என் மலர்
பிரிட்டன்
- இந்த போட்டியில் க்ராவ்சிக் மற்றும் ஸ்குப்ஸ்கி கடைசி நிமிடத்தில் ஜோடி சேர்த்து விளையாடினர்.
- இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் ஜோடி தோல்வி அடைந்தது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை டெசிரே க்ராவ்சிக் மற்றும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ எப்டன் மற்றும் சாம் ஸ்டோசர் ஜோடியை எதிர் கொண்டது.
மொத்தம் ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் க்ராவ்சிக்- ஸ்குப்ஸ்கி ஜோடி வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த போட்டியில் அமெரிக்கா வீராங்கனை டெசிரே க்ராவ்சிக்வும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கியும் வேறு வேறு ஜோடிகளுடன் கலந்து கொள்ள இருந்த நிலையில், திடீர் மாற்றமாக கடைசி நிமிடத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து இறுதி போட்டியை எதிர்கொண்டனர். இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அவர்கள் தட்டிச் சென்றனர்.
- முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் ஜோகோவிச் மோதுகிறார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
- இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
- அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கொரோனா பெருந்தொற்றை சரிவர கையாளாதது, கொரோனா காலத்தில் மது விருந்து நடத்தி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணை தலைமை கொறடா மீது தாமதமாக நடவடிக்கை எடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதார மந்திரி சாவித் ஜாவித் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
அவர்களை தொடர்ந்து முக்கிய பதவிகளில் இருந்த பலரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் வேறு வழியில்லாமல் போரிஸ் ஜான்சன் நேற்று கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
அதே நேரம் மற்றொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், தாம் பிரதமர் பதவியில் தொடரப் போவதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அடுத்த வாரம் இது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்படும் என கன்சர்வேடிவ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறி உள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவார்கள் எனவும் அவர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் 2 பேர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னணியில் உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். வடக்கு யோர்க்-ஷயர் தொகுதியில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
அதற்கு முன்னதாக வருவாயை கையாளும் கருவூலக அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய பணிகளால் பிரபலமானார்.
இதேபோல அமைச்சரவை அட்டர்னி ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சூவெல்லா பிரேவர்மேனும் புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இவர்கள் தவிர புதிய நிதி அமைச்சர் நாதிம் ஸஹாவி, வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், உள்துறை அமைச்சருமான பிரீதி படேல் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
- விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
- சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.
இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.
போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.
ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
- புதிய தலைவருக்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.
லண்டன்:
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சமீபத்தில் கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீதான பாலியல் அத்துமீறல் புகாரை போரிஸ் ஜான்சன் முறையாக கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அரசின் மீது அதிருப்தி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 2 நாட்களில் மட்டும் முக்கிய துறைகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன், கட்சியின் தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஏதுவாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன், புதிய தலைவருக்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
ஆளுங்கட்சியான பழமைவாத கட்சியின் மாநாட்டை அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநாட்டின் போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதுவரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார்.
- இங்கிலாந்தின் முக்கிய 4 மந்திரிகள் கடந்த 24 மணி நேரத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
- இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே, இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், அரசு மீதான நம்பிக்கையை இழந்ததால் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான மந்திரி வில் குயின்ஸ் மற்றும் சட்டத்துறை மந்திரியான லாரா டிராட் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பு, ஒரே நாளில் இங்கிலாந்தின் 4 முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா என தொடர் பிரச்சினைகளால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ரிபாகினா அரையிறுதியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- விம்பிள்டன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- அரையிறுதியில் முதல் செட்டை கைப்பற்றிய சானியா ஜோடி அடுத்த இரு செட்டை இழந்து தோல்வி அடைந்தது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- முன்னணி வீரரான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் காலிறுதியில் சிலி வீரர் காரினை தோற்கடித்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் போராடி வென்றார்.
இறுதியில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் காரினுடன் மோதினார். இதில் 6-4, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் கிர்கியோஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் கிர்கியோஸ் முன்னணி வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.
- இங்கிலாந்தின் நிதி மந்திரி மற்றும் சுகாதார மந்திரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
- ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.
லண்டன்:
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே, இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் நதீம் சஹாவி நிதி மந்திரியாகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார மந்திரியாகவும் செயல்படுவார் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
- ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 34 வயதான தட்ஜனா மரியா இரு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார். இதில் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜெர்மனியின் ஜூலி நீமையர், சக வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் மோதினார். இதில் தட்ஜனா மரியா 4-6, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஜெர்மனியின் 34 வயதான தட்ஜனா மரியா இரண்டு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
- இங்கிலாந்தின் நிதித்துறை மந்திரி ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- இதேபோல், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மந்திரியான சஜித் ஜாவிதும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை எனக்கூறி அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.






