என் மலர்
பிரிட்டன்
- நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் சதமடித்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சதமடித்தார்.
லீட்ஸ்:
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். பிளெண்டல் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் சவுத்தி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் மிரட்டலான பந்து வீச்சில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் அவுட்டாகினர்.
ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், ஓவர்டோன் ஜோடி பொறுப்புடன் ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. பேர்ஸ்டோவ் சதமடித்தார். ஓவர்டோன் அரை சதமடித்தார்.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 130 ரன்னுடனும், ஓவர்டோன் 89 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், வாகர் 2 விக்கெட்டும், சவுத்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் மிட்செல் அரை சதமடித்தார்.
- நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கு மேல் சேர்த்தது.
லீட்ஸ்:
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். வில் யங் 20 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்னும், டேவன் கான்வே 26 ரன்னும், ஹென்றி நிகோலஸ் 19 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி 125 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், பிளெண்டல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்தார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 78 ரன்னும், பிளெண்டல் 45 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் பிராட், ஜாக் லீச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
- நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆம்ஸ்டெல்வீன்:
இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். பாஸ் டி லீட் 56 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஒடோவ் அரை சதமடித்து 50 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4 விக்கெட்டும், பிரிடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பிலிப் சால்ட் 49 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து 30.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 101 ரன்னும், ஜோஸ் பட்லர் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.
- அமெரிக்கா கொடுத்த நெருக்கடி காரணமாக இங்கிலாந்தின் ஈக்வடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே 2019-ல் கைது செய்யப்பட்டார்.
- அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் கையெழுத்திட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
- ஜேமி ஓவர்டன் முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார்.
- 3-வது டெஸ்ட் போட்டியில் கிரேக் ஓவர்டனின் சகோதரர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 23-ந் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் புதுமுக வீரரான ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து வீரர் கிரேக் ஓவர்டனின் சகோதரர் ஆவார். கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
கவுண்டி கிரிக்கெட் போட்டியின் முதல் டிவிசன் தொடரில் அவரது சகோதரர் உள்பட 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் அவரது சிறந்த பந்து வீச்சாக 90 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேமி ஓவர்டன் 3-வது டெஸ்ட் போட்டியில் தனது சகோதரரான கிரேக் ஓவர்டனுடன் இணைந்து விளையாட் உள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம்:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப், ஜோ ரூட்
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
லண்டன்:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு குரங்கு அம்மையால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் 10-ந் தேதி தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மெதுவாக பந்து வீசும் ஒவ்வொரு ஒவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, வீரர்களுக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியை அணி இழக்க நேரிடும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 27-ந் தேதி லீட்ஸில் மைதானத்தில் தொடங்குகிறது.
- நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர்.
- இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் 27-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன், பிளெட்சர் இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளனர். ஜேமிசனுக்கு இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளில் பந்துவீசும்போது காயம் ஏற்பட்டது. அவருக்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என்று பயிற்சியாளர் கூறினார். பிளெட்சருக்கு இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாளில் ஃபீல்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது.
இவர்கள் இருவருக்கும் பதிலாக பிளேயர் டிக்னர், டேன் க்ளீவர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
- அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது. ஒல்லி போப் 145 ரன்னிலும், ஜோ ரூட் 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 284 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 176 ரன்னிலும், ஒல்லி போப் 145 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து 67 ரன்னிலும், விக்கெட் கீப்பர் போக்ஸ் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வில் யங், டேவன் கான்வே, மிட்செல் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். யங் 56 ரன்னும், கான்வே 52 ரன்னும் எடுத்தனர்.
மிட்செல் இறுதிவரை போராடி 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பிராட் 3 விக்கெட், ஆண்டர்சன், மேட்டி பாட்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
- தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக இருந்தார்.
- பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார்.
லண்டன்
இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்.
தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக இருந்தார். அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் ராணி அவர்கள் நேற்று முறியடித்து, உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் அல்லது மகாராணி என்ற சாதனை படைத்த இரண்டாவது நபர் ஆனார். எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத், தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, பிரிட்டனின் மகாராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. 1952ல் நிகழ்ந்த இவரது முடிசூட்டு விழா, உலகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட முதல் பிரம்மாண்ட நிகழ்வு ஆகும்.
பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த நிலையில், அதை முறியடித்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். இவர் பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார்.
மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும், பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவை தவிர பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னராகவும் உள்ளார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும். இவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 பிரிட்டன் பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார். பிரான்ஸ் தேசத்து மன்னர் பதினான்காம் லுாயிஸ், 1643-1715 வரை, 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரசராக இருந்து, இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார்.
- டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.






