search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் பனியால் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி
    X

    அமெரிக்காவில் பனியால் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி

    • பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்க் :

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

    இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் நயாகரா நீர்வீழ்ச்சி பனியில் உறைந்தபோது, கனடா நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் பனிஉறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி பார்வையாளர்களை திகைக்க வைத்து நினைவுகூரத்தக்கது.

    Next Story
    ×