என் மலர்
உக்ரைன்
- கடந்த வாரம் 1270-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல்.
- கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 24 மணி நேர தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது அதிதீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 1270 டிரோன்கள், 39 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் எல்லையில் சில இடங்களில் (Front Line) ஆயிரம் கி.மீ. அளவிற்கு ஊடுருவ ரஷியா ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதை கடுமையாக தடுத்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டணிகள் மற்றும் முன்னணி அமெரிக்கா பாதுகாப்பு நிறுவனத்துடன் டிரோன்கள் தயாரிக்க உக்ரைன் கடந்த சனிக்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வான் பாதுகாப்பு உயிர்களை காப்பாற்க முக்கியமான விசயம் எனத் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் - ரஷியா இடையே அமைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- ரஷியா நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- இந்தத் தாக்குதலில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்தார்.
- உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.
உக்ரைன் மீது 477 டிரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா இன்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் குறைந்தது ஆறு மாகாணங்களில் பதிவாகியுள்ளன. உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை தளங்கள் சேதமடைந்துள்ளன.
லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
வீடுகள், செர்காசியில், பல மாடி கட்டிடங்கள் மற்றும் ஒரு கல்லூரி சேதமடைந்ததில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் ஒரு பெண் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதலில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்தார். தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், ஏழு வான் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், கடைசி இலக்கைச் சுடும் போது அவரது விமானம் சேதமடைந்து விழுந்து நொறுங்கியதாகவும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த மேற்குலக நாடுகளின் கூடுதல் ஆதரவுக்கு அழைப்பு விடுத்தார்.
- நேற்றிரவு முதல் இன்று காலை வரை டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல்.
- குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்றிரவு முதல் இன்று காலை வரை ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு இடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீவ் நகரை தவிர்த்து செர்னிஹிவ் பிராந்தியத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.
பிலா டிசெர்க்வாவில் உள்ள நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த நகர் கீவில் இருந்து தெற்மேற்கில் 85 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கீவ் மீது ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 23 பேர் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள். கடந்த 4 வருடமாக நடைபெற்று வரும் போரில் இது மிகவும் கொடூரமான தாக்குதல் என் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
கீவ் மீது கடுமையான தாக்குதல் நடத்தி ஒருவாரம் கூட முடியவடையாக நிலையில், தற்போது புதிய தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.
- உக்ரைன்- ரஷியா இடையே இரண்டு முறை நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
- பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை.
உக்ரைன்- ரஷியா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்க உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷியா சம்மதம் தெரிவித்தது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 142 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட ரஷியாவுக்கு உலக நாடுகள் இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
"இந்த தாக்குதல் ரஷியா போர் நிறுத்தத்தை நிராகரித்து, கொலையை தேர்வு செய்கிறது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்துகிறது" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், போரின் உண்மையான இழப்பை உணர ரஷியாவு்ககு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறிய ஆதரவு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.
- கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் காயம் அடைந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்து்ளளார். கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ்:
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, உலகளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேலைநிறுத்தங்கள் எண்ணெய் விலையின் அதிகரிப்புக்கு வழிவகுத்தன, இது எங்களுக்கு எதிர்மறையானது. எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து அதிக வருமானம் கிடைப்பதால் ரஷியர்கள் வலுவடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
- ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது
- இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது
இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.
- நேற்றி இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தாக்குதல்.
- பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்.
ரஷியா நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
479 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் டிரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை டிரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ஷாஹேத் வகை டிரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷியா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரஷியா விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே ரஷியா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
- கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
- உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) ரஷிய படைகள் உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் இந்த தாக்குதலை நடத்தியது. கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
இந்த தாக்குதல்களில் கியேவில் மூன்று தீயணைப்பு வீரர்கள், லுட்ஸ்கில் இரண்டு பொதுமக்கள் மற்றும் செர்னிஹிவில் ஒருவர் இறந்ததை உக்ரைனின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தின. இதன் மூலம் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "இன்று, நாட்டின் பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷியா ஏவிய 400 ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் 80 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.

மேலும், "துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. புதின் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். போரைத் தொடர அவர் நேரத்தை வாங்குகிறார்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
மறுபுறம், உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
- ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
- இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரைலுகி நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்ததாக வியாசெஸ்லாவ் சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். 5 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
6 டிரோன்கள் பிரைலுகி பகுதியில் இன்று அதிகாலை தாக்கியது. இதில் பல குடியிறுப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் கிழக்கு உக்ரைன் நகரான கார்கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை டிரோன் தாக்கியது. இதில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
சில தினங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானங்கள் சேதடைந்தன.
- ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
- 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.
ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.
கண்காட்சியில் ஜெலென்ஸ்கி 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.






