என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காலிறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி செட்டை நூரி கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற நூரி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் நூரி உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    • 5-வது டெஸ்டில் மெதுவாக ஓவர் வீசியதால் இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.

    கடைசி நாளான நேற்று, 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்தி இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

    மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்திய அணி இழக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, ஜான் பீர்ஸ் - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் 4வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், நெதர்லாந்தின் வான் டெ சாண்ட்சல்புடன் மோதினார். இதில் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமாவுடன் மோதினார். இதில் 4-6, 6-4, 7-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ்.

    • பர்மிங்காம் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 203 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

    இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் எடுத்தனர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 146 ரன்னும், 2-வது இன்னிங்சில் 57 ரன்னும் எடுத்துள்ளார். இதன்மூலம் வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார்.

    இதற்கு முன் 1953-ம் ஆண்டு விஜய் மஞ்சரேக்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

    இந்த டெஸ்டில் மொத்தமாக 203 ரன்கள் எடுத்துள்ள ரிஷப் பண்ட், 69 ஆண்டுக்குப் பிறகு இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிசின் 4வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தோல்வி அடைந்தார்.
    • முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ரோமானியா நாட்டின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசாவுடன் மோதினார்.

    இதில், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஹாலெப் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இதில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 2வது இன்னிங்சில் புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் எடுத்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 146 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    132 ரன்கள் முன்னிலை வகித்த இந்தியா, இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ், பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி பொறுப்புடன் ஆடினர். லீஸ் அரை சதமடித்தார்.

    அணியின் எண்ணிக்கை 107 ஆக இருந்தபோது கிராலி 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் டக் அவுட்டானார். தொடர்ந்து லீஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 109 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

    ஆனால் அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. தொடர்ந்து அதிரடியிலும் மிரட்டியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 72 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 119 ரன்கள் தேவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • இந்திய அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    • ரிஷப் பண்ட் 2-வது இன்னிங்சில் 57 ரன்கள் அடித்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்தார்.

    இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து இருந்தது.

    இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து 57 ரன்கள் அடித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பும்ரா 7 ரன்னுடன் வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    இதையடுதது இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற 378 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

    • உலகின் முன்னணி வீரரான ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் ரிஜ்தோவெனுடன் மோதினார். இதில் 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் 6-1, 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், சின்னரை எதிர்கொள்கிறார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்து 106 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 106 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 4 ரன்னில் அவுட்டானார். ஹனுமா விஹாரி 11 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 50 ரன்கள் சேர்த்துள்ளது.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 50 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • எதிர் ஜோடி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது.

    இந்நிலையில், கடைசி கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
    • இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

    இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் பென்ஸ்டோக் 25 ரன்கள் அடித்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் எடுத்தார். போட்ஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.

    எனினும் அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 106 ரன்கள் குவித்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் ,ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் அடித்திருந்தது.

    ×