என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாசா சமீபத்தில் ஒரு அரிய நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
    • கோள்கள் அணிவகுப்பு என்பது ஒரு வானியல் அபூர்வ நிகழ்வு ஆகும்.

    அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா ஒவ்வொரு நாளும் வானியல் தொடர்பாக புதிய படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாசா சமீபத்தில் ஒரு அரிய நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

    அதில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ஒரே நேரத்தில் பூமியில் இருந்து தெரிந்தது. 'பிளானட் பரேட்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற கோள்கள் அணிவகுப்பு என்பது ஒரு வானியல் அபூர்வ நிகழ்வு ஆகும்.

    இந்த நிகழ்வின் போது வெறும் கண்ணாலேயே வானத்தில் பல கிரகங்களையும், காணமுடிகிறது. இந்த காட்சியை நாசா கடந்த 2-ந் தேதி வானியல் படமாக வெளியிட்டுள்ளது. அதில் சூரிய அஸ்தனமத்திற்கு பிறகு கிரக அணிவகுப்பு என்ற தலைப்பில் உள்ள அந்த படத்தில் வியாழன், செவ்வாய், வீனஸ், சனி மற்றும் புதன் போன்ற பல கிரகங்கள் மாலை நேரத்தில் ஊதா நிற வானத்திற்கு எதிரில் பிரகாசிப்பதை காணமுடிகிறது.

    செவ்வாய், யுரேனஸ், வியாழன், நெப்டியூன், சனி, புதன் மற்றும் வீனஸ் என சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    வானியலாளரும், புகைப்படகலைஞருமான டங்க் டெசல் எடுத்த இந்த படத்தில் சில பிரகாசமான நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

    • சாலையில் அதிவேகத்தில் வந்த மினிவேன் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.
    • படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த மினிவேன் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அதை தொடர்ந்து மினி வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மினிவேன் மீது மோதியது.

    இவ்வாறு அடுத்தடுத்து நடந்த மோதலில் 3 வாகனங்களில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இந்த தொடர் விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ரெயில் வருவதற்குள் ஒரு நபர் குழந்தையை பாதுகாப்பாக இழுத்து பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • குழந்தையை தள்ளிவிட்ட பெண் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தன் தாயுடன் நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை பின்னால் இருந்த ஒரு பெண், ஈவு இரக்கமின்றி தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவை மல்ட்னோமா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலக இணையதளத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

    தாக்குதல் நடத்திய பெண், 32 வயது நிரம்பிய பிரியன்னா லேஸ் வொர்க்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் குழந்தையை தள்ளிவிட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.

    பிளாட்பாரத்தில் நின்றிருந்த மற்றவர்கள் இதைப் பார்த்து பதறிப்போனார்கள். உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, தண்டவாளத்தில் இருந்து குழந்தையை தூக்க ஓடினர். ரெயில் வருவதற்குள் ஒரு நபர் குழந்தையை பாதுகாப்பாக இழுத்து பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றார். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்ததில் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

    இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இந்த கொடூரமான செயலுக்கு மன்னிப்பே கிடையாது, அந்த பெண் ஏன் அப்படிச் செய்தார்? என்று புரியவில்லை என ஒரு பயணி குறிப்பிட்டார்.

    குழந்தையை தள்ளிவிட்ட பெண் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்காமல் அவரை காவலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இந்த பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழையால் ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பனிப்புயலை தொடர்ந்து தற்போது பெய்யும் மழை அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது.

    • சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழை கொண்டு வரவேண்டும்.
    • அமெரிக்க குடிமக்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. சீனாவில் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட நிலையில், ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டது போன்ற வீடியோக்களும் வெளிவந்து திடுக்கிட செய்தன.

    தினமும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ளன. கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான தொற்றில்லா சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இதன்படி, சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை வருகிற ஜனவரி 5-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க குடிமக்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் அறிவுறுத்தி உள்ளன.

    இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீன மக்கள் குடியரசில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவில் அதன் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சீனாவிடம் இருந்து, தொற்றியல் மற்றும் வைரசின் மரபணு தொடர் பற்றிய போதிய தகவல்கள் கிடைக்க பெறாமலும், வெளிப்படையற்ற தன்மையாலும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என தெரிவித்து உள்ளது.

    சீனா தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட போவதில்லை என அறிவித்த போதிலும், நாள்தோறும் 9 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர் என்று கசிந்த அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, அமெரிக்கா இந்த முடிவை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
    • போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு காலமானார்.

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    நியூயார்க்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை.

    சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பிரான்ஸ், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் சீனா பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என அறிவித்து உள்ளன.

    தங்கள் நாட்டில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளது. பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    ஆனால் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை, எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கொரோனாவை தடுக்க என்னனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் கொரோனா குறித்து வெளிப்படையான தகவல்களை பகிர வேண்டும் என்றும் சீனாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கூடுதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மீண்டும் சீனாவை வலியுறுத்தி உள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது.
    • விபத்தில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.

    நியூயார்க்:

    கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான பாலைவன பகுதிக்கு சென்றார்.

    தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது. இந்த விபத்தில் சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்தான். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்க் :

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

    இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் நயாகரா நீர்வீழ்ச்சி பனியில் உறைந்தபோது, கனடா நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் பனிஉறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி பார்வையாளர்களை திகைக்க வைத்து நினைவுகூரத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
    • இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நியூயார்க்:

    சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பி.எப்.-7 மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளன. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையடுத்து உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:-

    சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை அடைந்து உள்ளது. சீனாவில் நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தி உள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள கூடியது.

    சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து விளக்கம் அளிக்க அந்நாடு முன்வர வேண்டும். இது குறித்தான விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.

    மருத்துவ பராமரிப்பு அதன் சுகாதார அமைப்பை பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து அளித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாராயண முத்தனா, கோகுல் சேத்தி குடும்பங்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டுகிறார்கள்
    • இதுவரை 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.14 கோடி) திரண்டிருக்கிறதாம்.

    டாலர் தேசமான அமெரிக்கா, பனிப்புயலாலும், பனிப்பொழிவாலும் பனிப்பிரதேசமாக மாறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களும், கனடா மக்களும் இந்த பனிப்புயலால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், அங்கே அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய தம்பதியர், நாராயண முத்தனா (வயது 49), ஹரிதாவுக்கு, 12 மற்றும் 7 வயதில் உள்ள தங்கள் இரு செல்ல மகள்களோடு இன்பச்சுற்றுலா செல்ல ஆசை வந்தது. அதற்கு காரணம் இருந்தது. ஹரிதாவின் பிறந்த நாளை இப்படி வெளியே போய் கொண்டாட வேண்டும் என்று.

    6 பெரியவர்கள், 5 குழந்தைகளைக் கொண்ட 3 குடும்பங்கள் தங்கள் பகுதியில் இருந்து பனிவெளிகளை பார்த்து ரசித்து அனுபவிக்க, கடந்த 26-ந் தேதி காரில் புறப்பட்டார்கள்.

    அங்கே கோகோனினோ கவுண்டிக்கு சென்றார்கள். உறைந்து போன உட்ஸ் கேன்யன் ஏரிக்குச் செல்லவும் ஆசைப்பட்டார்கள். போனார்கள்.

    உறைந்து போன ஏரியைப் பார்த்ததும், நாராயண முத்தனா, ஹரிதா, அவர்களது நண்பர் கோகுல் சேத்தி (47) ஆகியோருக்கு, அதில் நடக்கவும், அதைப் படம்பிடிக்கவும் ஆசை வந்தது.

    அந்த ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியாது, இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கப்போவதில்லை, அடுத்த சில நிமிடங்களில் அது துயரமாக உருவெடுக்கப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க ஒரு நியாயம் இல்லை.

    உறைந்து போன ஏரியில் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்களை அறியாமல் உயிரை உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரி வெப்ப நிலை கொண்ட தண்ணீரில் தவறி விழுந்தார்கள்.

    உடனே மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டார்கள். ஹரிதாதான் முதலில் மீட்கப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்திருந்தார். மறுநாளில்தான் அவரது கணவர் நாராயண முத்தனாவும், கோகுல் சேத்தியும் உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர்.

    இந்த துயரம், இரு குடும்பங்களையும் மீளாத சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவை கண்ணீரும், கம்பலையுமாய் தத்தளிக்கின்றன.

    ஒரே நாளில் நாராயண முத்தனா, ஹரிதா தம்பதியரின் செல்ல மகள்கள், தங்கள் அன்புப்பெற்றோரை இழந்து அனாதையாகி நிர்க்கதியாய் நிற்கிறார்கள்.

    அந்த நாட்டின் சட்டப்படி தற்போது அவர்கள் இருவரும் அரிசோனா மாகாண குழந்தைகள் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அந்தக் குழந்தைகளை அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான கிஷோர் பிட்டாலா தனது பாதுகாப்பில் பெற்று, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்கிற தகவலை அரிசோனா தெலுங்கு சங்கத்தின் தலைவர் வெங்கட் கொம்மினேனி தெரிவித்துள்ளார்.

    அந்தக் குழந்தைகளின் தாத்தா, பாட்டி அதாவது நாராயண முத்தனாவின் பெற்றோர் வெங்கட சுப்பாராவும், வெங்கட ரத்னமும்தான் இனி அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். இவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பாலப்பற்று கிராமத்தில் வாழ்கிறார்கள். இத்தனை நாட்களாய் அமெரிக்காவில் வசித்து வந்த மகனது குடும்பத்துக்காக காத்திருந்தவர்கள், இந்த முறை பேரக்குழந்தைகளுக்காக மட்டுமே கலங்கிய கண்களோடு காத்திருக்கிறார்கள்.

    "அங்கே பனிப்புயல் வீசிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே, எப்படி இருக்கிறாய் என்று கடந்த வாரம்தான் எனது மகன் நாராயண முத்தனாவை செல்போனில் அழைத்துப்பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவா?" என சொல்லிச்சொல்லி மாய்ந்து போகிறார், வெங்கட சுப்பாராவ்.

    நாராயணா முத்தனா, ஹரிதா தம்பதியரோடு பலியான கோகுல் சேத்திக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாராயண முத்தனா, கோகுல் சேத்தி குடும்பங்களுக்கு உதவுவதற்காக 'கோபண்ட்மீ' என்ற பெயரில் நிதி திரட்டுகிறார்கள். நேற்று வரை 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.14 கோடி) திரண்டிருக்கிறதாம்.

    • டுவிட்டரில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் பயனாளர்கள் புகார் அளித்தனர்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கணக்குகள் இயங்கவில்லை.

    வாஷிங்டன்:

    உலகின் முன்னணி தகவல் தொடர்பு வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தினார்.

    எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்பு நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முதல் கட்டமாக ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அடுத்து டுவிட்டர் அலுவலகத்தில் இருக்கைகள் மற்றும் ஓய்வு அறைகள் மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் டுவிட்டர் செயல்பாடு திடீரென முடங்கியது. இதற்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    அதன்பின்பு இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது என எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை டுவிட்டரின் தகவல் பரிமாற்றம் தடைபட்டது. இப்போது 3-வது முறையாக நேற்று மீண்டும் டுவிட்டர் செயல்பாடு முடங்கியது.

    அமெரிக்காவில் நேற்று இரவு முதல் இந்த நிலை ஏற்பட்டது. பல பயன்பாட்டாளர்களின் கணக்குகள் செயல்படவில்லை.

    இது தொடர்பாக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் புகார் அளித்தனர். அதில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் கூறினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் டுவிட்டர் மீண்டும் இயங்க தொடங்கியது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரம் சிலர் டுவிட்டரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டனர்.

    ×