என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
    • டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து.

    இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை ஒட்டி மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    ஆனால் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக பாகிஸ்தான் வெளியேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

    பணிச்சுமை அதிகமாக உள்ளதால் கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

    • ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
    • கடத்தப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அம்மாகாணத்தில் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், வெளிமாகாணங்களை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன

    இந்நிலையில், அம்மாகாணத்தின் பஞ்ச்கூர் நகர் குபா இ அபடன் பகுதியில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இங்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 8 கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் அனைவரும் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்

    அதேவேளை, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 20 தொழிலாளர்கயும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த முகமது யூசுப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
    • ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் திடீரென விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தைச் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

    இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

    இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களது முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க முடிவு.
    • தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் அக். 1-ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவன ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பாகிஸ்தான் சர்வதேச விமான நிவறுனம் ஏலம் அடுத்த மாதம் முதல் தேதி இறுதி செய்யப்படும்" என்று தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஃபரூக் சத்தார் குழுவின் அமர்வில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தில் 51% முதல் 100% வரை விற்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பிச்சை எடுக்க நுழைபவர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.

    துபாய்:

    பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்குச் சென்று அங்கு பாகிஸ்தானியர்கள் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இவ்வாறு புனித யாத்திரை பெயரைச் சொல்லி பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.

    மேலும், அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார்.

    இந்நிலையில், புனிதயாத்திரை விசாவின்கீழ் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சவுதி ஹஜ் அமைச்சகம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    மத யாத்திரை என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்கு பிச்சைக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 181 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    முல்தான்:

    தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. முனீபா அலி 45 ரன்னும், நிதா தார் 29 ரன்னும், சித்ரா அமீன் 28 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். பாத்திமா சனா 37 ரன்னும், அலியா ரியாஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் சுனே லூவஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். லாரா 36 ரன்னும், அன்னெக் போஸ் 24 ரன்னும் எடுத்தனர். சுனே லூவஸ் 53 ரன்னும், குளோ 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், தொடரில் 1-1 என்ற சமனிலை பெற்றது.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பதாக பாகிஸ்தான் அரசு மீது குற்றச்சாட்டு

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பலவேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முக்கியமான வழக்குகளில் விடுதலை பெற்ற போதிலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்.

    இந்த நிலையில் தன்னை தொடர்ந்து சிறையில் வைப்பதற்கான அரசியலமைப்பை மாற்ற அரசு முயற்சிக்கிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் அடைப்பதற்கான போதுமானது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022-ம் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இம்ரான் கான் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கவாஜா ஆசிஃப் "பிடிஐ கட்சி நிறுவனர் இம்ரான் கானின் குற்றங்களுக்கான நீண்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றம் தேவைப்படதாது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுடன் மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் நடக்கும் அனைத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்" என்றார்.

    இம்ரான் கான் கைதின்போது, அவரது ஆதரவாளர்கள் ராணுவ அமைப்புகளை தாக்கியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டது.

    • நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
    • சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இஸ்லாபாமாத்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 'தோஷ்கானா' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டு அவரை சிறையில் அடைத்தது. மேலும் அவர் நிறுவிய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சிக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டது.

    சிறையில் உள்ள இம்ரான்கானை விடுக்க வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராட்டத்தை துண்டிவிட்டதாக கூறி இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை கூறியதாக இர்பான் கைது செய்யப்பட்டார்.
    • முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

    சமூக ஊடகங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான், இந்தாண்டு சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்றம் இர்பானுக்கு மரண தண்டனை விதித்ததுடன் இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

    இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதரான முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட பேருந்து விபத்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

    சோப் மாவட்டத்தின் தனா சர் பகுதியில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் இருந்து மாகாண தலைநகர் குவெட்டாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது.
    • கேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

    பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடத்த விபத்து ஒன்றில் தொழிலதிபரின் மனைவி ஓட்டி வந்த சொகுசு SUV கார் மோதி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டுறதுந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடைகளுக்கு பேப்பர் விற்பனை செய்யும் இம்ரான் ஆரிப் மற்றும் அவரது மகள் ஆம்னா என்று பின்னர் தெரியவந்தது. இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து ஏற்படுத்தியதும் காரை பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது காரை விட்டு இறங்கிய அந்த பெண் இரண்டு பேரை கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வு துளியும் இல்லாமல் போலீஸ் நம்மை கைது செய்துவிடும் என்றகேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

    விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நடாஷா பிரபல தொழித்ததுபரின் மனைவியும் ஆவர். விபத்து தொடர்பாக நடாஷாவிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது, நடாஷாவுக்கு மன ரீதியான பிரச்சனை உள்ளதென்றும் கடந்த 2005 முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி முன்னாள் உயிரிழந்த தந்தை மகளின் உறவினர்களும், நடாஷாவின் உறவினர்களும் தோன்றினர். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடாஷாவுக்கு மன்னிப்பு வழங்கியதால் நீதிமன்றம் நடாஷாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடாஷா குடும்பத்திடம் இருந்து [ரத்தம் படிந்த] பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் மன்னிப்பு வழங்கியுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    பாகிஸ்தானில் ஷரியத் சட்டப்படி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டப்பிரிவுக்கு க்விசாஸ் மற்றும் தியாத் என்று பெயர். 

    ×