என் மலர்
பிரிட்டன்
- உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், இத்தாலி வீரர் சொனேகோவுடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் கிர்கியோசுடன் மோதினார். இதில் 6-7, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ். இதன்மூலம் விம்பிள்டன் தொடரில் இருந்து சிட்சிபாஸ் வெளியேறினார்.
- கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா ஒரே ஓவரில் 29 ரன்கள் எடுத்தார்.
- இதன்மூலம் லாராவின் 19 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்தார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதமடித்து அசத்தினர்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் பும்ரா 83வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83 ஓவரில் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பும்ரா.
பிராட் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' முறையில் 5 ரன்களை பெற்றுத் தந்தது. நோ பாலாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன்கள் விளாசப்பட்டது. பும்ரா மட்டும் 29 ரன் (4,6,4,4,4,6,1) விளாசினார்.
இதன்மூலம் கடந்த 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய லெஜண்ட் வீரர் பிரையன் லாராவின் சாதனையை கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
- சர்வதேச டென்னிசில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 37 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், பிரான்ஸ் வீராங்கனையான அலிஸ் கார்னெட்டுடன் மோதினார்.
இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அலிஸ் கார்னெட் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டென்னிசில் 37 வெற்றிகள் பெற்ற ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
பர்மிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னிலும், ஜாக் கிராலி 9 ரன்னிலும், ஒல்லி போப் 10 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து இன்னிங்சின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுமையுடன் ஆடியது. ஜோ ரூட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார், ஜாக் லீச் டக் அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், சிராஜ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க முன்னணி வீரரான ஜான் இஸ்னர் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சக வீரர் கெக்மனோவிச்சுடன் மோதினார். இதில் 6-0, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். இதில் 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்.
- இந்தியா 2 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
- ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.
பர்மிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 320 ஆக இருந்தபோது ரிஷப் பண்ட் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னில் அவுட்டானார்.
முதல் நாள் முடிவில், இந்திய அணி 73 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஜடேஜா 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 12-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று தொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ரிஷப் பண்ட்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்
இங்கிலாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஜே.பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
- உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளார்.
- முன்னணி வீரரான ஆன்டி முர்ரே 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், லிதுவேனியா வீரர் பெரான்கிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் 5-ம் நிலை கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார். இதில் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.
- ரோகித் சர்மாவுக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
- ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
பர்மிங்காம்:
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது
இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும், 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.
- இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகினார்.
- 126 போட்டிக்கு தலைமை தாங்கி 76-ல் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாக திகழ்ந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், அதன்பின் இங்கிலாந்து அணிக்காக ஆடினார். 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலகக் கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.
சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார்.
248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரைசதம் அடித்துள்ளார்.
இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜாக் லீச் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடர் நாயகன் விருது வென்றனர்.
லீட்ஸ்:
இங்கிலாந்து, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார்.
இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்தன. பேர்ஸ்டோவ் 162 ரன்னும், ஓவர்டோன் 97 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், சவுத்தி 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 105.2 ஓவரில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லாதம் 76 ரன்னும், டேரில் மிட்செல் 56 ரன்னும் எடுத்தனர். டாம் பிளெண்டல் 88 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 3 விக்கெட்டும் அள்ளினர்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. அலெக்ஸ் லீஸ் 9 ரன்னிலும், கிராளே 25 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப்புடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில் ஒல்லி போப் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் அதிரடியில் மிரட்டினார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் பேர்ஸ்டோவ் பவுண்டரி, சிக்சருமாக விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியில், இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 88 ரன்னும், பேர்ஸ்டோவ் 44 பந்தில் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில், 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது.
- நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள்.
லீசெஸ்டர்:
கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அந்நாட்டின் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.
இதில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள். முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிபட்சமாக ஸ்ரீகர் பாரத் 70 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 56 ரன் அடித்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.






