பெற்றுள்ளது. குடியரசு கட்சி வசம் 48 இடங்கள் உள்ளன. இரு கட்சிகள் இடையே கடும் இழுபறி நிலவிய நிலையில் நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.
- விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
- 2ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன.
இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, நடுவானில் திடீரென மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்ற சிறிய விமானம் மோதி உள்ளது.
இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின. தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்வையாளர்களாக இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர்.
விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து விமான படையை சேர்ந்த பெண் செய்தி தொடர்பாளர் லீ பிளாக், ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "போயிங் ரக விமானத்தில் 5 பேர் மற்றும் சிறிய விமானத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பயணித்து உள்ளனர் என நம்பப்படுகிறது என கூறியுள்ளார். இதனால், இந்த 2ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும்" என அஞ்சப்படுகிறது.
விமான விபத்து வீடியோக்கள் மனது நொறுங்கும் வகையில் உள்ளன. நமது குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், அதுபற்றிய கல்வியறிவை புகட்டுவதற்காகவும் விண்ணுக்கு பறந்து சென்றவர்களின் ஆன்மாவுக்காக வேண்டி கொள்ளுங்கள் என மேயர் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
- உக்ரைன் ரஷியா போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
- போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.
வாஷிங்டன் :
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷியா தன்வசப்படுத்தியுள்ளது.
ஆனாலும் உக்ரைன் ராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,238 கோடி) மதிப்புடைய ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்தார்.
புதிதாக வழங்கப்படும் இந்த ராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ரஷியாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் 1 லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா-தென்கொரியா அரசுகள் சிலகாலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






